எனது இணைப்பக்கத்துடன் இணைந்து தங்களுடைய கருத்துக்களையும் தெரிவித்துக் கொள்ளுங்கள்
Published Date: June 26, 2014

பெண் சாதனையாலிகள்- 2 ஆமினா வதூத் -

 Photo: ஆமினா வதூத் - முஸ்லிம் பெண் ஆளுமை 05
Sabrina Rila 

2005இல் அமெரிக்காவின் நியூயோர்க் ஜும்ஆ பள்ளிவாயலில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இவர் நடாத்திய ஜும்ஆ தொழுகை இஸ்லாமிய உலகெங்கும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. எனினும் இச்சர்சைகளை தாண்டி ஆமினா வதூதின் தஃவா மற்றும் அறிவுத்துறைப் பணிகள் குறிப்பிடத்தக்கவை. 

Mary Teasly எனும் இயற்பெயர் கொண்ட இவர் அமெரிக்காவில் பிறந்தார். கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்த மேரியின் தந்தை ஒரு பாதிரியாவார். மேரி பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பட்டதாரியாவார். 1972இல் இஸ்லாத்தை தழுவிய இவர் 1974இல் தனது பெயரை உத்தியோகபூர்வமாக ஆமினா வதூத் என மாற்றிக் கொண்டார். 

Near eastern studies துறையில் பட்டமேற் கல்வியை பூர்த்தி செய்த ஆமினா அறபு இஸ்லாமிய கற்கை நெறியில் கலாநிதிப் பட்டம் பெற்றார். தொடர்ந்து கெய்ரோவிலுள்ள அமெரிக்க பல்கலைக்கழகத்தில் அறபு மொழியைக் கற்றுக் கொண்டதோடு குர்ஆனியக் கலைகளிலும் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டார். எகிப்து அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய தத்துவ ஞானத்தைக் கற்ற அவரது கவனம் குர்ஆன் விளக்கவுரைகளை நோக்கித் திரும்பியது. குர்ஆனிய ஆய்வுகளில் தீவிர ஈடுபாடு காட்டிய ஆமினா வதூத் அல்குர்ஆனுக்கு விளக்கவுரையும் எழுதியுள்ளார். 1989 தொடக்கம் 1992 வரை மலேசிய இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் குர்ஆனிய கலைகளில் உதவிப் பேராசிரியராக கடமையாற்றிய காலத்தில் குர்ஆனும் பெண்ணும் என எனும் பிரபலமான நூலை வெளியிட்டார். 

ஆமினா வதூத் ஓர் இஸ்லாமிய பெண்ணிலைவாதி என கூறுமளவுக்கு பெண்களின் உரிமை குறித்து ஈடுபாட்டுடன் பேசி வருபவர். உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் விரிவுரைத் தொடர்களை ஆற்றியுள்ள இவர் பல நூல்களின் ஆசிரியருமாவார். இவரது நூல்களுள் இஸ்லாமும் நீதியும், குர்ஆனும் பெண்ணும், ஷரீஆவும் மனித உரிமைகளும் ஆகிய நூல்கள் பிரபலமானவை. 

இது தவிர சர்வதேச அளவில் நடைபெற்ற பல மாநாடுகளில் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்து உரையாற்றியுள்ள ஆமினா வதூதின் பணிகளை பாராட்டி சர்வதேச நிறுவனங்கள் பல விருதுகளை வழங்கி கெளரவித்துள்ளன. அவற்றுள் 2007ல் டென்மார்க் அரசு வழங்கிய ஜனநாயக விருது குறிப்படத்தக்கது.

மூலம் :உயிர்த்துடிப்புள்ள பெண் ஆளுமைகள்2005இல் அமெரிக்காவின் நியூயோர்க் ஜும்ஆ பள்ளிவாயலில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இவர் நடாத்திய ஜும்ஆ தொழுகை இஸ்லாமிய உலகெங்கும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. எனினும் இச்சர்சைகளை தாண்டி ஆமினா வதூதின் தஃவா மற்றும் அறிவுத்துறைப் பணிகள் குறிப்பிடத்தக்கவை.

Mary Teasly எனும் இயற்பெயர் கொண்ட இவர் அமெரிக்காவில் பிறந்தார். கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்த மேரியின் தந்தை ஒரு பாதிரியாவார். மேரி பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பட்டதாரியாவார். 1972இல் இஸ்லாத்தை தழுவிய இவர் 1974இல் தனது பெயரை உத்தியோகபூர்வமாக ஆமினா வதூத் என மாற்றிக் கொண்டார்.

Near eastern studies துறையில் பட்டமேற் கல்வியை பூர்த்தி செய்த ஆமினா அறபு இஸ்லாமிய கற்கை நெறியில் கலாநிதிப் பட்டம் பெற்றார். தொடர்ந்து கெய்ரோவிலுள்ள அமெரிக்க பல்கலைக்கழகத்தில் அறபு மொழியைக் கற்றுக் கொண்டதோடு குர்ஆனியக் கலைகளிலும் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டார். எகிப்து அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய தத்துவ ஞானத்தைக் கற்ற அவரது கவனம் குர்ஆன் விளக்கவுரைகளை நோக்கித் திரும்பியது. குர்ஆனிய ஆய்வுகளில் தீவிர ஈடுபாடு காட்டிய ஆமினா வதூத் அல்குர்ஆனுக்கு விளக்கவுரையும் எழுதியுள்ளார். 1989 தொடக்கம் 1992 வரை மலேசிய இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் குர்ஆனிய கலைகளில் உதவிப் பேராசிரியராக கடமையாற்றிய காலத்தில் குர்ஆனும் பெண்ணும் என எனும் பிரபலமான நூலை வெளியிட்டார்.

ஆமினா வதூத் ஓர் இஸ்லாமிய பெண்ணிலைவாதி என கூறுமளவுக்கு பெண்களின் உரிமை குறித்து ஈடுபாட்டுடன் பேசி வருபவர். உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் விரிவுரைத் தொடர்களை ஆற்றியுள்ள இவர் பல நூல்களின் ஆசிரியருமாவார். இவரது நூல்களுள் இஸ்லாமும் நீதியும், குர்ஆனும் பெண்ணும், ஷரீஆவும் மனித உரிமைகளும் ஆகிய நூல்கள் பிரபலமானவை.

இது தவிர சர்வதேச அளவில் நடைபெற்ற பல மாநாடுகளில் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்து உரையாற்றியுள்ள ஆமினா வதூதின் பணிகளை பாராட்டி சர்வதேச நிறுவனங்கள் பல விருதுகளை வழங்கி கெளரவித்துள்ளன. அவற்றுள் 2007ல் டென்மார்க் அரசு வழங்கிய ஜனநாயக விருது குறிப்படத்தக்கது.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்

    0 comments:

    Speak up your mind

    Tell us what you're thinking... !

    Like On Facebook

    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    விளம்பரம்