நெருங்கிய உறவுக்குள் திருமணம் முடிப்பதால் இரத்த ஒற்றுமைக் காரணமாக பிறக்கின்ற குழந்தை குறையுள்ளதாகப் பிறக்கும் என்ற கருத்தை அல்-குர்ஆனிலோ, சஹீஹான ஹதீஸ்களிலோ நாம் காணவில்லை. ஆனால் ஷாபிஈ மத்ஹபின் பிரபல அறிஞர்களில் ஒருவரான இமாம் நவவி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் தனது மின்ஹாஜுத் தாலிபீன் எனும் கிரந்தத்தில் திருமணம் செய்வதற்குத் தெரிவுசெய்யப்படும் பெண்ணில் கவனிக்கப்படவேண்டிய அம்சங்களைக் கூறும்போது ‘மார்க்கத்தைப் பின்பற்றக் கூடிய, திருமணமாகியிராத, நல்ல குடும்பத்தைச் சேர்ந்த, நெருங்கிய உறவினர் அல்லாத ஒரு பெண் விரும்பத்தக்கது’ எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.
மேலும் நெருங்கிய உறவினர்களுக்கிடையில் பிறக்கும் குழந்தைகள் பரம்பரை நோய்களுடன் அல்லது குறைகளுடன் பிறக்க வாய்ப்புள்ளது என பலராலும் சொல்லப்படுகின்ற, பரவலாக நம்பப்படுகின்ற கருத்து ஆய்வுகளின் அடிப்படையில் இன்று வரை உறுதியாக நிரூபிக்கப்பட்ட அல்லது வைத்தியர்களினால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றல்ல என்பதைக் கவனத்தில்கொள்ளவும்.
வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.
பிரசுரித்த தேதி 29.04.2009ஹிஜ்ரி தேதி 1430.05.03வெளியீடு எண் 018/F/ACJU/2009
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !