எனது இணைப்பக்கத்துடன் இணைந்து தங்களுடைய கருத்துக்களையும் தெரிவித்துக் கொள்ளுங்கள்
Published Date: July 12, 2014

சமூக குழுக்கள் - Social Groups

மேலும் இப்பாடப் பரப்பின் ஊடாகச் சமூகக் குழுக்கள் என்றால் என்ன?சமூகங்களுக்கிடையே காணப்படும் சமூகக் குழுக்கள் எவை?அவை அமைப்பு ரீதியானவையா?அல்லது அமைப்பு ரீதியற்றவையா?குழுக்களின் நடத்தை என்ன?என்பது பற்றி ஆராயப்படும்.

குழு என்றால் ஒரு குறித்த இலக்குடன் அவ்விலக்கினை அடையும் நோக்கில் பொளதீக ரீதியிலும் உளவியல் ரீதியிலும் ஒன்றுபட்டு இடைவினை(Interecation)கொள்ளும் தனியன்களின் தொகுதியே குழு ஆகும்

இதில் இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட மக்கள் ஒருவரை ஒருவர் கண்டு ஒருவரோடு ஒருவர் இடைவினை கொள்ளும் போது அது உருவாகும் என ஊ.ர் C.H Cooly  குறிப்பிடுகின்றார்.இவர் மேலும் இக் குழுக்களை இருவகையாக பிரி;க்கின்றார்.


  1. Primary Group – முதன் நிலைக் குழு
  2. Secondary Group  - இரண்டாம் நிலைக் குழு
இங்கே முதல் நிலைக்குழு என்பது நாம் அனைவரும் ஒன்று எனும் உணர்வினால் உந்தப்பெற்று மிக நெருக்கமான பிணைப்புக்களால் அமையும் குழு ஆகும்.

உதா:-குடும்பம் 

இரண்டாம் நிலைக் குழு என்பது வாழ்வியல் முறை உறவு முறைகளால் அமைந்து பொது நோக்கான பிணைப்புக்களால் ஏற்பட்டுள்ளவையாகும்.
குழுக்களின் இயல்புகளை நோக்குமிடத்து
  1. ஒருவரோடு ஒருவர் இடைவினை கொள்ளும் தன்மை
  2. ஒருவரில் ஒருவர் தங்கி நிற்கும் தன்மை
  3. மாறாத ஒரு உறவு முறையினைக் கொண்டிருக்கும்
  4. நோக்கங்களை பகிர்ந்து கொள்ளும் தன்மை
  5. ஈடுபடும் நபர்கள் தம்மை இக்குழுவில் தானும் ஒரு அங்கத்தவர் என்ற உணர்வுடன் செயற்படல்.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்

    0 comments:

    Speak up your mind

    Tell us what you're thinking... !

    Like On Facebook

    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    விளம்பரம்