இத்தகைய முக்கியத்துவமுள்ள கல்வியை வழங்குவதில் பாடசாலைகள் அன்று தொட்டு இன்றுவரை பெரும் பணியாற்றி வருகின்றன.
மாணவர் கற்றல் விருத்தியில் 'வகுப்பறை' என்பது பிரதான இடத்தை வகிக்கின்றது. ஏனெனில் தற்கால நடைமுறையில் கல்வி முறையானது மாணவர் மையக்கல்வியாகவே காணப்படுகிறது. இதன் அடிப்படையில் இன்றைய கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் அனைத்தும் '5நு' எனும் அமைப்பு முறையை மையமாகக் கொண்டது. இங்கு ஆசிரியரின் வகிபங்கானது வழங்குபவராகவூம் ஒரு வளவாளராகவூம் அமைய மாணவர்களின் துலங்கல் மாத்திரமே வகுப்பறையில் உயிரோட்டமுள்ளதாக அமையவேண்டும் என்பது இங்கு எதிர்பார்க்கப்படுவதாகும்.
இன்றைய பாடசாலை சமூகம் ஆசிரியர் மாணவர் பெற்றெளரை உள்ளடக்கிய ஒரு கூட்டுக் குடும்பமாகும். வகுப்பறைக் கற்றல் - கற்பித்தல் செயற்பாடுகளின் வெற்றியானது ஆசிரியர்– மாணவர் உறவிலேயே தங்கியூள்ளது. 'கற்றல்' என்பது வெறுமனே புத்தகப்படிப்புஇ மனனமிடல் என்பதில் முடங்கிவிடாது நடத்தையின் நிரந்தர மாற்றத்திலேயே தங்கியூள்ளது. 'குறெளன் பக்' எனும் உளவியலாளரின் கூற்றுப்படி 'அனுபவத்தின் பயனால் ஏற்படும் நடத்தை மாற்றமே கற்றலாகும்' இந்த அனுபவம் பெறப்படுவதும் ஆசிரியர் – மாணவர் சுமூகமான உறவிலேயாகும்.
அனுபவக் கற்பித்தல் மாணவருக்கு இன்றியமையாத ஒன்றாகக் காணப்படுகின்றது. எனவே மாணவர்களுக்கு கற்பிக்கும் போது இதற்குதவியாக வர்ணப்படங்கள்இ கைப்பணிப் பொருட்கள்இ நிழற்படங்கள்இ பாடம் தொடர்பான ஒலிப்பதிவூ நாடாக்கள்இ தொலைக்காட்சிஇ மல்டி மீடியாக்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி கற்பித்தல் அடைவூமட்டத்தை சிறப்பாக அமைக்க வேண்டியது ஆசிரியரின் கடமைப்பாடாகும்.
ஆசிரியர்இ தொழிலில் உடற் சிரமத்திலும் பார்க்க உள்ளத்தையூம் நுண்ணறிவையூம் பயன்படுத்த வேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு ஆசிரியர்கள் கவனம் செலுத்த வேண்டியவர்களாக உள்ளனர். எனவேஇ ஆசிரியர்கள் ஆசிரியப் பணி சார்ந்த கல்வியோடு பரந்தளவில் உயர் மட்ட கல்வியையூம் பெற்றவராக இருத்தல் வேண்டும். ஆசிரியர்
தொழில் செய்யூம் தகைமையால் அதாவது, வகுப்பறை நிருவாக ஒழுங்கமைப்பு, மாணவரைப்புரிந்து கொள்ளல், கற்பித்தல், தொழில் நுட்பங்கள் ஆகியவற்றை அறிவூ, திறன், மனப்பாங்கு, பயிற்சி, சம ஆளுமை என்பவற்றால் தேவையானவற்றை மாணவருக்கு வழங்குதல், அத்துடன் பாட அறிவோடு மாணவர்களை அறிந்து தமது தொழிலையூம் திறமையோடு செயற்படுத்தி செய்யவேண்டியது ஆசிரியர் வெற்றிக்கு வழிவகுக்கக்கூடியதாக அமைகின்றது.
இதனடிப்படையில் தான் ஆசிரியர் கற்பிப்பவர் மட்டுமன்றி வகுப்பறை முகாமை செய்யூம் ஒரு முகாமையாளரும் ஆவார்;. முகாமையாளர் என்ற வகையில் அவரின் முகாமைத்துவக் கடமைகளை சரியாக வகுக்கின்ற போது அது மாணவரின் கற்றல் விருத்திக்கு உதவியாகக் காணப்படுகிறது.
முகாமைத்துவக் கடமைகளைக் கூறுகின்ற போது
1) திட்டமிடல்
2) ஒழுங்கமைத்தல்
3) தீர்மானம் மேற்கொள்ளல்
4) ஊக்குவித்தல்
5) நெறிப்படுத்தல்
6) ஒழுங்கமைப்பு செய்தல்
7) கட்டுப்படுத்தல்
8) மதிப்பீடு செய்தல்
9) மாணவரை அறிதல்
போன்றவற்றைக் கூறலாம்.
'திட்டமிடல்' என்பது குறிப்பிட்ட வருடத்தில் செய்ய வேண்டிய கருமங்களை திட்டமிடுவதால் பாட விதானம், இணைப்பாட விதான நடவடிக்கைகளை மேற்கொள்ளல், வகுப்பறை சுத்தம், வகுப்பறை ஒழுங்கமைப்புத் திட்டங்களை செய்வித்தல், வகுப்பறை நிதி நடவடிக்கைகள், வகுப்பறை உபகரணங்களை செய்வித்தல் என்பன திட்டமிடலுடன் தொடர்புடைய அம்சங்களாகும்.
'ஒழுங்கமைத்தல்' என்பது வகுப்பறையைத் திட்டமிட்டு ஒழுங்கமைத்துக் கொள்ளுதல், சக ஆசிரியருடன் ஒத்துழைத்தல், பங்களிப்புச் செய்தல், உரிய கால வேளையில் பாடங்களை முடித்தல், ஆசிரியர்ர்– மாணவர் – அதிபர் ஆகியோருக்கிடையே இடைத்தொடர்புகளை மேற்கொள்ளல் என்பன ஒழுங்கமைப்பின் அம்சங்களாகும்.
'தீர்மானம்' எனும் போது கற்றல், கற்பித்தலில் சிறந்த தீர்மானம் மேற்கொள்ளலும் உளவியல் கருத்துக்கு அமைவாக தீர்மானங்களை எடுத்தலும் இதில் இடம்பெறுகின்றன.
'ஊக்குவித்தல்' ஆனது ஒவ்வொரு மாணவரினதும் திறமைகளைக் கொண்டு மாணவரை அறிதல், ஏனைய மாணவர்களை ஊக்குவித்தல், மதிப்பீடுகளுக்கு அமைய பின்னூக்கம் செய்வித்தல் எனலாம்.
'நெறிப்படுத்தல்' என்பது மாணவர் நல்ல பழக்கவழக்கங்களை மேற்கொள்ளலும்இ சட்டதிட்டங்களுக்கமைய நடக்கச் செய்தலும்இ ஆலோசனை கூறி வழிகாட்டலும் நெறிப்படுத்தல் முறைகளாகும்.
'ஒழுங்கமைப்பு' ஆனது அதிபர் - ஆசிரியர்கள் - மாணவர்கள் தொடர்பு சிநேக பூர்வமான கற்பித்தலுக்கு அமைய ஒழுங்கமைக்கப்படுதல் வேண்டும்.
'கட்டுப்படுத்தல்' ஆனது மாணவர்களை உளவியல் அடிப்படையில் கட்டுப்படுத்தல், பாடசாலை சட்டங்களை ஒழுங்கமைத்து நிலைநாட்டல், பாடசாலைக் கொள்கைகளைக் கட்டுப்படுத்தல்,கட்டுப்பாடுகளை விதித்தல், உளவியல் அடிப்படையில் தண்டித்தல் போன்றன இதற்கான கட்டுப்பாடுகளாகும்.
'மதிப்பீடு' செய்தலானது, முகாமைத்துவம் செய்யூம் போது மதிப்பிடுதல், பரிகாரம் கண்டு மறு திட்டமிடுதல், முறையாக நடைமுறைப்படுத்தல் என்பனவாகக் காணப்படுகிறது.
'மாணவரை அறிதல்' என்பது மதிப்பீட்டு அடிப்படையில் மாணவரை அறிந்து குண நல இயல்புகளை அறிந்து உளப்பாங்கையூம் வாழ்க்கைப் பாதையையூம் அறிதல் அவசியம் ஆகின்றது.
எனவே இவைகள் அனைத்தும் வகுப்பறை முகாமையாளராகிய ஆசிரியரின் கடமைப்பாடுகளாகும். இவ்வாறு முகாமை செய்கின்ற ஆசிரியர் மாணவரின் கற்றல் விருத்திக்கு தமது பங்களிப்பு என்ன என்பதை விளங்கிக் கொள்ள வேண்டியூள்ளது. அவையாவன
மாணவர் சுயவிபரக் கோவையைப் பெறுதல் மூலம் ஆசிரியர் - மாணவர் இடைத்தொடர்பை கட்டியெழுப்புதல்.
