அல்லாஹ்வுடைய படைப்பினங்களைப் போன்று மனித, மிருக உருவங்களை வரைவதையும், செதுக்குவதையும், உருவாக்குவதையும், அதை வீடுகளில் மதிப்பாகப் பார்வைக்கு வைத்திருப்பதையும் இஸ்லாம் மிக வன்மையாகத் தடைசெய்துள்ளது. இதைப் பின்வரும் ஹதீஸ்கள் தெளிவுபடுத்துகின்றன:
மறுமை நாளில் மக்களிலே மிகக் கடுமையான வேதனைக்குள்ளாகுவோரில் அல்லாஹ்வின் படைப்புகளுக்கு ஒப்பாகப் படைப்பவர்களும் அடங்குவர்’ என்று நபி (சல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா)
நூல்: சஹீஹு முஸ்லிம் - ஹதீஸ் இலக்கம் : 5525
உருவங்களின் உருவச்சிலைகளை உருவாக்கக்கூடிவர்கள் மறுமை நாளில் வேதனை செய்யப்படுவார்கள், அவர்களிடம் ‘நீங்கள் படைத்தவற்றுக்கு நீங்களே உயிர் கொடுங்கள்’ என்று கூறப்படும்’. என்பதாக ரஸுலுல்லாஹி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழியல்லாஹு அன்ஹுமா)
நூல்: சஹீஹு முஸ்லிம் - ஹதீஸ் இலக்கம் : 5535
உருவச்சிலைகளோ உருவப்படங்களோ உள்ள வீட்டில் மலக்குகள் நுழையமாட்டார்கள்.’ என்று ரஸூலுல்லாஹி (சல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹூரைரா (ரழியல்லாஹு அன்ஹ்)
நூல்: சஹீஹு முஸ்லிம் - ஹதீஸ் இலக்கம் : 5545
எனவே ஆடைக் காட்சியறைகளில் காட்சிக்காக வைக்கப்படக்கூடிய பொம்மைகள் அல்லாஹ்வின் படைப்புகளுக்கு ஒப்பாகவிருப்பதனாலும், பெரும்பாலும் இச்சைகளை தூண்டக்கூடியவையாக இருப்பதனாலும் அவற்றை காட்சியறைகளில் வைப்பது தடை செய்யப்பட்டுள்ளது. என்றாலும் தலை இல்லாத அமைப்பில் வடிவமைக்கப்பட்ட இச்சையைத் தூண்டாத பொம்மைகளைப் பாவிப்பதோ, காட்சிப்படுத்துவதோ தடைசெய்யப்பட்டது அல்ல.
அல்லாஹ்வே நன்கறிந்தவன்.
பிரசுரித்த தேதி 15.01.2008ஹிஜ்ரி தேதி 1429.10.05வெளியீடு எண் 001/ACJU/F/2008
நூல்: சஹீஹு முஸ்லிம் - ஹதீஸ் இலக்கம் : 5525
நூல்: சஹீஹு முஸ்லிம் - ஹதீஸ் இலக்கம் : 5535
நூல்: சஹீஹு முஸ்லிம் - ஹதீஸ் இலக்கம் : 5545
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !