எனது இணைப்பக்கத்துடன் இணைந்து தங்களுடைய கருத்துக்களையும் தெரிவித்துக் கொள்ளுங்கள்
Published Date: October 02, 2013

இஸ்லாமும் சமூக மாற்றமும்


சமகால உலகும் அதன் சமூக அமைப்பும் மிகப் பாரதூரமான பிரச்சினைகளைஎதிர்நோக்குகின்றது என்ற உண்மையும்அது ஒரு மாற்றத்தை வேண்டி நிற்கின்றது என்பதும் இன்று பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படும் ஒரு யதார்த்தமாகும். 20ம் நூற்றாண்டின் முன்னணி வரலாற்று அறிஞர்கள்சமூக சிந்தனையாளர்கள் எனக் கருதப்படும் ஒஸ்வெல்ட் ஸ்பெங்லர் அவரது The Decline and the West எனும் நூலிலும் ஆர்னல்ட் டொய்ன்பீ அவரது  A Study of Historyஎன்ற நூலிலும் ஸொகராகின் அவரது The Crisis of our age எனும் நூலிலும் மேற்கின் சடவாத,லோகாயத நாகரிகமானது -அது எத்தனை அரசியல் பலத்தையும் பொருளாதார வளங்களையும் பெற்றிருந்தபோதிலும்- பிரச்சினைகள் நிறைந்ததொரு சோதனைமிக்க காலகட்டத்தில் உள்ளது என்ற உண்மையை மிகத் தத்ரூபமாக விளக்கியுள்ளனர்.

இந்த வரலாற்றுசமூகவியல் ஆய்வாளர்கள் முன்னறிவிப்புச் செய்த காலகட்டத்தை விட 21ம் நூற்றாண்டின் இந்த ஆரம்பப் பகுதியில் இந்நிலை மிகவும் தீவிரமடைந்துள்ளது.

போர்கள்இனமோதல்கள்இயற்கை அழிவுகள்சுற்றாடல் மாசடைதல்குடும்பக் கட்டுக் கோப்பின் சீர்குலைவுபெருகி வரும் தற்கொலைகள்அதிகரித்து வரும் போதைப் பாவனை,பாலியல் வன்முறைகள் எனப் பல பிரச்சினைகள் மனித இனத்தின் அமைதியும் நிம்மதியும் நிறைந்த எதிர்காலத்தை கேள்விக்குறிக்கு ஆளாக்கியுள்ளது.

இந்நிலையில் சமூக மாற்றம்மாற்றீடு பற்றி அதிகம் பேசப்படுகின்றது. சமூகமாற்றத்திற்கான சித்தாந்தங்கள்கோட்பாடுகள் வகுக்கப்படுகின்றன. சமூக மாற்றம்அதற்கான வழிமுறைகள்அது தொடர்பான சமூக நியதிகள் அனைத்தும் மேற்கத்திய நோக்கிலேயே விளக்கப்படுகின்றன. சமூக மாற்றத்தை இஸ்லாம் எந்த வகையில் நோக்குகின்றது. இது எந்த வகையில் மேற்கத்திய சடவாத நோக்கிலிருந்து வித்தியாசப்படுகின்றது என்பது பற்றிய சில முக்கிய அடிப்படைகளை விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

சமூக மாற்றம் பற்றிய மேற்கத்திய நோக்கு முற்றிலும் சடவாத கண்ணோட்டத்திலும்லோகாயத அணுகுமுறையிலும் அமைந்தது. வாழ்வின் ஒழுக்கஆன்மீக பரிமாணங்களை அது புறக்கணிக்கின்றது. சமூகத்தில் புற ரீதியான சில மாற்றங்களை ஏற்படுத்துவதன்மூலமும் சமூக நிறுவனங்களை புனர்நிர்மாணம் செய்வதன் மூலமும் சமூக மாற்றத்தைஏற்படுத்துவதே மேற்கத்திய அணுகுமுறையாகும்.

புவி பிரகடனப்படுத்திய புத்துலக அமைப்பு (New World order) பிரான்ஸிஸ் புகோயாமாவின் The End of History and the last man (1992) ஸமுவேல் ஹன்டிங்டெனின் The Clash of Civilization (1996)போன்ற நூல்கள் அனைத்தும் நவீன மேற்குலகம் கனவு காணும் சமூக மாற்றத்தின் முக்கிய பரிமாணங்களை விளக்குகின்றது. மனிதனை மையமாகக் கொள்ளாத சமூகக் கட்டுக்கோப்பைமாற்றத்தின் மையமாகக் கொண்ட சந்தைப் பொருளாதாரத்தில் மனிதனை வெறுமனே நுகர்வுப் பிராணியாகக் கருதுகின்ற அணுகுமுறையை இது கொண்டுள்ளது.

இஸ்லாத்தின் சமூக மாற்றம் பற்றிய கோட்பாடு இதற்கு முற்றிலும் முரணானது. அதுஉலகில் அல்லாஹ்வின் பிரதிநிதியான மனிதனை உடல்உள்ளம்ஆத்மா ஆகியமூன்றையும் உள்ளடக்கிய முழுமை நோக்கில் அணுகிஅவனை மையமாக வைத்துகுடும்பம்சமூகம்சர்வதேசிய அமைப்பு என்ற படிமுறைகளில் மாற்றத்தை ஏற்படுத்த விழைகின்றது. சமூகத்தின் கட்டுக்கோப்புநிறுவனங்களில் மாற்றம் ஏற்படுத்துவதன் மூலம் யதார்த்தமானஉறுதியானநிலையான சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என்பது இஸ்லாத்தின் கருத்தாகும்.

சமூக மாற்றத்திற்கு மனிதனைப் பற்றிய முழுமைத்துவப் பார்வை அடிப்படையாகும். இந்த முழுமைத்துவப் பார்வையின் அடிப்படையில் உருவான தனிமனிதர்களே மக்காவில்உருவாகிய சமூக மாற்றத்திற்கும்மதீனாவில் தோன்றிய ஆரம்ப கால இஸ்லாமிய சமூகம்,ஆட்சியின் தோற்றத்திற்கும் காரணமாக விளங்கினார்கள்.

சமூக மாற்றம் பற்றிய மேற்கத்திய அணுகுமுறை மனிதர்களின் உள்ளார்ந்த அம்சங்களில் மாற்றம் கொண்டுவருவதை முற்றிலும் புறக்கணித்து புறவுலகில் மாற்றம் கொண்டுவருவதிலேயே கூடிய கவனம் செலுத்துகின்றது. ஆனால் உண்மையில்அவசியப்படுவதுமனிதர்களது உள்ளார்ந்த ஆளுமையிலும்அவர்களது சமூகபொருளாதார சூழலிலும் ஏற்படும் பூரண மாற்றமாகும் என்பது இஸ்லாத்தின் நிலைப்பாடாகும். சமூக மாற்றம் பற்றிய இஸ்லாமிய அணுகுமுறையானது பின்வரும் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்குகின்றது.

1. 
சமூக மாற்றம் என்பது ஏற்கனவே பூரணமாக நிர்ணயிக்கப்பட்ட வரலாற்றுச் சக்திகளின் விளைவன்று. மாற்றமென்பது திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்படல் வேண்டும். இந்த மாற்றம் ஒரு நோக்கத்தையும் குறிக்கோளையும் உடையதாக இருத்தல் வேண்டும். அதாவது ஓர் இறுதி இலட்சியத்தை நோக்கிய நகர்வாக அது அமைதல் வேண்டும். இது சமூக மாற்றம் பற்றிய இஸ்லாத்தின் அடிப்படை விதிகளில் முக்கியமான ஒன்றாகும்.

2. 
மாற்றத்தை ஏற்படுத்தும் சாதனங்களில் மக்கள் முக்கிய பங்கை வகிக்கின்றார்கள். பூமியில் அல்லாஹ்வின் பரதிநிதி என்ற வகையில்ஏனைய சக்திகள் அனைத்தும் மக்கள் என்ற சாதனத்திற்கு அடுத்த தரத்திலேயே உள்ளன. இப்பரபஞ்சத்தில் நிலவும் தெய்வீக விதிக்கு ஏற்பஇறை சித்தத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ள கட்டுக்கோப்பிற்கு உட்பட்டு அவர்களது விதியைத் தீர்மானிப்பதற்கு மக்களே பொறுப்புடையோர் ஆவர்.

3. 
மாற்றம் சூழலில் மட்டுமன்றி மக்களின் உள்ளங்களிலும் அவர்களது மனோபாவம்,தூண்டுதல்அர்ப்பணம் ஆகியவற்றிலும் நிகழ்தல் வேண்டும். அவர்களது நோக்கங்கள்,குறிக்கோள்களை அடைவதற்காக அவர்கள் மேற்கொள்ளும் உறுதியிலும் செயற்பாட்டிலும் இம்மாற்றம் பரதிபலிக்க வேண்டும்.

