எனது இணைப்பக்கத்துடன் இணைந்து தங்களுடைய கருத்துக்களையும் தெரிவித்துக் கொள்ளுங்கள்
Published Date: December 09, 2013

கட்டிளம் பருவத்தினை கையாள்வது எப்படி?


                                                                                                                                          
By:- A.C.A.Rifkan -Bachelor of Social Work Final Year. (Sri Lanka School of Social Work).











நமது நாட்டில் அண்மைக்காலமாக நிகழும் இளைஞர், யுவதிகளுடன் பெற்றோரடனும் சமூகக் கட்டமைப்புகளுடன் தொடர்புடைய நிகழ்வுகளை நாம் எந்தக் கண்கொண்டு நோக்குவது என்பது பலருக்கும் புரியாத புதிராகவே இருக்கிறது.
அந்தவகையில், இவ்வாறான துரதிஷ்டவசமான சம்பவங்களின் பின்னணிக் காரணிகள் மற்றும் அவற்றைக் கையாள வேண்டிய முறைமைகள் தொடர்பிலான உளவியல் ரீதியான பயனுள்ள குறிப்புகள் இங்கு முன்வைக்கப்படுகின்றன.

கட்டிளமைப் பருவம் ஒரு அறிமுகம்.

•   மனிதவாழ்வின் சிக்கல் நிறைந்த கட்டமாகக் கருதப்படும் கட்டிளமைப் பருவம்,பாலியல் முதிர்ச்சி மற்றும் சமூகத்துடன் ஒன்றிணைதல் என்பனவற்றை ஏற்படுத்துகிறது.
•  மிகப் பரந்த உடல் மாற்றங்கள் ஏற்படும் இப்பருவத்தில் மேலும் பல உள, சமூக, மனவெழுச்சி மாற்றங்கள் ஏற்படுகின்றன.
•    ஆங்கிலத்தில் குறிப்பிடப்படும் “Adolescence” எனும் வார்த்தையானது இலத்தீன் சொல்லாகும். இதன் அர்த்தம் முதிர்ச்சி,வளர்ச்சிஎன்பனவாகும். இது உள,மனவெழுச்சி (Emotions), சமூக மற்றும் உடல் வளர்ச்சிகளை உள்ளடக்குகிறது.
•   புயலும், நெருக்கீடும் (Storm & Strees) கொண்ட பருவமாகவே விருத்தி உளவியல் அறிஞர்கள் (Development Psychologist) இப்பருவத்தை நோக்குகின்றனர்.
•   13 வயதில் ஆரம்பிக்கப்படும் இப்பருவம் 20 அல்லது 21 வயது வரை நீடிப்பதாகக் கருதப்படுகிறது.
•    உடலியல் மாற்றம் மற்றும் பாலியல் முதிர்ச்சிகளால் மிகவும் தீவிரமான எதிர்ப்பாலார் மீதான கவனம்,பார்வை இப்பருவத்தில் ஏற்படுகிறது.

கட்டிளமைப் பருவத்தின் முக்கியத்துவம்

1.  இப்பருவத்தினரின் அறிவும், சமூக உறவுகளும், வாழ்க்கையின் இலக்குகளும் பலவகைகளில் வளர்ச்சியுற்று நிலை நிறுத்தப்படுகின்றன.
2. ஒருவரின் (ஆண்,பெண்) பிற்கால வாழ்க்கைத் தன்மையும், ஆளுமை வளர்ச்சியும் கட்டிளமைப் பருவத்திலேயே நிர்ணயிக்கப்படுகிறது.
3.  தான் தனித்த  பாலினத்தைச் சார்ந்தவர் என்ற உணர்வு ஏற்படல்.
4.  கட்டிளமைப் பருவத்தில் ஆண் பிள்ளைகளுக்கும்,பெண் பிள்ளைகளுக்கும் பாலின உணர்வு ஏற்பட்டு தன் பாலினத்தைச் சார்ந்த உடல் தோற்றம் நினைவுக்குவருகின்றது. ஓர் ஆண் பிள்ளை,தான் உடல் பலத்தில் நிகரற்று வலிமைமிக்கதோர் இளைஞனாக உருவாக வேண்டியதன் அவசியத்தை உணர்ந்துஅதற்கேற்ற வகையில் உணவினையும், பயிற்சியினையும் ஏற்கவிழைகின்றான். இதனைப் போன்ற ஒரு பெண் பிள்ளை கவர்ச்சியானஆரோக்கியமான உடற்கட்டைப் பெறுவதற்கு தோற்றத்தாலும் கவர்ச்சியாலும் ஒருவரை ஒருவர் கவரவும் ஈர்க்கவும் முனைகின்றனர்.

5. பாலின உறுப்புக்கள் நன்கு முதிர்ச்சியடைதலும், பாலினமிகு உணர்ச்சிகளை சமூக அங்கீகரிப்புக்கு உள்ளான வழியில் நிறைவேற்ற வழி இல்லாமல் போவதும் ஏற்படுகிறது.
6.  பாலின உணர்ச்சி அடக்குதலால் சமூக ஒழுக்க நெறிசார்ந்த பிரச்சினை ஏற்படுத்தலும், வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுப்பது பற்றிய சிந்தனை ஏற்படுத்தலும்.
7. பெற்றோர் ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டு மனவெழுச்சி சுதந்திரம்(Emotional Independence) ஐ பெறல்.
8. பெற்றோரின் கருத்துக்கள் போல் தமது கருத்துக்களும் ஏற்கப்படவேண்டும் என எதிர்பார்த்தல்.

குறிப்பு: மனவெழுச்சிசுதந்திரம் ஏற்படாத போது பிற்காலத்தில் இவர்கள் தாங்களே துணிந்து ஒரு செயலுக்கான முடிவினை எடுப்பதற்கும் பொறுப்பேற்பதற்கும் சக்தியற்றவர்களாகிவிடுவர்.

9. பொருளாதாரத் தேவைக்கு பெற்றோரில் தங்கியிருத்தல் அவமானம் என்ற உணர்வு ஏற்படல்.
10.மேலும் கட்டிளமைப் பருவத்தில் ஓர் ஆணும்,பெண்ணும் மனிதவாழ்க்கையின் பயன் மதிப்புகளையும், சிறப்புகளையும் அறிகின்றனர்.
 இப்பருவத்தில்தான் இவர்கள் தாங்கள் எதிர்காலத்தில் இப்படியெல்லாம் வாழவேண்டும் எனக் கற்பனை செய்து அக்கற்பனைக் கனவுகளை நனவாக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். குடும்பம், நாடு, சமயம், பண்பாடு போன்ற பல்வேறு தத்துவக் கருத்துக் கோட்பாடுகளின் உண்மைகளை நன்கு அறிந்து மதிக்கத் தொடங்குகின்றனர். ஓழுக்கம், கட்டுப்பாடு, நீதி, நேர்மை போன்ற அறவாழ்வுச் சிந்தனைகளும், இறைவன், பாவம், நன்மை போன்ற சமயம் சார்ந்த சிந்தனைகளும் இப்பருவத்தில் மேலோங்கிக் காணப்படுகின்றன.
  
    இளையோர் பருவம் அல்லது கட்டிளமைப் பருவம் எல்லா வகையிலும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். எண்ணற்ற பிரச்சினைகள் ஏற்படும் இப்பருவத்தில் நல்ல முறையில் இப்பருவத்தை அமைப்பது மிகவும் முக்கியமான விடயமாகும்.

