எனது இணைப்பக்கத்துடன் இணைந்து தங்களுடைய கருத்துக்களையும் தெரிவித்துக் கொள்ளுங்கள்
Published Date: August 28, 2017

ஆசிரியர் வாண்மைத்துவம் (Teacher Professionalism)

வாண்மைத்துவம் எனும் பதம் தற்போது பல்வேறு துறைகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. என்hறலும் எல்லாத்துறைகளும் அதன் வாண்மையை அடைந்துள்ளதை காண்பதொன்பதும் குறைவாகவே உள்ளது. இவ்வாறிருக்க வாண்மைத்துவத்தை வரைவிலக்கணப்படுத்துவதும் இலகுவான ஒன்றல்ல என்பதும் புரிகின்றது. “வாண்மை” என்பது யாது என்பதை தீர்மானிப்பதற்கான அடிப்படையாகக் கொள்ளும் நியதிகள் காலம், கவனத்திலெடுக்கப்படும் பணி ஆகியவற்றுக்கேற்ப வேறுபடும்.

“கற்பித்தல்” என்பது ஒரு வாண்மை விருத்தி என்ற அடிப்படையில் ஆசிரியர்கள் அதனை விளங்கிக் கொள்ள வேண்டும் என்ற வகையிலும் கல்வியியலாளர்களால் வாண்மை தொடர்பான இயல்புகள் வகுக்கப்பட்டு அதனை விருத்தி செய்வற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எனினும் ஆசிரிய வாண்மை என்பது ஒரு பழமை வாய்ந்த ஒன்றாகும். அதேவேளை நவீனத்துவம் அடைந்து வரும் ஒரு துறையாகவும் இது உள்ளது. இப்படியான ஒரு துறையில் வாண்மையோடு தொடர்புபட்ட சில விடயங்கள் கணக்கெடுக்கப்படாமல் இருப்பதனால் அதனை வாண்மைமிக்க ஒரு தொழிலாக கணக்கெடுப்பதுமில்லை என்ற இயல்பு காணப்படுகின்றது.

இவ்வாறிருக்க இலங்கையில் ஆசிரியர் சேவை ஸ்தாபிக்கப்பட்டமையானது கற்பித்தலில் ஒரு தர மேம்பாடாகவே கருதப்படுகன்றது. ஆசிரியர் ஒருவர் தன்னுடைய கற்பித்தல் பணியை ஆரம்பித்தலே அவரின் வாண்மைத்துவம் ஆரம்பிக்கின்றது. கற்பித்தலை ஒரு முழுமையாக வாண்மையாக கருத முடியுமா? என்பது சில தசாப்தங்களாக கல்வியலாளர்களிடத்தின் கவனத்தில் உள்வாங்கப்பட்டுள்ளது. பூரணமான வாண்மைத்து இயல்புகளை இனம் காண்பதன் மூலம் கற்றபித்தல் ஒரு வாண்மை தானா? எனும் பிரச்சிரனையைத் தீர்த்துக் கொள்ளலாம். ஆவ்வாறான இயல்புகளை காணும் போது.

  • தனது சேவை பொதுமக்களுகாவே தான் என்ற உணர்வு கொண்டிருத்தலும், அதற்காக தன்னை தன் வாழ்நானை அர்ப்பணித்தலும்.
  • பொமக்களையும் பார்க்க தன்னிடத்தில் கூடுதலான அறிவு, திறன், மனப்பாங்கு காணப்படல் வேண்டும்.
  • கோட்பாடுகளை நடைமுறைப்படுத்துபவராக இருத்தல் வேண்டும்.
  • நீண்டகால சிறப்புப் பயிற்சி பெற்றிருத்தல் வேண்டும் 
  • உயரிய கௌரவமும், பொருளாதாரத்தோடும் இருத்தல் 
  • சான்றுப்பத்திரம் அல்லது வாண்மைத்துவத்தில் பிரவேசிப்பதற்கான தகைமை கொண்டிருத்தல்; வேண்டும்.
  • வாண்மையில் ஈடுபடுவோர் தொடர்பாக பொதுமக்களின் நம்பிக்கையிலும் உயரிய மட்டத்திலும் இருத்தல் வேண்டும்

மேற்குறித்த பண்புகளுடன் ஆசிரியர் தொழிலை ஒப்பிடுகையில் கற்பித்தலானது பூரணமான ஒரு வாண்மை விருத்தி அல்ல என்பது தெரிகின்றது. இதற்கான காரணம் வாண்மை விருத்த்திக்கு உரிய எல்லாம் பண்புகளும் அதில் அடங்கிராமையுமேயாகம். கற்பித்தல் என்பது ஒரு குறைவாண்மை என அன்ரியாட்டி எற்சியோனி அதற்கான காரணங்களையும் விளக்கியுள்ளார்.

  • 1. குறிகியதாக ஆசிரியரது பயிற்சிக்காலம் அமைந்திருத்தல் 
  • 2. அவர்களின் நிலை தாழ்ந்த அல்லது மத்திய நிலையிலும், தொடர்பாடலோடு உள்ள உரிமைகள் குறைவாகவுமிருத்தல்
  • 3. சிறப்பறிவு குறைவாக இருத்தல்.

ரொபட் ஹொவஸ்கி என்பவரின் கூற்றுப்படி கற்பித்தல் ஒரு வாண்மையாக விருத்தியடைந்து வருகின்றது எனலாம். இது குறைவாண்மையை விட உயர்ந்த நிலையில் உள்ளது. இது வாண்மையை அண்மித்தவண்ணாமாகவுமுள்ளது

பின்வரும் வாண்மைப் பண்புகள் ஆசிரிய வாண்மையில் காணப்படாமையால் ஆசிரியர் வாண்மைத்துவம் தொடர்பான பிரச்சினைகள் எழுந்துள்ளன.

  1. 1. பொதுமகன் ஒருவன் பெற்றுள்ள அறிவு, திறனை விட கூடுதலான அறிவைப் பெற்றிருத்தல்
  2. 2. சான்றுதழ் பத்திரம் பெற்றிருத்தல் மற்றும் வாண்மையில் சேர்த்துக் கொள்வரற்கான தகைமைகளைப் பெற்றிருப்பதுடன் கட்டுப்பாட்டுக்குள் இருத்தல் 
  3. 3. தெரிவு கொண்ட பரப்புக்களில் பணிகள் தொடர்பாக சுயமாக தீர்மாமெடுக்கும் தன்னதிகாரம்.
  4. 4. உயரிய கொளரவமும் பொருளாதார உறுதிப்பாடும் இருத்தல் 
  5. கற்பித்தல் தரத்தை மேம்படுத்துவதற்காக அரசு மேற்கொள்வதற்காக அரசு மேற்கொண்டுள்ள முயற்சி கற்பித்தல் ஒரு வாண்மையாக விருத்தியடையத் தொடங்கியுள்ளது.


(ஆக்கம் : ஸிப்னாஸ் ஹாமி – 0779073696)
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்

    Like On Facebook

    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    விளம்பரம்