“மக்கள் ஒரு குறிப்பிட்ட சமூகக் குழுவில் உறுப்பினர்களாகச் செயற்படுகின்ற வகையில் செயல் நோக்கம்இஅறிவுஇமொழிஇபல்வேறு திறன்கள்இவிழுமியங்கள்இவிதிமுறைகள்இவாழ்வின் பல்வேறு நிலைகள் ஆகியவற்றை பெறும் வகையிலான ஒரு செயற்பாடே சமூகமயமாக்கல”; ஆகும் என Emile Durkhem குறிப்பிடுகின்றார்.
சமூகத்தில் உள்ள குழந்தைகளுக்கு வயது வந்தோர் தமது அதிகாரத்தின் மூலம் (எடுத்துக்காட்டாக)ஆசிரியர்கள் கற்பிக்கும் சூழ்நிலைளேய சமூகமயமாக்கல் ஆகும் என Piaget குறிப்பிடுகின்றார்.
“குழந்தை தனது துருவிக் காணும் ஆற்றல் மூலமாகவும் சிறுவர் சிறுமிகளுக்கிடையேயான தொடர்பினாலும் கற்றுக் கொள்ளும் முறையே” ஆகும்.மேலும் “ஒரு தனியாளை அல்லது ஒரு உயிரினை அல்லது ஒரு ஆளை சமூகத்திற்கு ஏற்றவாறு உருவாக்குவது ஆகும்.
“ஒரு குழந்தையானது கருவில் இருந்து தோற்றம் பெறும் போது அது தானாகச் செயற்பட முடியாத நிலையில இன்னொரு உயிரின் உதவியுடன் அவனை வளர்த்துச் சமூகத்திற்கு ஏற்ற விதத்pல் உருவாக்குதல்” சமூகமயமாக்களாகும்.
இச் சமூகமயமாதல் இரு வகைப்படும்
- நுண்நிலை சமூகமயமாக்கல்
- பருநிலை சமூகமயமாக்கல்
இங்கே நுண்நிலை சமூகமயமாக்கல் என்பது சமூக இடைவினை,மூகக் கட்டுப்பாடு போன்ற குவிமையங்களின் ஊடக சமூகமயமாக்கப்படுதலாகும்.
பருநிலை சமூகமயமாதல் என்பது குறித்த சமூகத்தின் பண்பாடு,சமூகக் கட்டமைப்பு ,குழுக்கள்,நிறுவனங்கள் போன்ற மையங்களின் ஊடாக சமூகமயமாதல் ஆகும்.
சமூகமயமாக்கலில் ஈடுபடும் நிறுவனங்களான குடும்பம்,பாடசாலை,தொழில் நிறுவனங்கள்,ஆலயங்கள்,இளைளோர் கூடங்கள் ,வயது அடிப்படைக்குழுக்கள் இஇரகசிய சங்கங்கள் குழுக்கள்(Peer Groups) போன்றவற்றினைக் குறிப்பிடலாம்.
ஒரு தனிநபர் சமூகமயமாக்கப்படும் போது அவற்றைப் பல வகையாகப் பிரிக்கலாம்.
- Primary Socialization –ஆரம்ப சமூகமயமாக்கல்
- Secondary Socialization - - இரண்டாம் நிலைச்சமூகமயமாக்கல்
- Development Socialization – அபிவிருத்தி சமூகமயமாக்கல்
- Re- Socialization – மீள் சமூகமயமாக்கல்
- Victim Socialization – பாதிக்கப்பட்டவர்களுக்கான சமூகமயமாக்கல்
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !