எனது இணைப்பக்கத்துடன் இணைந்து தங்களுடைய கருத்துக்களையும் தெரிவித்துக் கொள்ளுங்கள்
Published Date: January 28, 2014

சிறுவர் துஷ்பிரயோகம் அறிமுகம்

சிறுவர் துஷ்பிரயோகம் அறிமுகம்



சிறுவர் துஷ்பிரயோகம் என்பது 18 வயதிற்கு குறைந்த சிறுவர்களிடையே அவரைப் பராமரிப்போரால் (பெற்றோர்/ பாதுகாவலர்கள்) ஏற்படுகின்ற பாதிப்பே 
ஆகும் 

துஷ்பிரயோகத்தின் வகைகள்



பொதுவாக நான்கு வகையான துஷ்பிரயோகங்கள் உய்த்தறியப்பட்டுள்ளன. ஆனால் ஒரு குழந்தை ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகலாம்.

உடலியல் துஷ்பிரயோகம்

- அடித்தல்

- தீயால் சுடுதல்

- நஞ்சூட்டல்

- மூச்சுத்திணறலை ஏற்படுத்தல் என்பன அடங்கும்

உளவியல் துஷ்பிரயோகம்

- குழந்தையைப் புறக்கணித்தல்

- உணர்ச்சியை மதிக்காமை

- குழந்தையின் சமூக தொடர்பைத் துண்டித்தல்

- அச்சுறுத்தல் என்பன அடங்கும்

பாலியல் துஷ்பிரயோகம்

- பாலியல் உறவிற்கான தூண்டுதல் மற்றும் வற்புறுத்தல்

- உடலியல் தொடர்பற்ற செயற்பாடுகளான

o ஆபாசப்படங்களைக் காண்பித்தல்

o பொருத்தமற்ற பாலியல் முறைகளை அறிமுகம் செய்தல் என்பன இவற்றுள் அடங்கும்

புறக்கணித்தல்



- குழந்தையின் சுகாதார மற்றும் விருத்திக்குத் தேவையான உடலியல் உளவியல் தேவைகளை பூர்த்தி செய்யாமை.

- அடிப்படை வசதிகளான உணவு உடை உறையுள் என்பன பூர்த்தி செய்யப்படாமை


கருத்துக்கள்



சிறுவர் துஷ்பிரயோகத்தை சந்தேகிப்பதற்கு கீழே கூறப்பட்ட கருத்துக்கள் பயன்படுத்தப்படுகின்றன

- சந்தேகிக்கப்படும் அறிகுறிகளாவன

o காயத்தின் தன்மை

o நடத்தை மாற்றங்கள்

- மேலே கூறப்பட்ட அறிவுறுத்தும் தன்மைகளுக்கு தகுந்த விளக்கத்தை அளித்தல்

- துஷ்பிரயோகத்தைப் பற்றி மிகவும் கடுமையான கவனத்தைச் செலுத்துதல்.

பரம்பல்



- 7 வீதமான சிறுவர்கள் உடலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகிறார்கள்

- 6 வீதமான சிறுவர்கள் கடுமையான புறக்கணித்தலுக்கு உள்ளாகிறார்கள்

- 6 வீதமான சிறுவர்கள் உளவியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகிறார்கள்

- 11 வீதமானோர்கள் உறவினரல்லாத தெரிந்த நபர்களினாலும் 4 வீதமானோர் உறவினர்களாலும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகிறார்கள்
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்

    Like On Facebook

    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    விளம்பரம்