
ஆராய்ந்து பார்த்தால் பல தவறுகள் நம்மிடமே இருக்கின்றது...
நம் முன்னோர்கள் தாங்கள் பருவ வயதை எட்டியவுடன் திருமணம் செய்து கொண்டார்கள் 14 -16 வயதில் குழந்தைகளுக்கு பெற்றோர் ஆனார்கள்...
இன்றைய சூழ்நிலை அவ்வாறு இல்லை பெண்ணுக்கு 20-25 வயதிலும் ஆணுக்கு 25-35 வயதிலும் திருமணம் நடக்கிறது...
மேலும் இன்றைய கால இளைஞர்களோ காலம் பாராமல் உழைக்கிறார்கள்...
அன்றைய காலத்தில் உடல் உளைச்சல் அதிகம் இருந்தது இன்றைய கால கட்டத்திலோ மன உளைச்சல் அதிகமா இருக்கிறது ...
மேலும் பணம் மற்றும் வேலைக்காக பெற்றோரை விட்டு தனிமை படுத்தப்படுகிறார்கள்...
அதற்க்கு மேல் திரைப்படங்கள் செக்ஸ் மற்றும் காதலையே மையமாக கொண்டு உள்ளது.
மேலும் இணையம் தொட்ட இடமெல்லாம் செக்ஸ் நிர்வாண படங்கள் காட்சிகள்.
இதுகளில் சீரழிவது ஆண்கள் மட்டும் அல்ல பெண்களுக்கும் தான்.
ஏன் ஆண்களை மற்றும் குற்றவாளிகளாக காட்டுகிறார்கள் என்பது புரியவில்லை...
இதற்கு எல்லாம் காரணம் மனம் மற்றும் தனிமை...
நண்பர்களே ! நண்பிகளே !
* பெற்றோர் உடன் மனம் விட்டு பேசுங்கள். பெற்றோர்களே குழந்தைகளும் மனம் மற்றும் உணர்ச்சிகள் இருக்கிறது என்று சிந்தியுங்கள்...
* பெற்றோர்களே குழந்தைகளை தனிமை படுத்தாதிர்கள். பணம் முக்கியமில்லை இருக்கிற வாழ்க்கை உங்கள் குழந்தைகளுடன் செலவழியுங்கள் உங்கள் பொன்னான நேரத்தை.
* 25 வயதிற்குள் திருமணம் செய்து கொள்ளுங்கள் (ஆண் ஆயினும் பெண் ஆயினும்) ...
* நண்பர்களுடன் பேசுங்கள். இணையத்தை தவிர்த்துடுங்கள்.(தேவைக்கு மட்டும் இணையத்தை உபயோகியுங்கள்)
* நண்பர்களுடன் விளையாடுங்கள்...
* உங்களுடன் பழகுபவர்களை சகோதர சகோதிரகளாய் சிந்தியுங்கள்...
* பணம் ஒரு பெரிய விஷயம் அல்ல. வாழ்கையில் இருக்கிறதை வைத்து சந்தோசமாக வாழ வழியை தேடுங்கள்...
* எவரும் நல்லவர் இல்லை. ஒரு சிறு சந்தோசத்திற்காக கேவலப்படாதீர்கள் ..
* செக்ஸ் என்பது எல்லோருக்கும் ஏற்படும் ஒரு இயல்பான உணர்ச்சி. அதற்கனே சில வழிமுறைகள் இருக்கின்றன. ஏனென்றால் நாம்
மனிதர்கள் ஆறறிவு கொண்டவர்கள்.
குழந்தைகளை குழந்தைகளாக பாருங்கள்...
நான் ஏதேனும் தவறாக கூறி இருந்தால் சுட்டிக்காட்டவும்...
என்றும் உங்கள் நண்பன் : ஹினாஸ்
super boss
ReplyDelete