எனது இணைப்பக்கத்துடன் இணைந்து தங்களுடைய கருத்துக்களையும் தெரிவித்துக் கொள்ளுங்கள்
Published Date: October 04, 2013

சமூக சேவைகள் திணைக்களம்


பணி

“சமூகத்தின் பாதக நிலைமைகளை எதிர்கொண்டுள்ள மற்றும் பாதிக்கப்பட்டுள்ளோருக்கு நிவாரண உதவிகளை வழங்கி புனர்வாழ்வளித்தலும் இவ்வாறான நிலைமைகளைத் தவிர்ப்பதன் ஊடாக அவர்களையும் சமூக அபிவிருத்தியில் பங்காளர்களாக்குவதே எமது பணியாகும்".

நோக்கங்கள்

  • அங்கவீனமுற்றோருக்காக சம உரிமைகள் மற்றும் சம சந்தர்ப்பங்களை வழங்குவதற்காக பொறுப்புடன் செயற்படல்.
  • அங்கவீனமுற்றோரின் தொழில் தேர்ச்சிகளை விருத்தி செய்தல் மற்றும் அவர்களை சுயாதீன பிரஜைகளாக மாற்றியமைத்தல்.
  • விசேட தேவைகள் கொண்ட சிறார்களுக்காக முன்கூட்டியே தலையீடுகளை மேற்கொள்ளல்.
  • போதைப்பொருட்களுக்கு அடிமைப்பட்டோருக்கு புனர்வாழ்வளித்தல் மற்றும் போதைப்பொருளுக்கு அடிமைப்படுவதிலிருந்து மீட்சி பெற்றோர்களை சுய பலத்துடன் செயற்படக்கூடியவர்களாக சமூகத்தில் இணைத்தல்.
  • அங்கவீனமுற்றோருக்காக சேவைகளை வழங்கும் உத்தியோகத்தர்களின் அறிவு, திறமைகளை மேம்படுத்தல்.
  • அங்கவீனமுற்றோருக்கு சேவைககளை வழங்கும் தொண்டர் அமைப்புக்களை வலுவூட்டல்.

செயற்பாடுகள்

  • சமூக சேவைகள் திணைக்களத்தின் கீழ் நடாத்தப்படும் சீதுவ, கட்டவெல, தெலம்புயாய, வத்தேகம, அமுனுகும்புர ஆகிய தொழில் பயிற்சி நிறுவனங்களின் அங்கவீனமுற்ற இளைஞர், யுவதிகளுக்காக தொழில் பயிற்சி வேலைத்திட்டங்களை நடாத்துதலும், சுய தொழில் வாய்ப்புக்களுக்குத் தேவையான கருவிகளை வழங்குதல், தொழில் வாய்ப்புக்களை வழங்குதல் மற்றும் உடற்பாகங்களைச் செயற்படுத்த முடியாதோருக்கு செயற்கை உடற்பாகங்களை வழங்குதல்.
  • தொண்டர் அமைப்புக்கள் மூலம் நடாத்தப்படும் தொழில் பயிற்சி நிறுவனங்களில் பயிற்சி பெறும் அங்கவீனமுற்ற இளைஞர் யுவதிகளுக்காக பயிற்சி வேலைத்திட்டங்களை நடாத்துதல் மற்றும் சுய தொழில் வாய்ப்புக்காக உபகரணங்கள் மற்றும் நிதியுதவிகளை  வழங்குதல்.
  • விசேட தேவைகள் கொண்ட சிறார்களுக்காக முன்கூட்டியே தலையீடு செய்யும்  வேலைத்திட்டங்களை மஹரகம, நாவின்ன சிறுவர் வழிகாட்டல் மத்திய நிலையங்கள் ஊடாக நடாத்துதல்.
  • போதைப்பொருளுக்கு அடிமைப்பட்டுள்ளோரின் அடிப்படைப் பாடவிதானம், சமூக அடிப்படைப் புனர்வாழ்வு  மற்றும் தொழில் பயிற்சியை வழங்குதல், ஆலோசனை மற்றும் உரிய ஏனைய சேவைகளை வழங்குதல் (நவோதய மற்றும் புவக்பிட்டிய நிறுவகம்) பிரதேச செயலக மட்டத்தில் இளைஞர்களுக்காக போதைப்பொருள் வேலைத்திட்டங்களை நடாத்துதல்.
  • பயிற்சி வேலைத்திட்டங்களை முன்னெடுத்தல்.
  • பதிவு செய்த தொண்டர் சமூக சேவை அமைப்புக்களுக்குக் கிடைக்கும் வெளிநாட்டு நன்கொடைகளுக்கு வரி விலக்களிப்பிற்கான பரிந்துரை செய்தல்.
  • அங்கீகரிக்கப்பட்ட புனித ஸ்தலங்களின் நிலைமைகள் மற்றும் பரிந்துரைகளை மேற்கொள்ளல்.
  • நீர் மற்றும் மின் கட்டணத்திற்காக நிவாரண அளவினைப் பரிந்துரை செய்தல்.
  • சைகை மொழிபெயர்ப்பாளர் சேவையை வழங்குதல்
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்

    0 comments:

    Speak up your mind

    Tell us what you're thinking... !

    Like On Facebook

    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    விளம்பரம்