எனது இணைப்பக்கத்துடன் இணைந்து தங்களுடைய கருத்துக்களையும் தெரிவித்துக் கொள்ளுங்கள்
Published Date: October 04, 2013

Srilanka சமூக சேவைகள் திணைக்களத்தின் ஆரம்பம்,வரலாறு


இந்த சமூக சேவைகள் திணைக்களம், 1944 ஆம் ஆண்டு யூலை மாதம் 10 ஆம் திகதி இதன் நோக்கத்திற்காக நியமிக்கப்பட்ட சேர் ஐவன் ஜெனிங்ஸ் தலைமையிலான ஆணைக்குழுவின் VII-வது அமர்வு ஆவணங்கள் அறிக்கையில் முன்வைக்கப்பட்ட சிபாரிசுக்கு அமைய 1948 ஆம் ஆண்டு பெப்ருவரி மாதம் 01 ஆம் திகதி தாபிக்கப்பட்டது. நிலவுகின்ற சமூக சேவைகளையும் குறித்த ஆணைக்குழு முன்வைத்த பிரேரணைகளின் பரிணாமத்தையும்  மீள்கட்டமைப்பது இந்தத் திணைக்களத்தின் ஆரம்பப் பணியாகக் காணப்பட்டது.
அன்று இயங்கிய சமூக சேவைகள் திணைக்களத்தினால் கையாளப் பட்ட பின்வரும் அம்சங்கள் தொடர்பான சமூகப் பாதுகாப்பு சார்ந்த செயற்படுத்துகை முறையியல்கள் மற்றும் ஒருங்கிணைப்பு முறையியல்கள் ஆகியன பற்றி ஆராய்வதற்கும், தாய்மார்களுக்கான நிவாரண சேவைகள் விஸ்தரிப்பு, தொழிலாளர் நஷ்டஈட்டுக் கொடுப்பனவுகள், சேவைகள் நிபந்தனைகள் என்பன பற்றி ஆராய்வதற்குமான சமூக உதவி தொடர்பான தொழிற்பாடுகள் இந்த சேர் ஐவர் ஜெனிங்ஸ் ஆணைக்குழுவுக்கு உரித்தளிக்கப்பட்டது. 
  • வயது முதிர்ந்தவர்களுக்கான ஓய்வூதியங்கள் வழங்கல்
  • நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்டிருக்கின்ற, அங்கவீனமடைந்திருக்கின்ற காலப்பகுதியில் அந்த நபர்களுக்கான நிவாரணம் வழங்கல்
  • தொழிலை இழந்திருக்கும் காலப்பகுதியில் தொழிலை இழந்தவர் களுக்கான  நிவாரணம் வழங்கல்
  • ஓய்வூதியத்தின் பேரிலான ஓய்வூதியம் வழங்கல்
  • விதவைகள், அநாதைகளுக்கான உதவு தொகைக் கொடுப்பனவு வழங்கல்
1947 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதிய அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட சமூக சேவைகள் திணைக்களத் தாபிப்பின் அடிப்படை நோக்கமானது சமுகப் பாதுகாப்பு முறைமை ஒன்றைத் தாபிப்பதாகவிருக்க வேண்டும் எனக் கருத்திற்கொள்ளப் பட்டது. அந்தக் குறித்த ஆண்டில் நிதியோற்பாடுகளில்லாத காரணத்தினால், இந்த சமூகப் பாதுகாப்பு முறைமையை அமுலாக்கும் திட்டம் பிற்போடப்பட்டு, 1948 ஆம் ஆண்டு பெப்ருவரி மாதம் 01 ஆம் திகதி இந்த சமூக சேவைகள் திணைக்களம் தாபிக்கப்பட்டது.
ஆரம்பத் திணைக்களக் கட்டமைப்பு
சேர் ஐவர் ஜெனிங்ஸ் ஆணைக்குழுவுக்கான செயலாளராகவும் தொழில் அமைச்சின் மேலதிகச் செயலாளராகவும் பணியாற்றிய இலங்கை சிவில் சேவையிலிருந்த திரு பீ. பொன்னையா என்பவர் 1948 ஆம் ஆண்டு பெப்ருவரி மாதம் 01 ஆம் திகதி முதல் செயல்வலுப் பெறும் வகையில் சமூக சேவைகள் திணைக்களத்தின் பதில் பணிப்பாளராக நியமிக்கப்பட்டார். நியுசிலாந்து அரசாங்கத்துடனான நட்புறவுகளின் அடிப்படையில் விடுக்கப்பட்ட ஒரு வேண்டுகோளின் பேரில், சமூகப் பாதுகாப்பு விடயத்தில் அனுவத்தைப் பெற்றிருந்த நியுசிலாந்துப் பிரஜையான திரு டீ.ரீ. க்ரான்ட்ஸன் அவர்கள் புதிய திணைக்களத்தின் தலைவராக மூன்று வருடங்களுக்குக் கடமைகளைப் பொறுப்பேற்கும் பொருட்டு விடுவிக்கப்பட்டார். இவ்வாறு விடுவிக்கப்பட்ட திரு க்ரான்ட்ஸன் 1948 ஆம் ஆண்டு யூலை மாதம் 13 ஆம் திகதி சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளராகவும் தொழிலாளர் நஷ்டஈட்டு ஆணையாளராகவும் கடமைகளைப் பொறுப்பேற்றார்.
மேற்கூறப்பட்ட VII-வது அமர்வு அறிக்கையானது இலங்கையில் சமூக சேவைகள் கட்டமைப்பு தொடர்பில் மிக முக்கியமான ஒரு ஆவணமாக மாறியது. இந்த அறிக்கையானது அன்று நிலவிய சமூக சேவைகள் சார்ந்த செயற்பாடுகளினது நீண்ட மீளாய்வை முன்வைப்பதுடன், எதிர்காலத்தில் சமூக சேவைகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றி விபரிப்பதாகவும் அமைகின்றது. இந்த அறிக்கையின் மூலம் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்கள் சமூக சேவைகள் திணைக்களம் 1948 ஆம் ஆண்டில் தாபிக்கப்படுவதற்கும் இந்தத் திணைக்களத்தின் இயக்கச்செயற்பாடுகளுக்கும் உதவியாக அமைந்தது. செயற்படுத்தப்பட வேண்டிய சமூக சேவை விடயங்களை மாத்திரம் கருத்திற்கொண்டல்லாது நாட்டினது பொருளாதார நிலைமையின் கண்ணோட்டத்தில் சாத்தியமான ரீதியில் செயற்படுத்தப்பட வேண்டிய விடயங்களையும் கருத்திற்கொண்டு இந்தச் சிபாரிசுகள் முன்வைக்கப் பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
சமூக சேவைகள் திணைக்களம் தொழில் அமைச்சின் கீழ் தாபிக்கப் பட்டதனால், தொழிலாளர் திணைக்களத்திற்குப் பொறுப்பாகவிருந்த அநேகமான பணிகள் புதிய திணைக்களத்திற்குக் குறித்தொதுக்கப் பட்டன. முதல் முதலாவது அரசாங்கத் திணைக்களமாக மாறிய திணைக்களம் யாதெனில் சமூகப் பணிகள் குறித்தொதுக்கப்பட்ட இந்தப் புதிய திணைக்களமாகும். எனினும், வறுமையை அனுபவித்த மக்களுக்கும் அனர்த்தங்களின் காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் நிவாரணத்தை வழங்கும் செயற்பாடுகள், இந்தத் திணைக்களம் ஆரம்பிக்கப் பட்டதன் பின்னர் நிறைவேற்றப்பட்டன.
இந்தத் திணைக்களத்தின் ஆரம்ப காலம் தொட்டு, ஏனைய உலக நாடுகளின் சமூக சேவை சார்ந்த திணைக்களங்களினது நோக்கங்களைக் கருத்திற்கொண்டு, இலங்கையிலுள்ள சமூக சேவை விடயங்களிலும் மேம்பாட்டை ஏற்படுத்துவதற்குத் திணைக்களத்தின் கவனம் ஈர்க்கப் பட்டது. அதே நேரம் முதியோருக்கான இல்லங்களுக்கும் ஏனைய நலன்புரி நிறுவனங்களுக்கும் உதவிகள் வழங்கப்பட்டன. 1951 ஆம் ஆண்டில் திணைக்களத்தினாலேயே வழங்கப்பட்ட வழிகாட்டல்களைக் கொண்டு, இது முதியோருக்கான இல்லங்களை ஆரம்பித்தது. மகப்பேற்று இல்லங்கள், நலன்புரி நிறுவனங்களினாலும் உள்ளூர் அரச நிறுவனங்களினாலும் ஆரம்பிக்கப்பட்டன. (மகப்பேற்று இல்லங்கள் தொடர்பான தொழிற்பாடுகள் தற்பொழுது நன்னடத்தைக்கான நிறுவனத்தின் கீழ் வருகின்றன).
1952 ஆம் ஆண்டில் திணைக்களத்தின் கவனம் ஒரு சமூகக் காப்புறுதித் திட்டத்தின் பால் ஈர்க்கப்பட்டது. அதற்கிணங்க, ஒரு தேசிய சேமலாப நிதித் திட்டத்தைத் தாபிப்பதற்கு அன்று தீர்மானிக்கப்பட்டது. பின்னர் இந்த சேமலாப நிதித் திட்டம் தொழிலாளர் திணைக்களத்தின் கீழ் வந்தது.
1948 ஆம் ஆண்டு அதாவது இந்தத் திணைக்களத்தின் ஆரம்பத்தில், மாதாந்தப் பொதுக் கொடுப்பனவுத் திட்ட அமுலாக்கல், அனர்த்த நிவாரணம், தொழிலாளர் நஷ்டஈடு, முதியோருக்கான இல்லங்களின் பராமரிப்பு, தொண்டர் நிறுவனங்களுக்கு நிதி உதவிகளை வழங்குதல் முதலியன இதன் பிரதான தொழிற்பாடுகளாகக் காணப்பட்டன.
காச நோயினால் அவதிப்பட்ட வறிய மக்களுக்கு போஷாக்குச் சத்துள்ள உணவுகளைப் பொற்றுக்கொள்ளும் பொருட்டு மாதாந்தம் கொடுப்பனவு ஒன்றை வழங்குவதற்கான ஒரு திட்டம் 1953 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. குஷ்ட நோயாளிகளுக்கு உதவும் பொருட்டு இதையொத்த ஒரு திட்டமும் 1959 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. 500.00 ரூபா உதவு தொகையொன்றை வழங்குவதன் மூலம் தலிஸீமியா நோயாளிகளுக்கும் உதவுவது தொடர்பிலும் 1996 ஆம் ஆண்டு சுற்றறிக்கைகள் வெளியிடப்பட்டன.
1951 ஆம் ஆண்டில் கொக்கலையிலும், 1952 ஆம் ஆண்டில் அனுராதபுரத்திலும், 1954 ஆம் ஆண்டில் கைத்தடியிலும், 1957 ஆம் ஆண்டில் மீரிகமவிலும் முதியோருக்கான இல்லங்கள் தாபிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து கொக்கலையிருந்த பழைமை வாய்ந்த முதியோருக்கான இல்லம் 1971 ஆம் ஆண்டில் மூடப்பட்டுள்ளது. முதியோருக்கான அத்தகைய இல்லங்களின் பராமரிப்பு தொடர்பில் தொண்டர் நிறுவனங்களுக்குப் பொருத்தமான நிதி உதவிகள் வழங்கப் பட்டன.
சுகாதார அமைச்சின் உதவியைக் கொண்டு, அங்கவீனமடைந்த நபர்களின் நன்மைகள் கருதி 1952.09.01 ஆம் திகதி வாழ்க்கைத் தொழில் பயிற்சி நிலையம் ஒன்று தாபிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அங்கவீனமடைந்த நபர்களுக்குப் பயிற்சியளிக்கும் பொருட்டு சர்வதேச தொழிலாளர் அமைப்பு வழங்கிய மூலதன உதவியைக் கொண்டு,  இலங்கையிலுள்ள அங்கவீனமடைந்தவர்கள் தொடர்பில் அவர்களின் வாழக்கைக்காக சமூகத்தில் புனர்வாழ்வு அளிப்பதற்கு மூலதனத்தை வழங்குவதன் மூலம் 1957 ஆம் ஆண்டில் முறையியல் சார்ந்த மீள்திட்டமிடல் நடபடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சமூக நிபுநர் ஒருவரான எட்கார் மார்லண்ட் என்பவரின் ஆலோசனையின் பேரில், இந்தத் திணைக்களம் வாழ்க்கைத் தொழில் பயிற்சி நிபுனத்துவம் சார்ந்த சேவைகளைப் பெற்று இதில் தனியானவொரு பிரிவைத் தாபித்தது.
அங்கவீனமடைந்த நபர்களுக்குப் புனா்வாழ் அளிப்பது 1957 ஆம் ஆண்டு முதல் அரசாங்கத்தின் பொறுப்பாகக் கருதப்பட்டு வந்தது. அதக்கிணங்க, அங்கவீனமடைந்த நபர்களுக்குப் பயிற்சியளிப்பதற்காக அவர்களின் ஆற்றல்களையும் சமூகத்தில் அவா்களின் மேம்பாட்டிற்குத் தேவையான புனா்வாழ்வையும் பொறுத்து ஒரு வாழ்க்கைத் தொழில் பயிற்சி நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. நிறுவனமும் தொழிற்பாடுகளும் சமூக சேவைகள் திணைக்களத்தினால் 1958 ஆம் ஆண்டு பொறுப்பு ஏற்கப்பட்டன. அதனைத் தொடா்ந்து இது வாழ்க்கைத் தொழில் பயிற்சிக்கான ஒரு நிலையமாக பரிணாமம் அடைந்தது. 1963 ஆம் ஆண்டில் வத்தேகமவிலும், 1968 ஆம் ஆண்டில் கெட்டவெல, லெவில என்ற இடங்களிலும் வாழ்க்கைத் தொழில் பயிற்சி நிலையங்கள் தாபிக்கப்பட்டன. தெலம்புவாவ என்ற இடத்தில் அமைந்திருந்த சர்வோதய நிலையம் 1991 ஆம் ஆண்டில் சமூக சேவைகள் திணைக்களத்தினால் பொறுப்பேற்கப்பட்டு ஒரு வாழ்க்கைத் தொழில் பயிற்சி நிலையம் தாபிக்கப்பட்டது. சிகிச்சை பெற்று வந்த அங்கவீனமடைந்த நபா்களுக்கு வாழ்க்கைத் தொழில் பயிற்சியை வழங்கும் பொருட்டு இராகம புனா்வாழ்வு வைத்தியசாலையில் 1983 ஆம் ஆண்டு விஷேட பிரிவொன்று தாபிக்கப்பட்டது என்பதும் விஷேடமாகக் குறிப்பிடப்பட வேண்டிய விடமாகும்.
உள ரீதியில் பின்னடைந்த சிறுவா்களுக்குப் பயிற்சியளிக்கும் பொருட்டு முதற் தடவையாக பெலவத்த, களுத்துறை ஆகிய இடங்களில் 1979 ஆம் ஆண்டில் வாழ்க்கைத் தொழில் பயிற்சி நிலையமொன்று ஆரம்பிக்கப்பட்டது. நீதிமன்றங்களினால் கட்டளையிட்டு அனுப்பப்படும் உள ரீதியில் பின்னடைந்த சிறுவா்களுக்கு தங்குமிட வசதியளிக்கும் பொருட்டு 1982 ஆம் ஆண்டில் ஒரு தனியான பிரிவு தாபிக்கப்பட்டு மீரிகமவில் அமைந்துள்ள முதியோருக்கான இல்லத்திற்கு இணைக்கப் பட்டது. 1987 ஆம் ஆண்டில் பெலவத்த நிலையத்தின் பிரிவு கங்கொடவில தடுப்பு இல்ல முகாமுக்கு மாற்றப்பட்டது. இது பின்னா் அனுராதபுரத்திலுள்ள முதியோர் இலத்தின் பிரிவுக்கு மாற்றப்பட்டது. உள ரீதியில் பின்னடைந்த சிறுவர்களுக்கு தங்குமிட வசதியளிக்கும் பொருட்டு கம்பஹா மாவட்டத்திலுள்ள வத்துரேகம, அமுனுகும்புர என்ற இடத்தில் 1990 ஆம் ஆண்டு நிரந்தர நிலையமொன்று தாபிக்கப் பட்டது. இது தவிர, தொண்டர் சமூக சேவை அமைப்புகளினால் நிருவகிக்கப்பட்டு வந்த வாழக்கைத் தொழில் பயிற்சி நிலையங்களுக்கு உதவியளிக்கும் பொருட்டு ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டன.
