எனது இணைப்பக்கத்துடன் இணைந்து தங்களுடைய கருத்துக்களையும் தெரிவித்துக் கொள்ளுங்கள்
Published Date: August 28, 2017

ஆசிரியரின் தொழில்வாண்மையை விருத்தி

ஆசிரிய தொழிலானது வைத்திய தொழில், தாதித்தொழில் போன்ற மனிதர்களோடு ஒன்றினைந்து வேலை செய்கின்ற தொழிலாக கருதப்படுகின்றது. இவ்வாறான தொழில்கள் தொழில்சார் தொழில்கள் அல்லது பதவிகள் எனப்படுகின்றன. அவ்வாறான தொழில்களை மேற்கொள்வோர் தங்களுடைய தொழில்சார் விருத்தியை(வாண்மைத்துவ) அதிகரித்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

அவ்வாறான வாண்iமாத்துவ விருத்தியின் அடிப்படையில் ஆசிரியர் ஒருவர் மேற்கொள்கின்ற பணிகள் ஆசிரியர் வகிபகம் எனப்படுகின்றது. தொழில்சார் திறன் அடிப்படையில் ஆசிரியர் ஆற்றும் வகிபகங்கள் 3 காணப்படுகின்றன.

  1. கடத்தல் வகிபகம் - Transmission Role

  2. பரிமாற்று வகிபகம் - Transaction Role

  3. நிலைமாற்று வகிபகம் - Transformation Role
1. கடத்தல் வகிபகம் - Transmission Role 

இங்கு ஆசிரியர் தான் ஒரு அறிவு நிரம்பியவர் என்ற நிலையிலிருந்து மாணவர்களுக்கு அறிவை வழங்கும் ஒருவர் என்ற கருத்து நிலையில் மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்கும் செயற்பாட்டாளராகவே ஆசிரியர் இவ்வகிபகத்தில் காணப்படுகின்றார்.இங்கு கற்றலை விட கற்பித்தலுக்கே முக்கியத்துவம் வழங்கப்படுகின்றது

  • அதாவது நீர் நிரம்பிய குடத்தில் சிறு பாத்திரத்தில் நீர் ஊற்றுவது போன்று ஆசிரியர் அறிவை விநியோகிப்பவராக அதிகாரத்துடன் காணப்படுவார். இங்கு ஆசிரியர் மையக்கற்பித்தல் நடைபெறுகின்றது. (கற்பித்தல் மட்டும்)
  • மாணவர்கள் செயற்பாடுன்றி வெறுமெனே செயற்பாடற்ற செவிமடுப்பவர்ளாக ஆக்கபூர்வமற்றவர்களாக காணப்படுவர். இவகளின் சிந்தனைக்கோ, விமர்சனத்திற்கோ இடமில்லை.
  • ஆசிரியர் கணிப்பிடுவதற்கு சந்தர்ப்பம் இல்லை. ஆசிரியரிடமிருந்து ஒரு திசையூடாகவே மாத்திரம் தொடர்பாடல் நடைபெறும். மாணவர்களின் உந்தல்கள் குறைவாகும்.
  • குணநல உள்ளீடுகளாக கரும்பலகை, வெண்கட்டி மாத்திரமே பயன்படுத்தப்படும்.
  • மாணவர் அறிவு மாத்திரமே வளர்க்கப்படும்.
  • மாணவர்களிடத்தில் புத்தாக்கம் ஏற்பட சந்தர்ப்பம் குறைவு.
  • திறன் மனப்பாங்குகள் ஏற்படவாய்ப்புக் குறைவு.
  • சமூகத்திறன்கள் ஏற்படுவது குறைவு
  • முன்வைக்கும் திறன் குறைவாகக் காணப்படும்.
  • தோடர்பாடல், இடைவினைகள் திறன்கள் மிக குறைவான நிலையிலையே காணப்படும்.
ஆசிரியர்-----------------------> மாணவர்

2. பரிமாற்று வகிபகம் - Transaction Role
  • ஆசிரியரின் செயற்பாடுகள், மாணவர் மையமாதாகவும் வகுப்பறை ஓரளவு ஜனநாயத்தன்மை கொண்டதாகக் காணப்படும்.
  • இங்கு ஆசிரியர் வசதி வழங்குபவராகக் காணப்படுவார் அல்லது கற்றல்-கற்பித்தல் செயற்பாட்டை முன்னெடுத்துச் செல்ல உதவும் தலையீடாகச் செயற்படுவார். தொடர்பாடல் இரு திசைகளில் ஆரம்பித்து ஆசிரியர்-மாணவர், மாணவர்-ஆசிரியர் எனப் பல திசைகளில் நிகழும்
  • கலந்துரையாடல், சம்பாசனை மூலம் கற்பித்தல் நிகழும்
  • பாட உள்ளடக்கத்தை கட்டியெழுப்பும் போது எளியவற்றிலிருந்து சிக்கலானவற்றிற்கும், அறிந்தவற்றிலிருந்து அறியாதவற்றிற்றும் கொண்டு செல்வார்
ஆசிரியர்---------------------->மாணவர்
                    <----------------------

