எனது இணைப்பக்கத்துடன் இணைந்து தங்களுடைய கருத்துக்களையும் தெரிவித்துக் கொள்ளுங்கள்
Published Date: April 10, 2014

கண் வெள்ளையாதலுக்கான குர்ஆனிய மருத்துவம்



எகிப்து நாட்டு மருத்துவர் பேராசிரியர் "அப்துல் பாஸித் முஹம்மத்" என்பவர் "கண் வெண்மையாதல்" நோய்க்கு குர்'ஆன் அடிப்படையில் மருந்து கண்டு பிடித்துள்ளார் என்று கத்தார் நாட்டின் "அர்-ரயா" பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
அச்செய்தி மேலும் கூறுவதாவது:

ஒரு நாள் காலையில் நான் குர்'ஆன் ஓதிக்கொண்டிருக்கும் போது, சூறா யூசூப்பின் 84ம் வசனம் இந்த டாக்டரின் கவனத்தை ஈர்த்தது. எனவே தொடர்ந்து உள்ள வசனங்களை கூர்ந்து வாசித்தார். அதில் 93ம் வசனம் இன்னும் சிந்திக்கத்தூண்டியது.
(இது பற்றிய குர்'ஆன் வசனங்கள் கட்டுரையின் கடைசியில் தரப்பட்டுள்ளது.)

84ம் வசனத்தில் யாகூப்(அலை) அவர்கள் தன் மகன் யூசுப்(அலை) அவர்களின் பிரிவால், அழுது அழுது கண்கள் வெளுத்து பார்வை இழந்துவிட்டது எனக்கூறுகிறது.
தொடர்ந்து 93ம் வசனமோ அவரின் கண்பார்வை மீள பெறப்பட்ட ஒரு முறையை கூறுகிறது. அதாவது,
யூசூப்(அலை) அவர்கள் தனது சட்டையை கொடுத்தனுப்பி, அதை தந்தையின் முகத்தில் போடுமாறும், அதன் மூலம் அவரது பார்வை மீண்டுவிடும் என்றும் கூறிய சம்பவம் இடம் பெறுகிறது.

எனவே, தொடர்ந்து சிந்தித்தார்.
யூசூப் (அலை) கொடுத்தனுப்பிய சட்டையில் என்ன இருந்திருக்க முடியும்? என்று யோசித்த போது, வியர்வையை தவிர வேறு ஒன்றும் இருந்திருக்க வாய்ப்பில்லை என்று தோன்றியது. எனவே, ஆய்வு கூடத்தில் வியர்வையை வைத்து ஆய்வுகளை தொடங்கினார்.

எனவே, முயல்களிலும், இன்னும் ஆய்வுக்கேற்ற விலங்குகளிலும் இது தொடர்பான பரிசோதனைகளை செய்தபோது வெற்றிக்கான சாத்தியம் ஏராளம் தென்பட்டது.
எனவே இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ள 250 நோயாளிகளுக்கு தினமும் இரண்டு மருந்து சொட்டுகள் வழங்கி சோதனையை தொடங்கினார். அதில் 99% வெற்றியான முடிவு கிடைத்தது.
எனவே இந்த கண்டுபிடிப்பை ஐக்கிய அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் பதிவு செய்து அதன் காப்புரிமையை பெற்றுக்கொண்டார்.

அதன் பின்னர், சுவிஸ் நாட்டின் மருந்து தயாரிக்கும் நிறுவனத்துடன் ஒப்பந்த அடிப்படையில் இம்மருந்து உற்பத்தியை தொடங்கினார்.
இந்த மருந்தில் "குர்'ஆனின் மருந்து / Medicine of Qur'an" என்று தெளிவாக குறிப்பிட வேண்டும் என்று நிபந்தனை விதித்தார். அதை அந்த நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.

இது தொடர்பான குர்'ஆன் வசனங்கள்.
----
12:84. பின்னர் அவர்களை விட்டுத் திரும்பி “யூஸுஃபைப் பற்றி (எனக்கு ஏற்பட்டுள்ள) துக்கமே!” என்று (வியாகூலப்பட்டுக்) கூறினார்; துக்கத்தால் (அழுது அழுது) அவருடைய இரண்டு கண்களும் வெளுத்து(ப் பஞ்சடைந்து) விட்டன - பிறகு அவர் (தம் துக்கத்தை) விழுங்கி அடக்கிக் கொண்டார்.
12:93. “என்னுடைய இந்தச் சட்டையை நீங்கள் எடுத்துக் கொண்டு சென்று, என் தந்தையாரின் முகத்தில் போடுங்கள்; அவருக்குக் கண்பார்வை வந்துவிடும்; இன்னும் உங்களுடைய குடும்பத்தார் அனைவரையும் என்னிடம் கொண்டு வாருங்கள்” (என்று கூறினார்).
17:82. இன்னும், நாம் முஃமின்களுக்கு ரஹ்மத்தாகவும், அருமருந்தாகவும் உள்ளவற்றையே குர்ஆனில் (படிப்படியாக) இறக்கிவைத்தோம்; ஆனால் அக்கிரமக்காரர்களுக்கோ இழப்பைத் தவிர வேறெதையும் (இது) அதிகமாக்குவதில்லை.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்

    0 comments:

    Speak up your mind

    Tell us what you're thinking... !

    Like On Facebook

    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    விளம்பரம்