எனது இணைப்பக்கத்துடன் இணைந்து தங்களுடைய கருத்துக்களையும் தெரிவித்துக் கொள்ளுங்கள்
Published Date: July 12, 2014

சமூகப்பணிக்கான சமூகவியல்

இது சமூகப்பணி டிப்ளோமாப் பாடநெறியினைப் பயின்று கொண்டிருக்கும் மாணவர்கள் சமூகவியல் எண்ணக்கருக்கள் பற்றி அறிந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் சமூகக் கட்டமைப்பு இசமூக நிறுவனங்கள்இசமூக வகைப்பாடுகள் போன்றவற்றினை கற்பதன் மூலம் ஒவ்வொரு சமூகங்களிடையேயும் காணப்படும் கலாசாரமானது சமூகம்இசமுதாயம்இதனிநபர் குழுக்களிடையே எவ்வாறு தாக்கம் செலுத்துகிறது என்பதை விபரிக்கும் வகையில் இப்பாடப்பாரப்பானது உருவாக்கப்பட்டுள்ளது.

சமூகம் என்றால் என்ன?
What is Society?

சமூகம் என்பது தனிநபர்களின் கூட்டு”ஆகும்.சமூக இடைவினைகள்இ சமூகச் செயற்பாடுகள்இசமூக உறவுகள்இசமூக ஒழுங்குகள்இசமூகக் கட்டமைப்புஇசமூகக் குழுக்கள்இசமூக நிறுவனங்கள் என்பன இதற்குள் உள்ளடங்குகின்றன.சமூகம்என்பதற்குள்; கலாச்சாரம்இபண்பாடுஇவிழுமியம்இநியமங்கள்இமொழிஇசமயம்இஅரசியல் என்பன முக்கியம் பெறுகின்றது.

ஒரு சமூகத்தில் காணப்படும் இயல்புகள்
  • குறிப்பிட்ட ஒரு சனத்தொகை
  • சனத்தொகை வளர்ச்சி
  • கலாச்சாரம்இபண்பாடுஇமொழி
  • அரசியல் சுதந்திரம்

சமூக இடைவினை 
Social Interaction.


சமூக இடைவினை என்பது ஒருவருக்கு ஒருவர் தொடர்பு கொள்ளும் ஒரு முறையாகும்.இது பற்றி “George Herbert Mead” (1863-1931 ) கருத்துக் கூறும் போது “கீழ் இன விலங்குகளும் மனிதர்களும் சைகைகளின் வழியான உரையாடல்களைக் கொண்டிருப்பினும் மனிதர்கள் மட்டுமே சைககளின் வழி உணர்வு பூர்வமான தொடர்பாடலை மேற்கொள்வர்”.

சமூக இடைவினையின் இயல்புகள்

  • தன்னால் செயற்படுத்தப்படும் ஒரு செயற்பாடு அல்லது பல செயற்பாடுகள் தொடர்பாக தனே தீர்மானங்கள் எடுப்பதற்கு முற்படல்.
  • அந்தந்த தீர்மானங்களை மற்றவர்களுடன் இணைந்து செயற்படுத்தல்.
  • சமூக இடைத் தொடர்பிற்கு ஆகக் குறைந்தது இருவராவது இருக்க வேண்டும்.
  • சமூக அடைவிணையில் ஈடுபடும் குழுக்கள் தம்மைத்தாம் அறிந்து கொள்ள வேண்டும்.
  • இரு குழுக்களிடையில் ஏற்படும் சமூகத் தொடர்புகளுக்கு இடையில் அவர்களின் நடத்தை/நடத்தை முறைகளுடன் தொடர்பு பட்டதாகவிருக்கும்

Karl Marx  இன் கருத்துப்படி நடத்தையானது பொருளாதாரக் கட்டமைப்பினால் உருவாக்கப்படுகின்றது.அதாவது சமூகங்களிடையே தனிநபர்கள் ஒவ்வொருவரும் இன்னொருவருடன் நடந்து கொள்ளும் மனிதநடத்தையே 
 ஆகும்.

TalCot parson இல் மனித நடத்தையானது நியமங்கள்இவிழுமியங்கள் என்பவற்றினால் நெறிப்படுத்தப்பபடுகின்றது எனக் குறிப்பிடுகின்றார்.


சமூகச்செயல்
Social Action

சமூகச்செயல் என்பது புரிந்து கொள்வது அல்லது விளங்கிக் கொள்வது ஆகும்.இது இரு வகைப்படும்.

  1. நேரடி அவதானம் அல்லது உற்று நோக்கல்
  2. அகவயமான அர்த்தத்தைப் புரிந்து கொள்வது

என்ற அடிப்படையில் சமூகவியலாளரான Talcot Parson  இக்கருத்தினை விபரிக்கின்றார்.

இச் சமூகச்செயலை Max Webber  4 வகையாக பிரிக்கின்றார்.
  1. இலக்கினை மையமாக கொண்ட செயல்
  2. விழுமியத்தை மையமாக கொண்ட செயல்
  3. உணர்ச்சியினை மையமாகக் கொண்ட செயல்
  4. மரபு வழியான செயல்

சமூக உறவு
Social Relation

சமூக உறவு என்பது பறவையோ அல்லது விலங்கோ அல்லது மனிதனோ யார்?என்றாலும் அங்கே ஒரு உறவு முறையிருக்கும்.நண்பர்கள்இபெற்றோர்கள்இஅயலவர்கள்இபிள்ளைகள் ஆசிரியர்கள்இதொழிலாளர்கள் என அது வளர்ந்து செல்லும்.இச் சமூக உறவுகள் பற்றி Herbert Spencer (1802-1903) சமூகப்பரிணாம் பற்றிய கொள்கையை முன்வைத்தார்.(சூழலுக்கேற்ப எம்மை மாற்றிக் கொள்ளல் ஆகும்.)இவரது ஙாலான “Study of Sociology”என்ற ஙாலில் குழந்தைப்பருவம் என்ற ஒன்று இருந்தால் பல சமூக உறவுகளின் ஊடாக அங்கே முதிர் பருவம் வரை செல்ல எந்தத் தடையும் இல்லைஇஇவ்வாறு சமூக உறவு வளர்ந்து செல்கின்றது எனக் குறிப்பிடுகின்றார்.

இச் சமூக உறவானது மக்கள் அல்லது பொது மக்களிடையேயான உறவு சிறப்பாக இருந்தால் தான் செயற்பாடுகள் நன்றாக அமையும்.இச் சமூக உறவானது நீண்டகாலமாக இருந்து வந்த ஒன்றாகும்.இச் சமூக உறவில் சமூக நடிபங்குகள் முக்கியம் பெறுகின்றன.விழுமியங்கள்,சமயம்,நியமம்,பண்பாடு என்பன இதில் தாக்கம் செலுத்துகிறன.


சமூக ஒழுங்கு
Social Order

“Comter” சமூக ஒழுங்கிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றார்.ஒரு சமூகத்திற்கு ஒழுங்கு அவசியம் என குறிப்பிடுகின்றார்.ஒழுங்கு இல்லையென்றால் சமுதாயம் குழம்பிவிடும்.சமய,சமூக,பொருளாதார, அரசியல் அமைப்புககள் கூட ஒரு வரையறைக்குள்ளே செயற்பட்டு வருகின்றன.இவர் மனித உடம்புக்கு ஒழுங்கினை ஒப்பிட்டுக் கூறுகின்றார்.அதாவது மனித உடம்பின் ஒரு பகுதி பாதிப்படைந்திருந்தால் அந்த உடம்பே அழிந்து விடும்.அது போல சமூகம் ஒழுங்கில் இருந்து விலகும் என்றால் அது அழிந்து விடும்.

இச் சமூக ஒழுங்கினை Talct Parson இரு வகையாக பிரிக்கின்றார்.

  1. கீழ் நிலையிலிருப்பவை தமக்கு மேலே இருப்பகைவ்கு சக்திகளை வழங்குகின்றன.
  2. உயர் படி நிலையில் உள்ளவை தமக்கு கீழே உள்ளவற்றை கட்டுப்படுத்துகின்றன.

இச்  சமூக ஒழுங்கென்பது சமூக நியம நெறிமுறைகள்இவிதிகளுக் ஏற்ப ஒழுகுதல் வேண்டும்.


சமூகக் கட்டமைப்பு
Social Structure

சமூகக் கட்டமைப்பு என்பது சமூகத்தில் வாழும் மக்கள் கூட்டம் பல்வேறு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ள ஒரு தன்மையாகும்.தொழில்இசாதிஇவகுப்புஇநிறம்இஇடம்இவயதுஇபால்நிலை என்ற தன்மையில் பிரிக்கப்பட்டுள்ளது.
மேலைத்தேய நாடுகளில் 
  • மேல்வர்க்கம்
  • கீழ்வர்க்கம்      என இரு வகையாகப்பிரிக்கப்பட்டுள்ளன.
சமூகக் கட்டமைப்பின் பண்புகள்

  1. இரு நபர்களுக்கிடையில் குறிப்பிட்ட காலப்பகுதியில் அவர்களுக்கிடையேயான செயற்பாடுகளிருக்கும்.
  2. தான் சமூகத்தில் உறுப்பினர் என்ற உணர்வு காணப்படும்.
  3. சமூக உறுப்பினர்களுக்கிடையே நடத்தை மாற்றம் காணப்படும்.
  4. சமூக உறுப்பினர்களால் நிறைவேற்றும் பொது தன்மை காணப்படும்
  5. உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் மனப்பாங்கு மாற்றம் ஏற்படும்.
  6. வெளியில் இருப்பவர்களுக்கு இங்கு ஒரு கட்டமைப்பு உள்ளது என்பதைக் காட்டும்.
  7. அங்கு ஒரு கலாச்சாரம் காணப்படும்.
  8. சமூகத்திற்கு ஏற்ப செயற்படவேண்டும்.
மேலும் சாதி என்பது வேதகாலப்பகுதியிலேயே உருவாக்கப்படடு விட்டது.அதாவது 
  • பிராமணர்
  • சத்திரியர்
  • வைசியர்
  • சூத்தீகர்                                                                                                             என்பனவாகும்.இதில் இருந்தே இன்று இச்சாதி அமைப்பானது கீழ் சாதிஇமேல் சாதிஇஇடைப்பட்ட சாதி போன்ற அமைப்புக்களாக காணப்படுகின்றன.இது இலங்கையில் சிங்களப்பகுதிகளிலும்,மட்டக்களப்பு,யாழ்ப்பாணம் போன்ற தழிழ் பகுதிகளிலும் இன்று இச் சாதி அமைப்பு அமைப்புக்களாக காணப்படுகின்றன.இது தொழிலை மையமாக வைத்தே சாதி அமைப்பு உருவானது.

Karl Marx என்ற சமூகவியலாளர் பொருளாதார காரணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வர்க்கத்தினை முதலாளிஇதொழிலாளி வர்க்கம் எனப் பிரிக்கின்றார்.

Max Webber இன் கருத்துப்படி பொருளாதாரத்தை விட அரசியலுக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றார்.இந்தவகையில் முதலாளிஇதொழிலாளி வர்க்கமாகப் பிரிப்பது போல தென் ஆபிரிக்காவில் நிறத்தின் அடிப்படையில் இனத்தை பிரித்து நோக்குவர்.


சமூக குழுக்கள்
Social Groups

மேலும் இப்பாடப் பரப்பின் ஊடாகச் சமூகக் குழுக்கள் என்றால் என்ன?சமூகங்களுக்கிடையே காணப்படும் சமூகக் குழுக்கள் எவை?அவை அமைப்பு ரீதியானவையா?அல்லது அமைப்பு ரீதியற்றவையா?குழுக்களின் நடத்தை என்ன?என்பது பற்றி ஆராயப்படும்.

குழு என்றால் ஒரு குறித்த இலக்குடன் அவ்விலக்கினை அடையும் நோக்கில் பொளதீக ரீதியிலும் உளவியல் ரீதியிலும் ஒன்றுபட்டு இடைவினை(Interecation)கொள்ளும் தனியன்களின் தொகுதியே குழு ஆகும்

இதில் இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட மக்கள் ஒருவரை ஒருவர் கண்டு ஒருவரோடு ஒருவர் இடைவினை கொள்ளும் போது அது உருவாகும் என ஊ.ர் C.H Cooly  குறிப்பிடுகின்றார்.இவர் மேலும் இக் குழுக்களை இருவகையாக பிரி;க்கின்றார்.


  1. Primary Group – முதன் நிலைக் குழு
  2. Secondary Group  - இரண்டாம் நிலைக் குழு
இங்கே முதல் நிலைக்குழு என்பது நாம் அனைவரும் ஒன்று எனும் உணர்வினால் உந்தப்பெற்று மிக நெருக்கமான பிணைப்புக்களால் அமையும் குழு ஆகும்.

உதா:-குடும்பம் 

இரண்டாம் நிலைக் குழு என்பது வாழ்வியல் முறை உறவு முறைகளால் அமைந்து பொது நோக்கான பிணைப்புக்களால் ஏற்பட்டுள்ளவையாகும்.
குழுக்களின் இயல்புகளை நோக்குமிடத்து
  1. ஒருவரோடு ஒருவர் இடைவினை கொள்ளும் தன்மை
  2. ஒருவரில் ஒருவர் தங்கி நிற்கும் தன்மை
  3. மாறாத ஒரு உறவு முறையினைக் கொண்டிருக்கும்
  4. நோக்கங்களை பகிர்ந்து கொள்ளும் தன்மை
  5. ஈடுபடும் நபர்கள் தம்மை இக்குழுவில் தானும் ஒரு அங்கத்தவர் என்ற உணர்வுடன் செயற்படல்.


சமூக நிறுவனங்கள்
Social Organization

இத் தலைப்பின் கீழ் அமைப்பு ரீதியானஇஅமைப்பு ரீதியற்ற நிறுவனங்கள் அந்நிறுவனங்கள் நிலையும்இ நடிபங்குகள் பற்றி இப்பகுதியில் ஆராயப்படும்.இங்கே அமைப்புக்கள் என்பது வரையறுக்கப்பட்ட குறிக்கோள்களுக்காக திட்டமிட்டு உருவாக்கப்பட்ட சமூகக் கூறுகளாகும்.இவ்வமைப்புகளுக்கு சமூகத்தில் திட்டமிட்ட தொழிற்பாடு ஒன்று அல்லது பல அதிகார மையங்கள் வௌ;வேரு பங்கு பணியிலும்,பொறுப்புக்களிலும்  ஆட்களை மாற்றிக் கொள்ளக் கூடிய ஆற்றல் உண்டு.

சமூக நிறுவனங்கள் என்பது சமூகத்தில் குறிப்பாக இலக்குகளை அடையும் நோக்குடன் உருவாக்கப்பட்ட அல்லது ஒழுங்கமைக்கப்பட்ட வழிநிலைக் குழுக்களே சமூக நிறுவனங்களாகும்.

இந்த நிறுவனங்கள் இரு வகைப்படும்

1. Formal orgaizatoin – நெறிமுறைஃநியம சார்ந்த அமைப்பு
ஒரு சமூகத்தில் இருக்கும் மக்கள் குறிப்பிட்ட நெறிமுறைஃநியம சார்ந்த அமைப்புக்களுடன் சேர்ந்து கொள்வதில் ஏற்படும் அமைப்புக்கள் இதுவாகும்.இவ்வகை அமைப்புக்கள் ஒரு சமூகத்தினுடைய ஒழுங்கை/அறநெறிகளை /நியமங்களை பாதுகாக்கும் அமைப்புக்களாக அவை காணப்படுகின்றன.

உதா:-செஞ்சிலுவை சங்கம்
Lions club
இந்து இளைஞர் மன்றம்
கிறிஸ்தவ இளைஞர் மன்றம்

2. Informal Organization– முறைசாராத அமைப்பு
அமைப்பற்ற நிறுவனங்கள் ((Informl Ogganization) ஒரு சமூகத்தின் ஒழுங்கு சட்டவிதிகள் முறமைகளுக்கு உட்படாத நிறுவனங்கள் அனைத்தும் அமைப்பற்ற நிறுவனங்களாகும்.

உதா- Staff Group

இவ்வகையான அமைப்புக்களின் நடத்தைகளை நோக்குமிடத்து

  1. ஙன்நிலை நோக்கில் இவை தனிப்பட்ட குழுக்கள் சிறிய குழுக்களாகும்.
  2. தொழிலாளர் அமைப்புக்கள் செயற்பாட்டில் ஈடுபடும் ஊழியர்கள் பலதரப்பட்ட மனப்பாங்குகள் ஏற்பட்டால் சேர்ந்து ஒற்றுமையுடன் செயற்படல்.
  3. தலைமைத்துவம்இமுரண்பாடுஇதொடர்பாடல்இசக்தியின் நிலை இநடிபங்கு குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
  4. தனிப்பட்ட நடத்தை பெறுமானம் இகற்றல்இஊக்கம்இஆளுமை அங்கத்தவரிடையே காணப்படும்.
  5. ஒரு குறித்த நோக்கின் அடிப்படையில் செயற்பாடுகள் அனைத்தும் காணப்படும்.
  6. சிறிய அளவினதாகவிருக்கும்.
  7. நிதி இருக்கலாம் அல்லது இல்லாமல் விடலாம்.
  8. அங்கத்தவர்களை கொண்ட அமைப்பு
  9. இவை அனைத்தும தொடர் சேவை அமைப்பு

சமூகமயமாக்கல்
Socialization

எனும் போது “ஒரு மனிதன் தன்னை சமுதாயத்தில் இருந்து அப்புறப்படுத்திக் கொண்டு ஒதுங்கி விடாமல் தனது கலாச்சார சமூகத்தின் பழக்கவழக்கங்களையும் நடைஇஉடைஇபாவனைகளையும் உணர்ந்து அறிந்து ஏற்று வாழ்தலே சமூகமயமாக்கல் ஆகும்”.

“மக்கள் ஒரு குறிப்பிட்ட சமூகக் குழுவில் உறுப்பினர்களாகச் செயற்படுகின்ற வகையில் செயல் நோக்கம்இஅறிவுஇமொழிஇபல்வேறு திறன்கள்இவிழுமியங்கள்இவிதிமுறைகள்இவாழ்வின் பல்வேறு நிலைகள் ஆகியவற்றை பெறும் வகையிலான ஒரு செயற்பாடே சமூகமயமாக்கல”; ஆகும் என Emile Durkhem  குறிப்பிடுகின்றார்.

சமூகத்தில் உள்ள குழந்தைகளுக்கு வயது வந்தோர் தமது அதிகாரத்தின் மூலம் (எடுத்துக்காட்டாக)ஆசிரியர்கள் கற்பிக்கும் சூழ்நிலைளேய சமூகமயமாக்கல் ஆகும் என Piaget குறிப்பிடுகின்றார்.

“குழந்தை தனது துருவிக் காணும் ஆற்றல் மூலமாகவும் சிறுவர் சிறுமிகளுக்கிடையேயான தொடர்பினாலும் கற்றுக் கொள்ளும் முறையே” ஆகும்.மேலும் “ஒரு தனியாளை அல்லது ஒரு உயிரினை அல்லது ஒரு ஆளை சமூகத்திற்கு ஏற்றவாறு உருவாக்குவது ஆகும்.

“ஒரு குழந்தையானது கருவில் இருந்து தோற்றம் பெறும் போது அது தானாகச் செயற்பட முடியாத நிலையில இன்னொரு உயிரின் உதவியுடன் அவனை வளர்த்துச் சமூகத்திற்கு ஏற்ற விதத்pல் உருவாக்குதல்” சமூகமயமாக்களாகும்.

இச் சமூகமயமாதல் இரு வகைப்படும்
  1. நுண்நிலை சமூகமயமாக்கல்
  2. பருநிலை சமூகமயமாக்கல்
இங்கே நுண்நிலை சமூகமயமாக்கல் என்பது சமூக இடைவினைஇசமூகக் கட்டுப்பாடு போன்ற குவிமையங்களின் ஊடக சமூகமயமாக்கப்படுதலாகும்.
பருநிலை சமூகமயமாதல் என்பது குறித்த சமூகத்தின் பண்பாடுஇசமூகக் கட்டமைப்பு இகுழுக்கள்,நிறுவனங்கள் போன்ற மையங்களின் ஊடாக சமூகமயமாதல் ஆகும்.

சமூகமயமாக்கலில் ஈடுபடும் நிறுவனங்களான குடும்பம்,பாடசாலை,தொழில் நிறுவனங்கள்,ஆலயங்கள்,இளைளோர் கூடங்கள் ,வயது அடிப்படைக்குழுக்கள் இஇரகசிய சங்கங்கள் குழுக்கள்(Peer Groupsபோன்றவற்றினைக் குறிப்பிடலாம்.

ஒரு தனிநபர் சமூகமயமாக்கப்படும் போது அவற்றைப் பல வகையாகப் பிரிக்கலாம்.
  1.   Primary Socialization –ஆரம்ப சமூகமயமாக்கல்
  2. Secondary Socialization- இரண்டாம் நிலைச்சமூகமயமாக்கல்
  3. Development Socialization  – அபிவிருத்தி சமூகமயமாக்கல்
  4. Re- Socialization – மீள் சமூகமயமாக்கல்
  5. Victim Socialization – பாதிக்கப்பட்டவர்களுக்கான சமூகமயமாக்கல்


  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்

    0 comments:

    Speak up your mind

    Tell us what you're thinking... !

    Like On Facebook

    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    விளம்பரம்