3- நிலைமாற்று வகிபகம் - Transformation Role
  1. இங்கு ஆசிரியர் கோட்பாடு ரீதியான விடையங்களை அனுபவங்களின் மூலம் தேர்ச்சியாகவோ அல்;லது அறிக்கையாகவோ மாற்றமுறச் செய்யும் ஒரு மாற்று முகவராக செயற்படுவார்.இங்கு செயலறு நிலையில் ஆசிரியரின் செயற்பாடுகள் அமையமாட்டாது. மாறாக மாணவர்களை செயலறு நிலையில் அனுபவங்களைப் பெறுவரற்கான செயற்பாடுகளே அதிகம் இடம் பெறும். கற்பித்தலை விட கற்றல் செயற்பாடுகளுக்கு முதலிடம் வழங்கப்பட்டு மாணவர்களைச் சுயமாக அனுபவங்களைப் பெறுவதற்கான சந்தர்ப்பம் ஆசிரியலினால் ஏற்படுத்திக் கொக்கப்படும்.
  2. இங்கு செயற்பாடுகளின் அனுபவங்களின் அடிப்படையில் கற்பதற்கு வாய்ப்பு ஏற்படும்.
  3. செயற்பாட்டறிவை கோட்பாட்டறிவாகவும், கோட்பாட்டறிவை செயலறிவாகவும் நிலைமாற்றம் செய்பவராக ஆசிரியர் தொழிற்படுவார்.
  4. அனுபவங்களின் அடிப்படையில் கற்பித்தலை மீள ஒழுங்குபடுத்துவதற்காக ஆசிரியர் செயற்படுவார்.
  5. மாணவர் மையக் கற்றல் வெயற்பாடு நடைபெறும்.
  6. கற்பித்தலிலும் பார்க்க கற்றலுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும்.
  7. குழுவாக மாணவர்கள் செயற்பாடு நிகழும்.
  8. அறிவுடன், திறனும், மனப்பாங்கும் மாணவர்களிடத்தில் வளர்க்கப்படும்.
  9. முன்வைத்தல் ஆற்றல் மானவர்களிடத்தில் வளர்க்கப்படும்.
ஆசிரியர்---------------------->மாணவர்---------------------->மாணவர்
                      <---------------------                       <---------------------



கடத்தல் வகிபாகம்
பரிமாற்று வகிபாகம்
நிலைமாற்று வகிபாகம்
  • - ஆசிரியரின் செயற்பாடு மாத்திரம் நிகழும் 
  • - ஆசிரியர் மையக் கற்பித்தல் நிகழும் 
  • - கற்றலை விட கற்பித்தலுக்கே அதிக முன்னுரிமை
  • - தனியால் செயற்பாடு 
  • - புத்தாக்கத்திற்கு சந்தர்ப்பம் குறைவு 
  • - சமூகத்திறன் ஏற்படாது 
  • அறிவு,திறன்,மனப்பாங்குகள் ஏற்பட வாய்ப்புக் குறைவு
  • - முன்வைத்தல் குறைவு 
  • - கரும்பலகை, வெண்கட்டி மாத்திரம் பயன்படும்
  • - மாணவர்களுக்கு சொல்லிக் கொடுப்பவராக ஆசிரியர் செயற்படுவார்.

  • - ஆசிரியர் வசதி வழங்குபவராகச் செயற்படுவார் 
  • - ஓரளவு மாணவர் மையக் கற்பித்தல் கற்பித்தலுக்கே முக்கியத்துவம் 
  • - தனியால் செயற்பாடு
  • - புத்தாக்கத்திற்கு சந்தர்ப்பம் குறைவு
  •  - சமூகத்திறன் குறைவு
  • -அறிவு, திறன், மனப்பாங்குகள் ஏற்பட வாய்ப்புக் குறைவு
  • - முன்வைத்தல் குறைவு 
  • - தர உள்ளீடுகள் குறைவு
  • - ஆசிரியர் வசதி வழங்குபவராக காணப்படுவார்.

  • - ஆசிரியர் மறைமுகமாக விடையங்களைச் செய்யும் முகவராக செயற்படுவார்
  • - மாணவர் மையக் கற்பித்தல் நிகழும்க
  • - கற்பித்தலை விட கற்றலுக்கே முன்னுரிமை அதிகம் காணப்படும்கு
  • - குழுவாகச் செயற்படல்பு
  • - புத்தாக்கம் ஏற்பட சந்தர்ப்பம் அதிகம்ச
  • - சமூகத்திறன் விருத்தியடையும்அ
  • - அறிவுடன் திறனும், மனப்பாங்கும் அதிகமடையும்மு
  • - முன்வைக்கும் ஆற்றல் வளரும் 
  • - தரஉள்ளீடு உச்ச அளவில் பயன்படுத்தப்படும்ஆ
  • - ஆசிரியர் வளவாளரா செயற்படுவார். எல்லா மாணவர்களும் செயற்பாடுகளில் ஈடுபடுவர்.