அங்கவீனமடைந்த நபர்களுக்கு நிவாரணம் வழங்கப்படுதல் வேண்டும் என சேர் ஐவர் ஜெனிங்ஸ் ஆணைக்குழுவின் அறிக்கையில் கூறப் படுகின்றது. இவர்களுக்கு ஆரம்பத்தில் பொது நிதிகளிலிருந்து தள்ளுநாற்காலிகள், செயற்கைக் கால்கள், ஊண்டுகோல்கள், முற்சக்கர வண்டிகள், செவிப்புல சாதனங்கள் மற்றும் அது போன்ற ஏனைய தேவைப்பாடுகள் முதலிவற்றை வழங்கி உதவியளிக்கப்பட்டது. அதே நேரம், இந்தத் திணைக்களம் எப்பொழுதும் இந்தச் சேவைகள் வழங்கலை மேம்படுத்தும் பொருட்டு நடவடிக்கையை எடுத்துள்ளது. பிச்சையெடுத்து வாழ்பவா்களின் பிரச்சினைகள் தொடா்பில் 1954 ஆம் ஆண்டு ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 1956 இன் XI-வது அமா்வு ஆவணங்களில் உள்ளடங்கிய தகவல்களின் அடிப்படையிலும் வழிப்போக்கர்கள் கட்டளைச் சட்டத்தின் ஒரு சில குறைபாடுகளை நீக்கும் பொருட்டு கௌரவ அமைச்சரினால் நியமிக்கப்பட்ட விஷேட உப குழுவினால் முன்வைக்கப்பட்ட சிபாரிசுகளினூடாக வறுமை சார்ந்த பிரச்சினைகள் அடையாளப்படுத்தப்பட்டன. இதன் பயனாக தடுப்பு முகாம் இல்லங்கள் தாபிக்கப்பட்டன. வழிப்போக்கா்கள் கட்டளைச் சட்டத்தின் கீழ் இயங்கிய தடுப்பு முகாம் இல்லங்களுக்கும் தடுப்பு முகாம் இல்லங்கள் கட்டளைச் சட்டத்தின் கீழ் இந்தத் திணைக்களத்திற்கு உரித்தளிக்கப்பட்ட தடுப்பு முகாம் இல்லங்களுக்கும் 1950 ஆம் ஆண்டு கங்கொடவில தடுப்பு முகாம் இல்லத்தில் இடவசதிகள் அளிக்கப்பட்டன. அத்துடன் ஒரு மேலதிகத் தடுப்பு முகாம் இல்லமும் அம்மாந்தோட்டை மாவட்டத்தில் றித்தியகம என்ற இடத்தில் 1975 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இந்த இரு தடுப்பு முகாம் இல்லங்களும் இன்று புனா்வாழ்வு நிலையங்களாக விளங்குகின்றன. வறிய குடும்பங்களுக்கு புனா்வாழ்வு அளிக்கும் பொருட்டு அனுராதபுர மாவட்டத்தில் சேனப்புர என்ற இடத்தில் ஒரு தடுப்பு முகாம் இல்லத்தை அமைக்க 1988 ஆம் ஆண்டில் ஒழுங்குகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.
இந்தத் திணைக்களம் 1953 ஆம் ஆண்டு ஒற்றோபர் மாதம் 27 ஆம் திகதி முதல் செயல்வலுப் பெறும் வகையில் கைத்தொழில்கள் மற்றும் சமூக சேவைகள் அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டது. இந்தத் திணைக்களம் 1970 ஆம் ஆண்டு மே மாதத்தில் சமூக சேவைகள் அமைச்சுக்கு இணைக்கப்பட்டது. ஆகையால் தனியான ஒரு அமைச்சைத் தாபிப்பதனை நோக்கி, இந்தத் திணைக்களத்தின் முக்கியத்துவத்தில் அழுத்தம் கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்தத் திணைக்களம் அரச தொழிலாளர், சமூக நலனோம்புகை அமைச்சின் அலுவலர்களினால் 1989 ஆம் ஆண்டு ஒழுங்கமைக்கப் பட்டது. இலங்கையிலுள்ள வறிய மக்கள் பற்றி ஆராய்ந்து அவர்களுக்கு உதவிகளை வழங்கும் பொருட்டு, இந்த அமைச்சு தாபிப்புப் பெறுவதற்கு முன்னர் இரண்டு தசாப்த காலமாக பல முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. அதன் பின்னர் 1939 இன் 30 ஆம் இலக்க வறியோர் பற்றிய கட்டளைச் சட்டம், இந்த ஆய்வின் பயனாக வெளிப்படுத்தப் பட்ட விடயங்களின் அடிப்படையில் சட்டமாக மாறியது. அன்று இலங்கை சிவில் சேவையிலிருந்த திரு எம்.எம். வெடபன் என்பவர் இது தொடர்பான அறிக்கையைச் சமர்ப்பித்தார். அநேகமாக இவரது ஆய்வுகள் ஆய்வு அறிக்கைகளுடன் இணைந்த மிக முக்கியமான ஆய்வுகளாகக் காணப்பட்டன. உண்மையில் இவர், வறிய மக்களுக்கு நிவாரணம் அளிப்பதிலுள்ள சட்ட நிருவாக நடவடிக்கைகள் தொடர்பில் சிபாரிசு களை முன்வைக்கும் பொருட்டு ஆய்வுகளை மேற்கொள்ள நியமிக்கப் பட்டார். அதனைத் தொடர்ந்து நிதிக் கட்டளைச் சட்டம் உரிய முறையில் 1941 மற்றும் 1946 ஆம் ஆண்டுகளில் இரண்டு தடவைகள் திருத்தப்பட்டது.
