மேலும் மனிதர்கள், ஏன் மற்றும் எப்படி, ஒரு குறிப்பிட்ட வழியில் சிந்திக்கிறார்கள், செயல்படுகிறார்கள் மற்றும் பதிலளிக்கிறார்கள் என்பதை பற்றியும் ஆராய்வது உளவியலாகும். உளவியல் என்பது, அறிவை பயன்படுத்தி நடத்தை சிக்கலை தீர்ப்பதாகும்.
மனக் கோளாறுகளை சோதனை செய்து அவற்றுக்கு சிகிச்சை அளிப்பதற்கு பயிற்சி பெற்றவர்கள்தான் உளவியல் மருத்துவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். உளவியல் மருத்துவர்கள் பலவிதங்களில் பயிற்சி பெறுகிறார்கள். மக்களுக்கு, தனிப்பட்ட பிரச்சினைகள் தொடர்பாக ஆலோசனை வழங்குவது மற்றும் ஒரு தனி நபரின் உடல் மற்றும் மன முன்னேற்றத்திற்கான வியூகங்களை மேம்படுத்துவது வரை பலவிதங்களில் விரிந்துள்ளது.
ஒரு உளவியல் மருத்துவருக்கான பணிகளின் வகைகள்:
மருத்துவ உளவியல்:
ஒருவரின் மன நலத்தையும், உடல் நலத்தையும் பாதிக்கும் அம்சங்களைப் பற்றி ஆராய்வதே இந்தவகை உளவியல். மேலும் ஒருவரின் உடல்நலத்தை மோசமாக பாதிக்கக்கூடிய விஷயங்களை கண்டறிவதும், நோயாளிகள் தங்களின் நோயோடு எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்பதையும் இவ்வகை உளவியல் முக்கியமாக ஆராய்கிறது. மேலும் நோயாளியின் உடல் மற்றும் மன நலத்தை மேம்படுத்தும் வழிகளைக் கண்டறிவதும் இதன் நோக்கம்.
கிளீனிக்கள் உளவியல்:
மனநல சீரழிவின் காரணங்கள் மற்றும் அதற்கான சிகிச்சையை கண்டறிவது இந்த பிரிவு.
சமூக உளவியல்:
மனித நடத்தையின் சமூக அம்சங்கள் பற்றி ஆராய்வது இந்த பிரிவு என்று சொல்லலாம் அல்லது மனிதர்கள் எப்படி மற்றும் எதனால் ஒரு குறிப்பிட்ட விதத்தில் சிந்திக்கிறார்கள் மற்றும் எதிர்வினை புரிகிறார்கள் என்பதை கண்டறியும் பிரிவு என்றும் சொல்லலாம்.
நரம்பு உளவியல்:
மூளையில் ஏற்படும் ஏதேனும் வகையான பாதிப்புகள், எவ்வாறு ஒரு மனிதனின் நடத்தையை பாதிக்கிறது என்பதைப் பற்றியும், அதற்கான மருத்துவம் பற்றியும் ஆராய்வது இந்த பிரிவு.
கிளீனிக்கள் நரம்பு உளவியலாளர் என்பவர், மனநல குறைபாட்டை அளவிடுதல் மற்றும் சோதனை செய்தல் ஆகியவற்றை மேற்கொள்வதோடு, அந்த குறைபாடானது, சிந்தனை, உணர்ச்சிகள், நடத்தை மற்றும் ஆளுமை ஆகியவற்றை எப்படி பாதிக்கிறது என்பதிலும் சிறப்பு ஆய்வை மேற்கொள்கிறார்.
கல்வி மற்றும் மேம்பாட்டு உளவியல் நிபுணர் என்பவர், மேம்பாடு மற்றும் கல்வி தொடர்பான நிர்வாகம் சம்பந்தப்பட்ட ஆலோசனை சேவைகள் மற்றும் அளவீடு ஆகியவற்றை வழங்குகிறார்.
குற்ற ஆய்வு உளவியல்:
சட்ட விஷயங்களுக்கு உளவியலைப் பயன்படுத்துவதே இந்த பிரிவு. சட்டப் படிப்பில் இந்த வகை உளவியலை சிறப்பாக இணைத்து பயன்படுத்த முடியும்
.
மறுவாழ்வு உளவியல்:
குறைபாடுகள் மற்றும் விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை பற்றி ஆராய்வது இந்த பிரிவு. இந்தவகை உளவியலாளர்கள், நோயாளிகளுக்கு, சூழ்நிலையோடு ஒத்துபோக உதவி செய்கிறார்கள்.
மேம்பாட்டு உளவியல்:
ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் மக்களிடம் ஏற்பட்டுள்ள அறிவு, உடல் மற்றும் சமூக மாற்றங்களை ஆராய்வதே இந்த பிரிவு. மேலும் இந்தவகை உளவியல் நிபுணர்கள், அறிவுத்திறன் குறைந்த குழந்தைகளை கையாள்கிறார்கள்.
அறிவாற்றல் உளவியல்:
ஒரு தனி மனிதனின் காரணகாரிய திறன், முடிவெடுக்கும் திறன் மற்றும் சிந்தனை திறன் ஆகியவற்றை ஆராய்வது இந்த பிரிவு.
நிறுவன உளவியல்:
வேலை சூழல் தொடர்பான நடத்தை குறித்து இந்த பிரிவு ஆராய்கிறது. ஒரு பணியாளரின் செயல்பாட்டை மதிப்பிட, அவருக்கு ஆலோசனை கூற மற்றும் நிறுவன தேவைக்கு ஏற்ப ஒரு பணியாளருக்கு பயிற்சி அளிக்க இந்தவகை உளவியல் பயன்படுத்தப் படுகிறது.
கவுன்சிலிங் உளவியல்:
மனநலக் குறைபாடு உள்ளவர்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்குதல், அவர்களின் பிரச்சினைகள் தீர்வதற்கான உளவியல் விதிமுறைகளைப் பயன்படுத்தல் மற்றும் அதுபோன்ற நபர்களின் நல்வாழ்விற்கு உதவுதல் போன்றவை இந்த பிரிவில் அடக்கம்.
விளையாட்டு உளவியலாளர்:
விளையாட்டுத் துறை மற்றும் உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தேவையான உளவியல் ஆலோசனைகளை வழங்கி, அவர்களின் சமூக வாழ்க்கையை மகிழ்ச்சிகரமானதாக ஆக்க உதவுவது இந்த பிரிவு.
ஒரு உளவியல் நிபுணராவது எப்படி?
ஒரு மாணவர், தனது மேல்நிலைப் படிப்பின்போது, அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுடன் சேர்த்து உளவியல் பாடத்தையும் எடுத்துப் படிக்கலாம். அடுத்ததாக, இளநிலை படிப்பில் ஒரு ஹானர்ஸ் பட்டப் படிப்பை(உளவியல்) தேர்ந்தெடுக்கலாம்.
உளவியலின் ஏதேனும் ஒரு பிரிவில் நீங்கள் சிறப்பு படிப்பை மேற்கொள்ள விரும்பினால், 2 வருட முதுநிலை உளவியல் படிப்பை மேற்கொள்ளலாம். நீங்கள் இத்துறையில் ஒரு பெரிய நிபுணராக மற்றும் உங்களின் வேலைவாய்ப்பை பெரியளவில் அதிகரித்துக் கொள்ள விரும்பினால், பிஎச்.டி. செய்வது அவசியம்.
தனிப்பட்ட பண்புகள்:
ஒருவருக்கு மக்கள் மற்றும் அவர்களின் பிரச்சினைகளின் மீது ஆர்வமும், அதை தீர்த்து வைப்பதற்கான அக்கறையும், பிரச்சினைகளை களைவதற்கான திறனும், பொறுமையும், அறிவாற்றலும், சிறந்த பேச்சு மொழி மற்றும் எழுத்து மொழி அறிவும் இருந்தால், அவர் ஒரு உளவியல் நிபுணராகலாம்.
இத்துறையிலுள்ள வேலை வாய்ப்புகள்:
அரசு மற்றும் தனியார் துறைகளில் அதிக வேலைவாய்ப்புகள் உள்ளன. உளவியல் மருத்துவர், சமூக சேவகர்(அலுவலர்), தொழில்துறை உளவியலாளர், ஆலோசகர், தொழில்துறை தொடர்பு அதிகாரி போன்ற பலவிதமான வேலைவாய்ப்புகள் உள்ளன.
மேலும், மருத்துவமனைகள், பள்ளிகள், கல்லூரிகள், தொழிற்கல்வி நிறுவனங்கள், மனநலன் பாதித்த குழந்தைகளுக்கான பள்ளிகள், மனநலன் குன்றியவர்களுக்கான சமுதாய மருத்துவ மையங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள், வேலைவாய்ப்பு ஏஜென்சிகள், கல்வி ஆலோசனை மையங்கள் போன்ற ஏராளமான இடங்களில் உளவியல் நிபுணர்களுக்கு வாய்ப்புகள் உள்ளன. அவரவர்களின், சிறப்பு மேல்படிப்புகளுக்கு ஏற்ப பணிகள் கிடைக்கும்.
சம்பளம்:
ஒரு தொழில்முறை உளவியல் நிபுணராக பணியாற்றுவது கடினமானது என்றாலும், அதில் கிடைக்கும் வருமானம் மிக அதிகம். அந்த ஊதியமானது, தகுதி, சிறப்பு படிப்பு மற்றும் அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் கிடைக்கிறது.
ஒரு தனியார் பள்ளியில் பணிபுரியும் உளவியலாளர் மாதம் ரூ.10 முதல் 15 ஆயிரங்கள் வரை பெறுகிறார். அதேசமயம் ஒருவர் தனியார் பள்ளியில் உளவியல் ஆசிரியராக பணிபுரிந்தால், அப்பள்ளி நிர்வாகம் நிர்ணயித்த ஊதியம் பெறுவார். அதேசமயம், ஒரு அரசு உளவியல் ஆசிரியர் மற்றும் கல்லூரி உளவியல் ஆசிரியர்களுக்கான சம்பளம் அதிகம்.
மேலும், தொழில் நிறுவனங்கள், பன்னாட்டு கம்பெனிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் போன்றவற்றில் அதிக வேலைவாய்ப்புகள் உள்ளன. ஒரு உளவியல் நிபுணர் தன் திறமைக்கு ஏற்ப தனியார் துறைகளில் நிறைய சம்பாதிக்கலாம். அது அவரவர் முயற்சியையும், ஈடுபாட்டையும் பொறுத்தது.
|
Published Date: February 04, 2014
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..
உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்
உங்களை அழைக்கிறது உளவியல் துறை!
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..
Share
உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்