இவ்வாறான வகிபாகங்களை மேற்கொள்ளும் ஆசிரியர்கள் மாற்றங்களுக்கு உட்பட வேண்டும் எனவும் அதற்குத் தேவையானதை பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்காக வாண்மை விருத்தியின் பொருட்டு தொழில்சார் விருத்திக்காக இலங்கையில் காணப்படும் வசதி வாய்ப்புக்களை பொருத்து பின்வரும் வகையில் வகைப்படுத்தலாம்.

ஆசிரியர் வாண்மையை விருத்தி செய்யும் பொருட்டு கல்வி வழங்கும் நிறுவனங்கள்

  1. 1. பல்கலைக்கழகம்
  2. 2. திறந்த பல்கலைக்கழகம்
  3. 3. தேசிய கல்வி நிறுவகம் (NIE)
  4. 4. தேசிய கல்வியற் கல்லூரி (NCoE)
  5. 5. ஆசிரியர் பயிற்சி கலாசாலை (GTC)
  6. 6. ஆசிரியர் கல்வி நிறுவகம் (TEI)
  7. 7. ஆசிரியர் கல்வி மத்திய நிலையம்

இவ்வாறு இலங்கையில் ஆசிரியர் கல்வியோடு சார்ந்த பல நிறுவனங்கள் காணப்பட்டாலும் அந்நிறுவனங்களுக்கிடையில் பல முரண்பாடான விடயங்களும் காணப்படுகின்றன இவ்வாறு முரண்பாடுகள் அல்லது பிரச்சிணையாக காணப்படும் விடயங்களை பார்க்கும் போது
  • வயதுக்கட்டுப்பாடு
  • தெரிவு முறை
  • பயிற்சி நெறிக்காலம்
  • பாடவிதானம் அல்லது கலைத்திட்டம்
  • கற்பித்தல் முறை
  • பெறுபேருகள்
  • தங்குமிட வசதி
இவ்வாறான விடயங்களில் குறைபாடுகள் அல்லது பிரச்சினைகள் காணப்படும் போது அவ்வாறான நிறுவனங்களில் இருந்து பயிற்றப்படும் ஆசிரியர்கள் வகுப்பறை கற்பித்தலின் போது பல்வேறு பிரச்சினைக்கு முகம் கொடுப்பதோடு பல்வேறு பிரச்சினைக்கும் சிரமங்களுக்கு உள்ளாகின்றனர்.
மேற்குறிப்பிட்ட பிரச்சினைகள் ஒரு நாட்டின் தலைவிதி 4 சுவர்களுக்குள் தீர்மானிக்கப்படுவதாக காணப்படுகின்றதாக உள்ளது.

எனவே தான் ஆசிரியர் கல்வி வழங்கும் நிறுவனங்களுக்கிடையில் காணப்படும் முரண்பாடுகள் அல்லது குறைபாடுகளை குறைத்து இல்லாமல் செய்து ஆசிரியத்துவ வாண்மையை விருத்தி செய்யும் பொருட்டு 1997ம் ஆண்டு புதிய கல்வி மறுசீரமைப்பு ஊடாக “ஆசிரிய கல்வி அபிவிருத்தி அதிகாரசபை” (Nயுவுநு – யேவழையெட யுரவாழசவைல in வுநயஉhநச நுனரஉயவழைn) எனும் நிறுவனம் உருவாக்கப்பட்டது.

இந்நிறுவனத்தின் பிராதன பணியாக முன்பு கூறப்பட்ட ஆசிரிய பணி நிறுவனங்களிடையே முன்னர் கூறப்பட்ட பிரச்சினைகளை இல்லாமல் செய்து ஆசிரியர் வாண்மையை விருத்தி செய்வதாகும். அதனை சீராக கடைபிடிப்பதற்கு இந்நிறுவனம் பிரதான 6 பணிகளை மையப்படுத்திமே மேற்கொள்கின்றது.
  1. 1. ஆசிரியர் கல்வி தொடர்பான கொள்கைகளையும், திட்டங்களையும் உருவாக்குதல்
  2. 2. அக்கொள்கைகளுக்குப் பொருத்தமான கலைத்திட்டத்தினை உருவாக்குதல்
  3. 3. அவற்றினை நடைமுறைப்படுத்துதல்
  4. 4. மதிப்பீடு செய்தல்
  5. 5. அவற்றினை ஆய்விற்கு உற்படுத்துதல்
  6. 6. மறுசீரமைத்தல்
என்பவற்வை மையப்படுத்தி ஆசிரியர் மையப்படுத்தி ஆசிரியர் வாண்மையை விருத்தி செய்வதில் முயற்சித்துக் கொண்டிருக்கின்றது.

PDE Download

(ஆக்கம் : ஸிப்னாஸ் ஹாமி – 0779073696)
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்

    Like On Facebook

    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    விளம்பரம்