எனது இணைப்பக்கத்துடன் இணைந்து தங்களுடைய கருத்துக்களையும் தெரிவித்துக் கொள்ளுங்கள்
Published Date: August 28, 2017

ஆசிரிய வாண்மைத்துவத்தின் புதிய போக்குகளும், விமர்சனங்களும்

கல்வி என்பது தனியால் விருத்திக்கும் அடிப்படைக் காரணியாக அமைவதால் அது தொடர்பாக தேசிய, சர்வதேச அடிப்படையில் பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சிக்கல் நிறைந்த இப்பணியை நிறைவு செய்வதற்குறிய தேர்ச்சிய்னைப் பெறும் போது ஆசிரியர்கள் தம்மிடம் கற்க வரும் இளம் சந்ததியினரை உரியவாறு தயார் செய்வதோடு எதிர்காலத்தில் எழுகின்ற சவால்களை துணிச்சலாக எதிர் கொள்ளவும் அவர்களின் கற்றலுக்கு அவர்களைப் பொறுப்புடையவர்களாக்கும் பணியும் ஆசிரியர் வாண்மை விருத்தியிலே தங்கியுள்ளது.

காலத்துக்குக் காலம் கல்வியில் முன்னேற்றத்தைக் கொண்டு வருவதற்காகக் கல்வியானது மறுசீரமைப்புக்கு உட்பட்டு வருகின்றது இவ்வகை மறுசீரமைப்புகளினால் மக்கள் பெரும் அடைவை எதிர் நோக்குகின்றனர். கல்வி அமைச்சில் ஈடுபடும் உயர்நிலை அதிகார்கலான திட்டமிடல் அதிகாரிகள், ஆராய்ச்சியாளர்கள், கல்வியலாளர்களின் கருத்துப்படி பயனுறுதியுள்ள மாணவர் கற்றல், கலைத்திட்ட அமுலாக்கம் பாடசாலை தொடர்பான முழுமையாக முன்னேற்றம் ஆகியவை தொடர்பாக ஆசிரியர்களே முக்கிய பங்காற்ற என நம்பப்படுகின்றது.

குறிப்பாக ஆசிரியர்களே வகுப்பறையில் மாற்ற முகவராக செயற்பட முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இலங்கையில் காலத்துக்குக் காலம் நடைமுறையின் கீழ்வரும் கல்வி மறுசீரமைப்பில் ஆசிரிய வாண்மை விருத்தி தொடர்பாக அதிக அக்கரை காட்டப்படுகின்றது. 

இலங்கையில் நடைமுறைப்படு;த்தப்படும் புதிய கல்வி மறுசீரமைப்பிலும் கூட ஆசிரியர் தொழில் சார் விருத்திக்கான பல்வேறு விதப்புரைகள் முன்மெழியப்பட்டுள்ளது. ஆசிரியர் வாண்மை விருத்தியை 2 பெரும் பகுதிகளாக வகுப்பது பொருத்தமாக காணப்படுகின்றது.


  1. 1. ஆசிரியர் தொழிலுக்கு முன்னர் வழங்கப்படும் பயிற்சி ஆசிரியர்                முன்தேவைப்பயிற்றி எனவும் அல்லது தொடக்க நிலைப்பயிற்சி                   எனவும் குறிப்பிட முடியும்
  2. 2. ஆசிரியர் தொழில் சேவையில் இருக்கம் போது வழங்கப்படும்                       தொழில்வாண்மைப் பயிற்சி தொடர்ந்து ஆசிரியர் பயிற்சி அல்லது          சேவைக்காலப் பயிற்சி எனவும் குறிப்பட முடியும்

இவ் இரு வகைப்பயிற்சிகளினை வழங்குவதன் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றவையாவன: ஆசிரியர் வாண்மை விருத்தியாகும் தேசிய கல்வித்தரத்தினை உயர்த்துவதற்கு அடிப்படையாக அமைவது ஆசிரியர்களின் தர முன்னேற்றமாகும். 

இன்று இலங்கையில் 2 லட்சத்திற்கு மேற்பட்ட ஆசிரியர்கள் கடமையாற்றுகின்றனர். இவர்களில் எத்தனை பேர் கற்பித்தலுக்குப் பொருத்தமான அடிப்படைத் தருதியனை பெற்றுள்ளனர் என்பது மிக முக்கியமான வினாவாகும். இந்த பிண்ணனியில் தான் கல்வியலாளர்கள் ஆசிரியர் பணி புரிகின்றவர்கள் போதிய தொழில் சார் தகைமைகளைப் பெற்றிருக்க வேண்டும் என வலியுருத்துகின்றனர்.

காலத்துக்குக் காலம் ஆசிரியர்களின் பங்கும் பணியும் வேறுபடுவதனை அவதானிக்கின்றோம். ஆசிரியர் பணி என்பது காலத்தில் தேவைக்கு ஏற்ப மாற்றமடையும் ஒன்றாகும். ஆதனால் தான் ஆசிரியர் பணியின் வரைவிலக்கணமும் மீளமைக்கப்படுவதற்கான புதிய கருத்துக்கள் உள்வாங்கப்பட்டு மாணவர்களின் தேவைகளை நிறைவு செய்யும் பொருட்டு ஆசிரியர் வாண்மை மாற்றியமைக்ககப்பட வேண்டும். கல்விச் சீரமைப்பு பயனுள்ள வகையில் சலுகத்தில் பிரதிபலிக்க வேண்டுமாயின் ஆசிரிய வாண்மை விருத்தி இன்றியமையாத ஒன்றாக காணப்படுகின்றது. 

PDF

(ஆக்கம் : ஸிப்னாஸ் ஹாமி – 0779073696)


  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்

    Like On Facebook

    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    விளம்பரம்