எனது இணைப்பக்கத்துடன் இணைந்து தங்களுடைய கருத்துக்களையும் தெரிவித்துக் கொள்ளுங்கள்
Published Date: August 24, 2017

இலங்கையின் கல்வி வரலாறு பகுதி-2)

இலங்கையின் பண்டைய உள்நாட்டுக் காலக் கல்வியின் முறையின் ஒழுங்கமைப்பு கட்டமைப்பானது தெளிவாய் ஆராயக்கூடிய மூன்று கல்வி நிலைகள் உள்ளன. ஆவையாவன :
  1. i.    ஆரம்ப நிலை கல்வியளித்த சிற்றூர்பள்ளி கிராமப் பாடசாலை                  (குருகெதர)
  2. ii.    இடைநிலை கல்விபுகட்டிய கோயிற்பள்ளி
  3. iii.   உயர்நிலை கல்வியளித்த பிரிவேனா
  4.         குருவின் வீடே சிற்றூர் பள்ளியாக விளங்கியது. சிற்றுர்களில் வசித்த         பெரும்பாலன பிள்ளைகள் இவ்வாறான வீட்டுமையச் சிற்றூர்                       பள்ளிகளில் ஆரம்ப நிலை கல்வி பெற விரும்பின. இப்பள்ளிகள்                   மேலை நாட்டுப் பாடசாலைக் கல்வி இலங்கையில் அறிமுகமாகும்             வரை தொடர்ந்து இயங்கியது.

இடைநிலைக் கல்வி பெற விரும்பியோர் இக்கோவிற் பள்ளிகளில் சேர்ந்து கொண்டனர். இத்தகைய பள்ளிகள் தமது பாராமரிப்புக்காக புரவலர்களான மன்னர்கள் வழங்கிய மானிய நிலம் போன்ற நன்கொடைகளைப் பெரிதும்  சார்ந்திருந்தனர். துறவிகள், துறவியர் அல்லாதோர் ஆகிய இரு சாராரும் கல்வி பயில அனுமதிக்கப்பட்டட பிரிவேனாக்கள் பண்டைய இலங்கைக் கல்வியமைப்பில் உச்சிநிலைக் கல்வி வழங்கப்படும். நிலையங்களாகத் திகழ்நதன. மகாவிகாரை, அபயகிரி, ஜேதவனராமய என்பன அனுராதபுரத்தில் இருந்த முக்கியமான கல்வி நிலையங்களாகும். மேலும், சுநேத்திரதேவி, விகாமாதேவி, பத்மாவதி, சிறிமேவன் போன்ற பிரிவேனாக்கள் கி.பி. 15 நூற்றாண்டில் சர்வதேச இலக்கியப் புகழ் பெற்ற துறவிகள் தலைமை வகித்தவையாகும்.

இக்கல்வி முறையில் மதிப்பீடானது மாணவர் மனனமிட்டு ஒப்புவித்தலை ஆசிரியர் சரி பிழை பார்ப்பதாக இருந்தது. முறைசார் கல்வி முறையும் தன்னிறைவுப் பொருளாதாரமும் காணப்பட்டதாகவே கூறப்பட்ட போதிலும் இங்கு முழுமையான முறைசார் கல்வி முறை காணப்படவில்லை. இக்காலத்தில் பொருளாதார அமைப்புக்கு ஏற்ப முறைசாராக் கல்வி வேலைத்திட்டங்கள் செயற்படுத்தப்பட்டன. இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்த ஆரியர்கள் கொண்டுவந்த பொருளாதார முறைகள் பற்றிய அறிவு இந்நாட்டவர்களுக்கும் கற்பிக்கப்பட்டது. 

அத்துடன் மானியமுறை பரிபாலன அமைப்பினுடாக மானியமுறை பொருளாதார முறையும் நடைபெற்றது. நாட்டின் நிலைப்பாட்டிற்கு அவசியமான அறிவும் பயிற்சியும் மானிய முறைச் சமுதாயத்திற்கு ஏற்ற முறையில் அவ்வவ் வகுப்பினருக்கு ஏற்ற முறையில் முறைசாராக் கல்வியினுடாக வழங்கப்படுகின்றது. 

உதாரணம்: 
- யுத்த நுட்பம்
- வாள், ஈட்டி செய்வதற்கான நுட்பங்கள்
- நெசவு, உலோகத் தொழில், ஆபரண வேலைகள்
- குயவவேலைகள்
- தச்சு வேலைகள்
- உடை தயாரித்தல்
- வீடு நிர்மாணித்தல்
- சித்திர வேலைகள் முதலிய சகல துறைகளிலும் அறிவு திறனும் பெற்று             வாழ்ந்துள்ளார்கள். 

சகல துறைகளிலும் அறிவினை ஒரு முகமாக வழங்கப்படும் நிறுவன அமைப்புக் காணப்பட்டமைக்கான சான்றுகள் இல்லை. முறைசாராக் கல்வியினுடாகவே தமது அறிவு, திறன்களைப் பெற்றுக்கொண்டார்கள்.

பண்டைய கல்விமைப்பில் சமயத்துறைக் கல்விக்கும் அறநெறிக் கல்விக்கும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. பௌத்த குருமார்கள் உபதேசங்கள், கிரியைகள், சடங்குகள் எனும் முறைசாராக் கல்வி வழிகள் மூலம் பொதுமக்களின் உள்ளங்களில் ஒழுங்க விழுமியங்களைப் பதித்தார்கள்.
பெண்கள் கல்வி பயிலும் வாய்ப்பு தாழ்நிலையில் காணப்பட்டது. எனினும் நடனம், ஓவியம் போன்ற பாடங்களில் அவர்கள் உயர்சிறப்புத் தொழிற் கல்வி பெறும் வாய்ப்பு இருந்தது.

கல்வி முகாமை மன்னர்களின் பேராதரவில் செழுமை கண்டது. இந்த ஆதரவு சிங்கள இராச்சியங்களின் சீர்குலைவினால் கிடைக்காமல் போனதும் கல்வித்துறை வீழ்ச்சிக்கு ஒரு காரணமாகும்.


பிறநாட்டுப் படையெடுப்புக்கள் காரணமாகத் தென்மேற்குத் திசை நோக்கிய இடப்பெயர்ச்சியை அடுத்து நீரியலமைப்புச் சார்ந்த நாகரிகத்திற்கு தேவையான திறன்கள் வழக்கில் இல்லாதொழிந்தன. தொழில்துறைத் தொழில் பயிற்சியும் தேய்வுற்றது. 

தொடரும்................
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்

    Like On Facebook

    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    விளம்பரம்