கட்டிளமைப் பருவத்தில் இளம் குற்ற நடத்தை

•    பிள்ளைகள் 7 அல்லது 8 வயதை அடையும் போது இளம் குற்ற நடத்தைக்கான விதை விதைக்கப்படுகிறது.
•    ஆய்வின்படி 14 வயதுவரையுள்ள பிள்ளைகள் 50 வீதம் மகிழ்ச்சிகரமான வாழ்க்கை, அன்பு, ஆதரவினைப் பெற்றிருக்கின்றனர்.
•    பூப்பின் தோற்றத்தில் இருந்து கட்டிளமைப் பருவத்தினரின் ஆர்வம், சமூகத் தொடர்பு விரிவடைவதால் தம்மை முதிர்ந்தவராக மதிக்க வேண்டும் என்ற மனப்பாங்கு ஏற்பட்டு சுதந்திரம் பெறுவதற்கான ஆர்வம் தடை செய்யப்படும் போது வன்முறைத் தாக்குதல்களிலும், எதிர்ப்புகளிலும், சமூக எதிர் செயல்களிலும் ஈடுபடுகின்றனர்.

இளம் குற்ற நடத்தைக்கான காரணங்களை அறிதல்

1.    குறைந்த மனவெழுச்சிப் பொருத்தப்பாடுகளால் வீட்டில் உள்ளபிள்ளைகள் குற்றங்கள் புரிதலுக்கு ஆளாகின்றனர். சிறந்த பெற்றோர் பிள்ளைகள் உறவு இல்லாத போது குற்ற நடத்தை ஏற்படுவது தவிர்க்க முடியாதது.
2.    சூழ்நிலைக் காரணிகள் குற்றம் உருவாக காரணமாக உள்ளது என்பதும் கவனிக்கப்பட வேண்டும். கட்டுப்பாடற்ற மற்றும் பிழைசெய்யத் தூண்டும் நிலைமை மலிவாகும் போது கட்டிளமைப் பருவத்தினர் தமது இச்சைகள்,ஆசைகளை, சமூக நெறிக்கு மாறாக செய்ய வாய்ப்புள்ளது.

3.    சமூகவியல் காரணிகள் வீட்டில் நிலவும் மோசமான ஒழுக்க நடத்தை பெற்றோர்கள் பிள்ளைகளைப் புறக்கணித்தல். பெற்றோர்கள் பிள்ளைகள் பால் கொண்டுள்ள உடைமை மனப்பாங்குகள் குழந்தைக்கு அல்லது இள வயதினருக்கு நாம் பின்பற்றக்கூடிய வகையில் ஒழுக்க நெறியினையுடைய முன்மாதிரி ஒன்றும் இல்லாமை குற்றங்களின் பால் இட்டுச் செல்கிறது..

•    மோசமான ஒழுக்க நடத்தையுள்ள வீட்டு சூழல் வீட்டில் செல்லமும், தீவிரமான கட்டுப்பாடும் கலந்திருப்பதனையும், பெற்றோர்கள் தீவிரமான கட்டுப்பாட்டினையும், ஆதிக்கத்தினையும் செலுத்துபவர்களாக இருப்பதனையும் இது குறிக்கிறது. இந்நிலையில் குழந்தை மேலோட்டத்திலும் சாந்தமாகவும், நல்லநடத்தையினை உடையதாகவும் காணப்படினும் உண்மையில் உளச் சிக்கல்களும், கிளர்ச்சித் தன்மையும் அவ்வாறான குழந்தையில் காணப்படும்.
•    பெற்றோர்கள் குழந்தைகளை தமது சொத்தாக நினைத்து தாம் விரும்பும் வண்ணம் செயல்பட வேண்டும் என விரும்புவது அதனை அடங்காத எதிர்த்தெழுகின்ற தன்மையினையுடையதாக மாற்றிவிடுகின்றது.
•    பொருளாதாரத் தேடல், நெருக்கடிமிக்க வாழ்க்கை அமைப்பில் குழந்தைகள் அல்லது இளம் பருவத்தினர் தமக்கான அன்பு, உறவு வீட்டின் உள்ளே கிடைக்காத போது வெளியே தேடிச் செல்வதால் பிறழ்வான நடத்தை, தீயவர்களின் நட்பினால் வழி கெடுதல் போன்றவற்றால் குற்றங்களைப் புரிகின்றனர்.

குறிப்பு: இளம் குற்றநடத்தை அல்லது பருவ வயதில் ஏற்படும் பிரச்சினைகள் அல்லது சமூக நெறிக்கு எதிரான நடத்தை என்பது கட்டிளமைப் பருவத்தினர் வேண்டும் என்றே புரிவது கிடையாது. பரந்த உடலியல் மாற்றத்தால் ஏற்படும் ஏனைய மாற்றங்களின் விளைவுகள், சூழ்நிலை மற்றும் உள,சமூகவியல் காரணிகளே இதற்கு முழுக்கமுழுக்கக் காரணமே அன்றி கட்டிளமைப் பருவத்தினரோ அல்லது இளம் பராயத்தவர்களோ அல்ல.

இளம் சாராரின் குற்றங்கள் அல்லது தவறுகளுக்கு குறித்த நபரை மையப்படுத்தி மேற்கொள்ளப்படும் எந்த எதிர் நடவடிக்கையும் விடயம் பெரிதாகுதல், வளர்தல், குற்றம் புரிவதற்கான மாற்று ஒழுங்கு, சமூக நெறி சிதைதல் போன்றவற்றை நிச்சயம் ஏற்படுத்தும்.

எமது சூழலில் இளம் குற்ற நடத்தைகளுக்கு தண்டனைக்குரிய நிர்வாகம் சார்ந்த நோக்குகள் உள்ளனவேயொழிய, அதற்கான கல்வி சார்ந்த, உளவியல் சார்ந்த ஏதும் காணப்படுவது இல்லை.

இள வயதினருக்கு இவர்களது தவறுகளுக்கு தேவையானது சீர்திருத்தமே அன்றி தண்டனையில்லை. மேலும் அவர்களை குணப்படுத்துவதில் எந்தவொரு பொது நோக்கும் பயன்படாது என்பதனையும் நாம் நன்கு அறிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக  ஒவ்வொரு குற்றமும் சமூக சூழ்நிலையின் விளைவே. ஆதலால் சமூக சூழ்நிலையினை  மாற்ற வேண்டியது மிகவும் இன்றியமையாதது.


இளம் குற்ற தடுப்பு முறைகள்

1.     Super Ego BuildingI வலுப்படுத்தல்.
2.    பிழை, தவறுக்கான பொறுப்பு புரிந்தவருடையதே என உணரச் செய்வதோடு, பிழையான நடத்தையை தானே மாற்றியமைக்க முடியும் என உணரச் செய்தல்.
3.    வீடும், பாடசாலையும் தமது பொறுப்பினை உணரும்படி செய்தல்.
4.    வீட்டில் பிள்ளைகளின் மனவெழுச்சித் தேவைகளை பெற்றோருக்கு உணர்த்துதல், பாடசாலைகளில் ஆசிரியர் மாணவர் உறவு சிறப்பாக அமைதல்.
5.    போதுமான விளையாட்டு வசதிகள்,மார்க்க மன்ற நடவடிக்கைகளுக்கான ஏற்பாடுகளை ஏற்படுத்தல்.
6.    குழந்தைகளுக்கான சிறுவர் கழகம் போன்றவற்றை ஏற்படுத்தல்.

கட்டிளமைப் பருவத்தினரின் சிக்கல் நடத்தைக்கான காரணம் பற்றிய சமூக சேவையாளர்களின் அனுமானங்கள்

1.    உணவு வகைகளில் உள்ள இரசாயனக் கலப்பு கிளர்ச்சியான எண்ணங்களை தூண்ட முடியும்.
2.    திரைப்படங்கள், நாடகங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் தாக்கம், விளைவுகள்
3.    கையடக்க தொலைபேசிப் பாவனையின் மித மிஞ்சிய அதிகரிப்பு, அசிங்கமான, கிளர்ச்சிகளை தோற்றுவிக்கும் எஸ்.எம்.எஸ் பரிமாற்றம்.
4.    ஆன்மீக் நாட்டக் குறைவு, ஆன்மீக வறுமை.
5.    அடர்த்தியான, நெருக்கடியான வாழ்க்கைச் சூழல்.
6.    தாய் - தந்தை உறவு விரிசல் உள்ள குடும்பப் பின்னணி
7.    துணைத் தேர்வில் குறிப்பாக பெண்களிடம் எதிர்பார்க்கப்படும் வெள்ளை நிற மணப்பெண், சீதனம், ஏற்றத்தாழ்வு, வயது எல்லை.
8.    சமூக நிறுவனங்கள் (குடும்பம், பாடசாலை, சம வயதுக்குழு, சமூக மேம்பாட்டு நிறுவனங்கள், அரசியல், பொருளாதாரம்) என்பவற்றின் ஒழுங்கீனம்  (Dysfunction) சமூக முறை (Social System) சரியாக இயங்காமல் போதலும்.

•    பொது மக்களிடம் காணப்படும் அபிப்பிரயாயம் முஸ்லிம் சமூகத்தின் பண்பாட்டை, ஒழுக்கத்தை கேடு உள்ளதாக மாற்ற நினைக்கும் முகவர்கள், முகவர் அமைப்புகளின் திட்டமிட்ட நீண்ட நாள் செயற்பாடும், இதற்காக குறிப்பாக இளம் சாராரின் மனவெழுச்சிகளை தூண்டும் விடயங்களையும் உரச வைக்கும் செயற்பாடும்.

கட்டிளமை அல்லது இளமைப் பருவத்தினர் தொடர்பான ஆய்வு முடிவுகள்

1.    கட்டிளமை பருவத்தில் ஏற்படும் பாலியல் நடத்தை என்பது கட்டிளமைப் பருவத்தினரின் ஒத்த பாலார் பற்றிய விடயங்களை அறிய முற்படுவது மட்டுமன்றி எதிர்ப்பாலார் பற்றிய அறிவையும் அறியத் தூண்டுகிறது.
2.    கட்டிளமைப் பெண்கள் பாலியல் கல்வி, Birth Control, The Pill, Abortion, Pregnancy என்பனவற்றை அறிய ஆர்வமுள்ளவர்களாக உள்ளனர்.
3.    கட்டிளமை ஆண்கள் Vanereal Disease, பாலியல் இன்பம்,  Inter Course, Family Planing பற்றிய தகவல்களை அறிய ஆர்வமாக உள்ளனர்.
4.    இன்றைய கட்டிளமைப் பருவத்தினர் Sexually Very act.
5.   Dating  என்பது முன்னைய தலைமுறைகளை விட இப்போது கட்டிளமைப் பருவத்தினரிடம் முன்னமே (13 வயதில்) ஆரம்பித்து விடுகிறது. 14 வயதில் இது தொடர்ச்சியான நிகழ்வாக மாறிவிடுகிறது.
6.   Dating  என்பது பொழுதுபோக்கு, இன்பமான விடயங்களை மகிழ்வாக உரையாடல, Courtship,பற்றிய உரையாடல்,  Status தேர்வு பற்றிய விடயமாக உள்ளது.
7.   Chilman  (1980) என்பவரின் கருத்துப்படி 15மூ வீத கட்டிளமை ஆண்களும், 10மூ வீத கட்டிளமை பெண்களும் Homo Sexual அனுபவம் அல்லது தொடர்பு கொண்டுள்ளனர்.
8.    Millman and Mosher என்பவரின் ஆய்வின்படி 11மூகட்டிளமை பருவத்தினர் 15 – 19 வயதில் மணம் செய்வதோடு விவாகரத்து வீதம் ஏனைய வயதில் திருமணம் முடித்தவர்களை விட அதிகமாக இருப்பதாக குறிப்பிடுகிறார்.
9.    கட்டிளமை வயதுத் திருமணம் பாடசாலை விலகல், வாழ்க்கைத் திறனின் குன்றிய நிலை, குறைந்த திருப்தியற்ற உழைப்பு அல்லது தொழில், குறைந்த வருமானம், அதிகூடிய விவாகரத்து போன்றவற்றுக்கு காரணமாகிறது.

குறிப்பு: கிழக்கு மாகாணத்தில் பெண்களின் கல்வியறிவு வீதம் 67மூ வீதம் மட்டுமே. குழந்தை போஷாக்கின்மை நாட்டின் சதவீதத்தை விட கிழக்கில் மிக மிக அதிகமாக உள்ளது;. சராசரியாக இலங்கையில் 40மூ வீதம் - கிழக்கில் 60மூ வீதம்

10. Deliss Oroy, (1973) என்பாரின் கரு (Average age of 17.1 year) த்துப்படி கட்டிளமைத் திருமணம் மகிழ்ச்சியற்றதாக கட்டிளமையினர் உணர்வதாகக் கூறுகிறார்.

மேலும் கட்டிளமை வயது ஆண்கள் அதிகமான பாலியல் நாட்டத்தை ஏற்படுத்துவதோடு இவர்களது பாலியல் திருப்தி 30 மாதங்களில் குறைவதாகக் கூறுகிறார். மேலும் கட்டிளமைப் பெண்கள் தொடர்ச்சியாக பாலியல் நாட்டம் உடையவர்களாக காணப்படுவதாகக் கூறுகிறார்.
இதன் தூர விளைவு, விவாகரத்து, அதிக எண்ணிக்கையான பிள்ளைகள், திருப்தியற்ற உழைப்பு, போதாத சம்பளம், பெற்றோரால் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகும் குழந்தைகள் என்பனவாகும்.

குறிப்பு: எமது சமூக அமைப்பில் இளம் குற்ற நடத்தை அல்லது தவறுகள் மிகவும் உணர்வுபூர்வமாக கையாளப்படுவதும், குற்றங்களின் அல்லது தவறுகளின் ஒட்டுமொத்த காரணம் பெண் எனக் காட்டப்படுவதும் ஆண் ஆதிக்க, அறிவை புறம் தள்ளிய, மனித குலத்துக்கு எதிரான தன்மை வாய்ந்ததாகவே உள்ளது.

பெண் சம்பந்தப்படும் விடயங்களில்...

1.    பெண்களை மதித்து நடத்தல்
2.    பெண்களின் விடயங்களை காது கொடுத்து கேட்டல்
3.    தவறுகளை சூழ்நிலை மற்றும், உளவியல் பார்வைகளோடு நோக்குதல்
4.    முடிவுகளில் பெண்களின் பங்கை உணர்த்துதல்.
5.    பெண்களின் கௌரவத்துக்கு பங்கம் வராமல் பார்த்துக் கொள்ளல் போன்றவை கவனிக்கப்பட வேண்டும்.


இளம் பராயத்தினர் விடயங்களை உளவளத் துணையாளர்கள், உளவியலாளர்கள், சமூக பணியாளர்கள் மற்றும் துறைசார் நிபுணர்களின் (Multi disciplinary approach)   என்ற கூட்டுக் குழுவே அன்றி எல்லோராலும் கையாளப்படுவதானது பிரச்சினைகள் வேறு வடிவம் எடுத்தல், விளைவுகள் அதிகரித்தல், உளவியல் சிக்கல்கள், தற்கொலை எண்ணங்கள், மன அதிர்ச்சி (Trauma),   கலங்கம்(Stigma)   Discrimination என்பனவற்றையே ஏற்படுத்தும்.

மேலும் பொதுவாக தடுப்பு உத்திகள் பொதுமக்களுக்கு அறிவூட்டல் எனும் இரண்டாம் நிலை விடயம் அல்ல. மாறாக தனியாள் அறிவு (Case Study), நேர் காணல், கேள்வி நிரல் முறை, மருத்துவ முறை போன்றவைகளே ஆகும்.

 
References

References
Barker, Ian.2006. Cambridge International Diploma for teachers and trainers. New Delhi: Foundation books Pvt. Ltd.
Gunawardena G.2007. Learning Process. London: Commonwealth secretariat.
Mahmud,Jafar.1991.Development psychology. New Delhi: A B H publishers
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்

    Like On Facebook

    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    விளம்பரம்