வகுப்பறைச் சூழலை ஒரு சுமூகமான மகிழ்ச்சிகரமான நிலையில் பேணுதல்.
வகுப்பறையில் தேவையான கணிப்பீடுகளை வைத்திருத்தல்.
கற்றல் கற்பித்தலுக்கு பொருத்தமான உபகரணங்களை கையாளுதல்.
மாணவர்களின் ஒழுக்க நடவடிக்கைகளை மேற்பார்வை செய்தலும் ஆலோசனை வழங்கலும்.
மாணவரின் ஆளுமையை விருத்தி செய்தலும்இ தலைமைத்துவப் பண்பை வளர்த்தலும்.
மாணவரின் அறிவூஇ திறன்இ மனப்பாங்குஇ பயிற்சிகளை விருத்தி செய்தல்.
சிறந்த மாணவர்களையூம்இ நற்பிரசைகளையூம் சமூகத்தில் உருவாக்குதல்.
இவ்வாறான கடமைகளை ஆசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் மேற்கொள்ளும் போது அதனூடாக கற்கும் திறனை முழுமையாக விருத்தி செய்யவூம் பயிற்சி அனுபவம்,ஒழுக்கம், சிறந்த மனப்பாங்கு, விழுமியங்களைப் பெற்ற ஒரு சிறந்த குடிமகனாக ஒவ்வொரு மாணவனையூம் சமூகத்திற்கு அனுப்பி வைக்கக் கூடிய இயலுமையை பாடசாலையின் முதுகெலும்பாகத் திகழும் ஆசிரியர் பெறக்கூடியதாக அமைகின்றது.
ஆசிரியர்கள் போதிப்பவர்களாக மாத்திரமன்றி எல்லாத்துறைகளிலும் சிறந்து விளங்க வேண்டும். தமது தொழிலும் கற்பித்தலும் மாணவரின் கரிசனை கொண்டு விளங்குதலே நல்லாசிரியரின் பண்பாகும்.
வகுப்பறையில் ஆசிரியர், மாணவர்களிடையே பாராபட்சம் காட்டாது நடுநிலைமை வகிக்க வேண்டும். ஒவ்வொரு மாணவர் மனதிலும், 'ஆசிரியர் தன் மீது கவனம் செலுத்துகிறார், தனது எதிர்கால வாழ்க்கையில் அக்கறை கொண்டுள்ளார்' என்ற உணர்வூ ஏற்படும் படி நடந்து கொண்டால் வகுப்பறையில் ஆசிரியர் – மாணவர் உறவூ நன்றாக அமையூம்.
இங்கு வகுப்பறை முகாமையாளரான ஆசிரியர் ஒருவர் தனது மாணவன் பற்றி கொண்டுள்ள அக்கறை உணர்வூ மாணவனது கற்றலை ஊக்குவிக்க உதவூகின்றது. இன்றைய கால கட்டத்தில் கட்டாயக் கல்வி என்பது 5-14 வயது வரை நிர்ப்பந்த நிலையில் இருந்தாலும் அவனின் உள உணர்வூக்கு மதிப்பளித்து ஆசிரியர்
செயற்பாடு அமையூம் போது அது அவனுக்கு தன்னம்பிக்கையை வளர்க்க வழிவகுக்கிறது. மற்றும் கல்வி புகட்டல் இலகுவானதாக அமைவதுடன் பாடசாலையில் அல்லது வெளி இடங்களில் நடைபெறும் விழாக்கள், கலை நிகழ்ச்சிகளில் பங்கு பற்றுவதால் மாணவர்களின் தலைமை தாங்கும் பண்பு, ஒத்துழைத்தல், விட்டுக் கொடுக்கும் மனப்பாங்கு, கட்டளைகளை ஏற்று நடத்தல்இ வெற்றி தோல்விகளை சமமாக ஏற்றல் போன்ற பண்புகள் வளர்கின்றன.
எனவேஇ இத்தகைய சிறந்த பண்புகளையெல்லாம் கல்வியோடு சேர்த்து வழங்கும் நிறுவனமாகிய பாடசாலையில் அதிபரின் சிறப்பான நிருவாகம்இ ஆசிரியர்களின் திறமையான கற்பித்தல்இ மாணவரின் கற்றல் செயற்பாடுகள் என்பன சிறந்து விளங்க வேண்டும். அவ்வாறு அமையூமாயின் சமுதாயத்தில் ஓர் அங்கமான பாடசாலையானது நாட்டிற்கு சிறந்த பிரசைகளை வழங்கிக் கொண்டே இருக்கும் என்பதில் ஐயமில்லை.