வறியோருக்கு நிவாரணமளிக்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் உணவு முத்திரைகள் வியோகப் பொறுப்பு 1985 ஆம் ஆண்டில் சமூக சேவைகள் திணைக்களத்திற்கு உரித்தளிக்கப்பட்டது. அதற்கிணங்க, முழு சனத் தொகையில் அரைவாசிக்கும் அதிகமான மக்களுக்கு இந்த சமூக சேவைகள் திணைக்களம் நிவாரணமளித்து சேவை செய்தது. 1990 ஆம் ஆண்டு வறுமை நிவாரணத் திணைக்களம் தாபிக்கப்பட்ட போது அதன் நிவாரணப் பணிகள் சமூக சேவைகள் திணைக்களத்திற்கு ஒப்படைக்கப் பட்டன. இந்த வறுமை நிவாரணத் திணைக்களத்திற்கு இணைக்கப் பட்டிருந்த 140 சமூக சேவை உத்தியோகத்தர்கள் 2004 ஆம் ஆண்டில் சமூக சேவைகள் திணைக்களத்திற்கு மீண்டும் இணைக்கப் பட்டனர்.
ஐக்கிய இராச்சியத்திலுள்ள 1946 இன் யுத்த தர்மங்கள் சட்டத்தின் ஒரே நிரல்களில் இலங்கையின் தொண்டர் அமைப்புகளுடனும் ஏனைய தொண்டர் அமைப்புகளுடனும் சம்பந்தப்பட்டு 1949 ஆம் ஆண்டில் பேச்சுவார்த்தைகள் நடாத்தப்பட்டன. ஆயினும் இந்த அமைப்புகளின் விடயங்களை எந்த விதத்திலும் சட்டமாக ஆக்க முடியவில்லை. எனினும், 1980 இன் 31 ஆம் இலக்கச் சட்டத்தினால் அங்கீகரிக்கப் பட்டவாறு, தொழிற்படுகின்ற தொண்டர் அமைப்புகளைப் பதிவு செய்தல் மற்றும் அவற்றின் பணிப்புரைச் சிறப்புப் பணி ஆகிய பணிகள் 1980 ஆம் ஆண்டில் சமூக சேவைகள் திணைக்களத்திற்கு உரித்தளிக்கப் பட்டன. வரித்தீர்வை விலக்களிப்புகளைக் கோரும் பணி, தொண்டர் அமைப்புகள் மேற்கொள்ளும் பணியில் சம்பந்தப்படுதல், சமூக சேவைப் பணிக்காக வெளிநாடு செல்பவர்களுக்கு வீசாக்களைப் பெற்று வழங்கல் போன்ற பணிகளும் இந்தத் திணைக்களத்திற்கு ஒப்படைக்கப்பட்டன. அனர்த்தங்களுக்கு உள்ளான மக்களுக்கும் செயற்கைச் சூழல்களினால் அனர்த்தத்திற்கு ஆளான மக்களுக்கும் நிவாரணத்தை வழங்குவதற்கான புனர்வாழ்வுத் திணைக்களத்தின் தீர்மானம் கிடைக்கும் வரையும் இந்தத் திணைக்களம் அனர்த்தத்திற்குள்ளான மக்களுக்கு நிவாரணங்களை வழங்கியது.
அனர்த்திற்குள்ளாகும் மக்களுக்கு இந்தத் திணைக்களம் நிவாரணத்தை வழங்கி அவர்களின் நிரந்தர வாழ்வாதாரத்திற்கு வழிகாட்டுகின்றது. அவ்வப்பொழுது நிகழும் குழப்பங்கள், பொதுவான அழிவுகள், வெள்ளப் பெருக்குகள், மண் சரிவுகள், சூறாவளிகள், வரட்சிகள் மற்றும் சுனாமிகள், பயிர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள், இனப் பிரச்சினைகள் முதலியன போன்ற துரதிர்ஷ்டவசமான சந்தர்ப்பங்களில் இந்தத் திணைக்களம் மக்களுக்கு நிவாரணங்களை வழங்கியுள்ளது.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்

    0 comments:

    Speak up your mind

    Tell us what you're thinking... !

    Like On Facebook

    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    விளம்பரம்