4. 
வாழ்க்கை என்பது பரஸ்பர தொடர்புகளை உள்ளடக்கிய ஒரு வலைப்பின்னலாகும்.சமூகத்தில் ஏதாவதொரு மாற்றம் நிகழும்போது இந்த பரஸ்பர தொடர்புகளில் சிலபாதிப்புக்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகும்.
எனவே மாற்றமென்பது சம பலத்தைப் பேணி படிப்படியாக நடைமுறைப்படுத்தப்படல்வேண்டும். இஸ்லாத்தின் இந்த அதற்கே உரிய அணுகு முறையே புரட்சிகரமான மாற்றத்தை,படிமுறையான வழிமுறையைப் பின்பற்றி ஏற்படுத்தும் தன்மை படைத்தது. நபி (ஸல்) அவர்கள் சிலைகளை உடைப்பதற்கு 13 வருட காலம் காத்திருந்தார்கள். இஸ்லாமிய அழைப்பு ஆரம்பித்து பல ஆண்டுகள் வரை சிலைகள் கஃபதுல்லா வில் காணப்பட்டன. ஆனால் மக்கள் உள்ளங்களில் இறை விசுவாசத்தைப் படிப்படியாக வேரூன்றச் செய்துஇணை வைப்பாளர்களை பல போர்களில் சந்தித்துஇறுதியில் மக்காவின் வெற்றியின்போதே நபி (ஸல்) அவர்கள் கஃபாவிலிருந்த சிலைகளை தங்கள் கைகளாலேயே உடைக்கின்றார்கள். மதீனாவில் முக்கிய படித்தரங்களில் மது அருந்துவதைத் தடை செய்ததை யும் இது தொடர்பாகக் குறிப்படலாம்.

இஸ்லாம் சமூக மாற்றத்தை நோக்காகக் கொண்ட ஒரு மார்க்கமாகும். சமூகம் பற்றிய ஒரு தெளிவான கோட்பாட்டை இஸ்லாம் சமர்ப்பிக்கின்றது. வரலாற்றில் மாற்றத்தைவிளைவிப்பதற்கான வழிமுறைகளையும் அது வரையறுத்துள்ளது. இஸ்லாமிய நோக்கில்சமூக மாற்றமானது தனிமனிதன்சமூகம்உலகம் என்ற மூன்று படித்தரங்களில் அதுசெயல்படுகின்றது. தனிமனிதர்களின் விசுவாசம் உறுதியடைந்துசமூகத்தில் அவர்களது பங்கு குறித்து தெளிவான பார்வையைப் பெறாதவரை நாடப்படும் சமூக மாற்றத்தைக் கொண்டுவர முடியாது. அதன் பின்னர் ஆரம்பத்தில் சமூக மட்டத்திலும்அதனைத் தாண்டி முழு உலகத்தையும் பிணைத்த வகையிலும் இந்த மாற்றம் நிகழ்கின்றது.

ஒரு தனிமனிதன் தொடர்பான பிரச்சினை எவ்வாறு அனைத்து உலகையும் அல்லதுஇனத்தையும் உள்ளடக்கிய வகையில் நோக்கப்படல் வேண்டும் என்பதை அல்குர்ஆன்குறிப்படுகின்றது.

அல்குர்ஆன் ஸூறா அல் மாஇதாவின் 32ம் வசனத்தில் "எவர் மற்றோர் ஆத்மாவின்கொலைக்குப் பிரதியாகவோ அல்லது பூமியில் குழப்பத்தை தடை செய்வதற்காகவோ தவிர,அநியாயமாக மற்றொருவரைக் கொலை செய்கின்றாரோ அவர் மனிதர்கள் யாவரையும் கொலை செய்தவர் போலாவார். எவர் அதனை (ஓர் ஆத்மாவை) வாழ வைக்கின்றாரோ அவர்மனிதர்கள் யாவரையும் வாழ வைத்தவர் போலாவார்."

இங்கு இஸ்லாம் எவ்வாறு தனிமனிதன் தொடர்பான பிரச்சினையை மனித இனம்அனைத்துடனும் தொடர்பானதாக நோக்குகின்றது என்பதனையும்எவ்வாறு ஒரு நிகழ்வானது இஸ்லாமிய நோக்கில் பெறுமானங்களுடன் தொடர்பான பல பாதைகளைத் திறந்து விடுகின்றது என்பதையும் நாம் தெளிவாகக் கண்டு கொள்ள முடிகின்றது.

  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்

    0 comments:

    Speak up your mind

    Tell us what you're thinking... !

    Like On Facebook

    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    விளம்பரம்