எனது இணைப்பக்கத்துடன் இணைந்து தங்களுடைய கருத்துக்களையும் தெரிவித்துக் கொள்ளுங்கள்
Published Date: December 09, 2013

மன அழுத்தத்தை களைவோம்; வெற்றிகளைப் பெறுவோம்




மன அழுத்தம் பலருக்கும் பிரச்சனையாக இருக்கிறது. இதனால் வெற்றி வாய்ப்புகளையும் இழக்க நேரிடுகிறது.

மன அழுத்தத்திற்கு பல காரணங்கள் உள்ளன. அதனை கண்டறிந்து நிவர்த்தி செய்வதன் மூலம், பல வெற்றிகளை குவிக்கலாம்.

மன அழுத்தத்தை குறைக்க சில செயல்பாடுகளை தொடர்ந்து கடைபிடிக்கும்போது, மன அழுத்தத்தை குறைக்கலாம்.
பலம் மற்றும் பலவீனத்தை அறிதல்
உங்களிடம் உள்ள பலம் என்ன என்பதை அறிந்து, அதை வெற்றிக்கான படிக்கல்லாக மாற்ற வேண்டும். பலவீனத்தையும் அறிந்து, அதையும் பலமாக மாற்ற வேண்டும்.
மாற்றத்திற்கு தயாராக இருத்தல்
நமது வாழ்வின் ஒரு பகுதிதான் மாற்றம் என்பது. மாற்றத்தை ஏற்று அதன் நிறை குறைகளை அறிந்து செயல்படும் போது, மன அழுத்தத்தை குறைக்கலாம்.
முன்னெச்சரிக்கையாக இருத்தல்
எந்த செயலையும் பல முறை யோசித்து செய்தல், நலம் பயக்கும். தனக்கென கட்டுப்பாடுகளை வகுத்து, அதை செயல்படுத்தும் போது, மன அழுத்தத்தை குறைக்கலாம். குறிப்பிட்ட நேரத்திற்குள் குறிப்பிட்ட வேலையை, சிறப்பாக செய்ய முயற்சித்தல் வேண்டும்.
சிறந்த சமூக உறவு
நல்ல சுமூக உறவுகள் கொண்டிருப்பதே, மன அழுத்தத்தை குறைக்க சிறந்த வழி. உங்கள் நண்பர்களில், சரியான வழிகட்டுதல் செய்கிறவர் யார் என கண்டறிந்து, அவரோடு நட்பை தொடருங்கள். தீமை செய்யும் நண்பர்களின் நட்பை துண்டித்து விடுங்கள்.
உறுதியாக இருத்தல்
உங்கள் பாதை மற்றும் கட்டுப்பாடுகளில் உறுதியாக இருங்கள் .
நல்ல பழக்க வழக்கம்
பிறரது மனம் நோகாமல் அன்போடு செயல்படுங்கள். சிறந்த பழக்கம் மற்றும் பண்பு நலன்களை வளர்த்துக் கொள்ளுங்கள்.
தேவைப்படும்போது உதவி
நம் கைதான் நமக்கு பலம். பெற்றோர், ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்கள் போன்றோரிடம் தேவைப்படும் பொழுது, அவர்களது உதவியை நாடுங்கள்.
பிரச்னையை தீர்க்க கற்றுக் கொள்ளல்
பிரச்னையை நேர் வழியில் எதிர் கொள்ளுதல். சிறந்த மனப்பாங்குகளை வளர்த்துக் கொள்ளுதல். வயது முதிர்ந்தோரிடம் பிரச்னைக்கான காரணங்களை கூறி, ஆலோசனை பெறுதல் சிறந்தது.
ஓய்வு எடுத்தல்
மனிதனுக்கு ஓய்வு அவசியம். ஓய்வு எடுப்பதால் மூளை மற்றும் உடம்பு புத்துணர்ச்சி பெறுகிறது. தகுந்த ஓய்வு எடுக்கும் போது மன அழுத்தத்தை குறைக்கலாம்.
சிறந்த வாழ்க்கை முறை
உணவு, தூக்கம், உடற்பயிற்சி ஆகிய மூன்றும் சிறந்த வாழ்க்கை முறைக்கு அவசியம். இதை சரியாக மேற்கொள்ளும் போது, மன அழுத்தத்தை குறைக்கலாம்.
இவற்றை தொடர்ந்து கடைபிடித்தால், மனஅழுத்தத்தை குறைத்து, வெற்றிப் பாதையில் செல்லலாம்.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்

    Like On Facebook

    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    விளம்பரம்