நரி வருது நரி வருது காக்கா காக்கா பறந்து வா
குயில் வருது மயில் வருது கூட்டாஞ் சோறு கொண்டு வா

நிலா நிலா வந்தாச்சு ஆமையாரெங்கே
ரெயிலு வண்டி நின்டாச்சி முயலுகூடெங்கே
சேவல் கோழி குடும்பத்தோடு எங்;கே…
நரி வருது நரி வருது காக்கா காக்கா பறந்து வா
குயில் வருது மயில் வருது கூட்டாஞ் சோறு கொண்டு வா
கன்னுக்குட்டியே செல்லக்குட்டியே காத்தைப் பாத்து பயப்படுதே பூனகுட்டியே
கொரங்கு பார்க்கவே கரடி பார்க்கவே யான மேலையர் ஊர்வலமாய் நாமபேரமே
அதோ பாரு சிங்கமே மானை துரத்துது
காட்டுப்புலி வந்தாச்சே மாடே ஒழிஞ்சிக்கோ
ஆடு ஓடு சிறுத்தை பாக்குது…..
நரி வருது நரி வருது காக்கா காக்கா பறந்து வா
குயில் வருது மயில் வருது கூட்டாஞ் சோறு கொண்டு வா
மைனா வந்தாச்சு குருவி வந்தாச்சு கொய்யாப்பழம் தின்ன ரெண்டும் சேர்ந்து வந்தாச்சு
கொய்யா மரத்துல பழத்தை காணோமே கிளிக்கூட்டம் நமக்கு முன்னே திண்ணுபோட்டாங்க
இப்பயென்ன பண்ணலாம் கொக்கை கேக்கலாம்
மாந்தோப்பு இருக்குதாம் அணிலு சொல்லுது
அதோ அங்கே மாமரம் தெரியுது……