எனது இணைப்பக்கத்துடன் இணைந்து தங்களுடைய கருத்துக்களையும் தெரிவித்துக் கொள்ளுங்கள்
Published Date: August 24, 2017

தொழில் வாண்மைத்துவம்

தற்போது பல்வேறு துறைகளிலும் வாண்மைத்துவம் எனும் பதம் பயன்படுத்தப்படுகின்றது. ஏனெனின் அத்தொழிலை திறம்பட மேற்கொள்ள வேண்டும் எனின் அத்துறையோ சார;ந்ந வாண்மைகள் விருத்தியடைய வேண்டும். எனினும் எல்லாத்துறைகளும் அதனுடைய வாண்மையை அடைந்துள்ளதாக கருதிவிட முடியாது. இவ்வாரான வாண்மையை வரைவிலக்கணப்படுத்துவது என்பது இலகுவான ஒன்றல்ல.

இவ்வாறு ஒரு வாண்மையை பொதுவாக வரைவிலக்கணப்படுத்தும் போது “ஒருவர; குறித்த விசேடமான செயற்பாடொன்றை புரிவதற்கு அவசியம் எனக்கருதப்படும் கல்வியோடு சார்ந்ந தகுதிகளையும், திறன்களையும் கொண்டிருத்தல் தொழில்வாண்மை எனப்படும்.

இவ்வாறான தொழில்வாண்மைகளை ஒருவர்  விருத்தி செய்ய வேண்டும் எனின் இதற்குறிய சிறப்பியல்புகளை மையப்படுத்தியே அமைய வேண்டும். உதாரணமாக:


  • § எப்போதும் பொதுச்சேவை செய்தற்கான உண்திறனும் வாழ்நாள்    முழுமையாக அதற்கான திறாகமும் இருத்தல்.
  • § சாதரணமான ஒருவரை விடவும் தம்மிடத்தில் குறிப்பிட்ட தொழிலுக்கான அறிவும் திறமையும் காணப்படல் வேண்டும்.
  • § கொள்கைகளை செயற்பாடாக பிரயாகிக்கக்கூடிய ஆற்றில்.
  • § தொழிலுக்காகன கூடிய விசேட பயிற்சி பெறல்.
  • § தோழிலில் ஈடுபடுவதற்கான அனுமதி.
  • § சுதந்திரமாக ஒரு வேலையில் முடிவுகளை எடுத்தல்.
  • § ஒரு ஒழுக்கக்கோவை அல்லது யாப்பு கொண்டமைந்த நிரவாகம்
  • § மேற்கொள்ளும் வேலைத்திட்டங்களில் மேலும் விஷேடத்துவம் பெறுவதற்கான வசதிகள் இருத்தல்.
  • § தமக்கென ஒரு நிறுவனம் காணப்படல்.
  • § தனித்துவமான கலாச்சாரம் காணப்படல்.
  • § நிருவாகிகளைக் கொண்டு தமது வேலைகளை மேற்கொள்ளல் அல்லது ஏற்படுத்தல்
  • § மேற்பார்வை மேற்கொள்வோரிடத்தில் சுதந்திரம் காணப்படல்
  • § தனிப்பட்டவரின் சாதனைகள் மதிக்கப்படல்
  • § பொதுமக்களின் நம்பிக்கையைப் பெறல்
  • § பொருளாதார வசதி காணப்படல் வேண்டும்
  • § உயர்நன்மதிப்புள்ளவராக இருத்தல்
  • § பொதுமக்களின் தேவையில்லாத பிரச்சினைகளை தவிர் ப்பதற்காகவாண்மையாளர்களை பாதுகாக்கக்கூடிய வண்ணம் வாண்மையின் வகைகூறலை அமைத்தல்
அது போன்றவைகளை கருத்தில்  கொண்டு தம்முடைய செயற்பாடுகள் அமைந்து ஒரு செயற்பாடு சிறப்பாக மேற்கொள்ளப்படுமாயின் அதனை வாண்மை விருந்தி எனப்படும். அது ஒரு தொழில் துறையில் மேற்கொள்ளப்படுமாயின் அது ஒரு தொழில்வாண்மையாகும்

எழுத்து : ஸிப்னாஸ் ஹாமி

  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்

    Like On Facebook

    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    விளம்பரம்