எனது இணைப்பக்கத்துடன் இணைந்து தங்களுடைய கருத்துக்களையும் தெரிவித்துக் கொள்ளுங்கள்
Published Date: July 12, 2014

சமூகப்பணியில் ஒழுக்கை கோவை


மனித உரிமைகளும் மனித கௌரவமும்.

சமூகப்பணியாது எல்லா மனிதருள்ளும்  பொதிந்துள்ள மனிதப் பெறுமதியையும் அதன் விளைவான மனித உரிமைகளையும் மதிப்பதை அடிப்படையாகக் கொண்டது. சமூகப்பணியாளர்கள ஒவ்வொரு மனிதருடைய உள, உடல் உணர்வு ஆன்மீக முதிர்வையும் நல்வாழ்வையும் பேணி பாதுகாக்க வேண்டும். 

சமூக நீதி

சமூகம் என்ற பொதுவான அடிப்படையிலும் தாம் பணி செய்யும் மக்கள் சம்பந்தமாகவும் சமூக நீதியை மேம்படுத்தும் பொறுப்பு சமூகப்பணியாளர்களுக்கு உண்டு 
எதிர்மறை பாரபட்சத்தை எதிர்த்து சவால் விடுதல்   
வேறுபாடுகளை அங்கீகரித்தல்
வளங்களை நீதியாக பகிர்ந்தளித்தல் 
அநீதியான கொள்கைகளையும், நடை முறைகளையும் எதிர்த்தல் 
ஒருமைப்பாட்டுடன் வேலை செய்தல் 
சுய நிர்ணய உரிமையை மதித்தல் - 

1. தமது தெரிவுகளையும் தீர்மானங்களையும் தாமே மேற் கொள்ளும் உரிமையை,  விழுமியங்களும் வாழ்க்கையின் தெரிவுகளும் வேறுபட்டு இருந்தாலும,; அவை இன்னொருவருடைய உரிமைகளுக்கும் நியாயமான ஆர்வங்களுக்கும் அச்சுறுத்தலாக இல்லாதவரை, சமூகப்பணியாளர்கள் மதிக்கவேண்டும். 

2. பங்கு கொள்ளும் உரிமையை ஊக்குவித்தல்-
தமது வாழ்வைப் பாதிக்கும் தீர்மானங்கள,; செயற்பாடுகள் ஆகியவற்றின் அம்சங்களில்   மக்கள் வல்லமை பெறும் வகையில் தமது சேவைகளைப் பாவித்து தமது முழுமையான ஈடுபாட்டை அளிப்பதை சமூகப்பணியாளர்கள ஊக்குவிக்க வேண்டும். 

3. ஒவ்வொரு நபரையும் முழுமையாக கருத்திற் கொள்ள வேண்டும். 
சமூகப்பணியாளர்கள் ஒரு நபரை முழுமையாக நோக்க வேண்டும். குடும்பம், சமூகம் சமுதாயம் இயற்கைச் சூழல் ஆகியவற்றுடன் பார்த்து ஒரு ஆளின் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் அங்கீகரிப்பதை நாட வேண்டும்.

4. பலங்களை இனம் கண்டு வளர்க்க வேண்டும்.

5. சமூகப்பணியாளர்கள் ஒரு நபரை முழுமையாக நோக்க வேண்டும். 

குடும்பம், சமூகங்கள்; ஆகியவற்றின்னுடைய பலத்தில்; கவனம் வெலுத்தி, அவற்றை மேலும் வலுப்படுத்துவதை ஊக்குவிக்க வேண்டும். 
மனித கௌரவத்திற்கு மதிப்பளித்தல்
ஒத்துணர்தல்
சேவைக்கான அர்ப்பணிப்பு 
சமத்துவம் பேணல் 
இரகசியத் தன்மை 
ஒழுக்க ரீதியான தொழில்வாண்மையான உறவுமுறை

தொழில்வாண்மையான நடத்தை

• சமூகப்பணியாளர்கள் தமக்குத் தேவையான அறிவு மற்றும் திறன் என்பவற்றை மேம்படுத்தவும், பேணவும் வேண்டும். 

தமது திறன்களை மனிதாபிமானமற்ற நோக்கங்களுக்கு மற்றும் சித்திரவதை என்பவற்றுக்கு துணை போவதற்குப் பயன்படுத்துவதை அனுமதிக்கக்கூடாது. 

ஒருமைப்பாட்டுடன் சமூகப்பணியாளர்கள் பணிபுரிய வேண்டும். தமது சொந்த நன்மை அல்லது இலாபத்திற்காக தாம் வகிக்கும் பதவியை துஷ்பிரயோகம் செய்யக்கூடாது.

தமது சேவையைப் பயன்படுத்தும் நபர்களுடன் பரிவுடனும், ஒத்துணர்வுடனும், அன்புடனும் நடக்க வேண்டும். 

ஒருமைப்பாட்டுடன் சமூகப்பணியாளர்கள் பணிபுரிய வேண்டும். தமது சொந்த நன்மை அல்லது இலாபத்திற்காக தாம் வகிக்கும் பதவியை துஷ்பிரயோகம் செய்யக்கூடாது.

தமது சேவையைப் பயன்படுத்தும் நபர்களுடன் பரிவுடனும், ஒத்துணர்வுடனும், அன்புடனும் நடக்க வேண்டும். 

சமூகப்பணியாளர்கள் சொந்த தேவைகள்  தொடர்பாக நன்மையடைவதற்கு ஆதரவு வழங்கக்கூடாது. 

சமூகப்பணியாளர் தாம் வழங்கும் சேவைகள் மிகப் பொருத்தமாதாக இருப்பதற்கு தம்மை தொழில் ரீதியாகவும், தனிப்பட்ட ரீதியாகவும், தொழில் புரியம் இடத்திலும் மற்றும் சமூகத்திலும் நிலைநாட்டிக் கொள்வதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும

தமது சேவையைப் பயன்படுத்துபவர்கள் தரும் தகவல்களை இரகசியமாகப் பாதுகாக்க வேண்டும். 

தமது சேவை நாடிகளுக்கும், தமது சகபணியாளர்களுடனும் செய்யும் பணி தொடர்பாக பொறுப்புக் கூறவேண்டியவர்களாக உள்ளனர். அத்துடன் தாம் வேலை செய்யும் நிறுவனம் மற்றும் சட்டங்களிற்கும், தனது பணி தொடர்பாக பொறுப்புக் கூறுபவராக இருக்க வேண்டும். இந்த பொறுப்புக்கள் முரண்படக் கூடியவையாகும். 

சமூகப்பணியாளர் சமூகப்பணி பாடசாலைகளுடன் இணைந்து சமூகப்பணி மாணவர்களுக்கு தரமான நடைமுறை பயிற்சி மற்றும் உடனுக்குடன் அவர்களின் அறிவைப் புதுப்பிக்கவும் உதவி செய்ய வேண்டும். 

சமூகப்பணியாளர் தமது சமூகப்பணியாளர்களுடனும், தொழில் வழங்குபவர்களுடனும் ஒழுக்க கோவைகள் தொடர்பான விவாதங்களை மேற்கொள்ளவும் ஒழுக்கவியல் ரீதியான தகவல்களைத் தெரியப்படுத்தும் பொறுப்பையும் எடுக்க வேண்டும். 

தமது தெரிவுகள், நடவடிக்கைகள் தொடர்பாகவும் பொறுப்பேற்கக்கூடியவர்களாக இருக்க வேண்டும். 

இந்த மூலாதாரங்கள் ஒழுக்க கோவைகளை விவாதித்து மதிப்பிட்டு பற்றுறுதியுடன் பின்பற்றக்கூடிய வகையிலான சூழலை ஏற்படுத்த வேண்டும்.

Reference

 International Federation of Social Workers (IFSW), International Association of Schools of Social Work (IASSW) 2004, Ethics in Social Work, Statement of Principles, Bern, Switzerland

  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்

    0 comments:

    Speak up your mind

    Tell us what you're thinking... !

    Like On Facebook

    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    விளம்பரம்