எனது இணைப்பக்கத்துடன் இணைந்து தங்களுடைய கருத்துக்களையும் தெரிவித்துக் கொள்ளுங்கள்
Published Date: September 30, 2013

இரத்த அழுத்தம் (Blood Pressure) என்றால் என்ன?


உடலின் எல்லா உறுப்புகளுக்கும் ரத்தத்தை இதயம் “பம்ப்’ செய்யும்போது ஏற்படும்அழுத்தமே இரத்த அழுத்தம். இதயத்திலிருந்து ஒரு நிமிஷத்துக்கு ஐந்து லிட்டர் ரத்தம் எல்லா உறுப்புகளுக்கும் செல்கிறது. இப் பணியைச் செய்யும் இதயத் தசைகளுக்கு மட்டும் ஒரு நிமிஷத்துக்கு 250 மில்லி லிட்டர் இரத்தம் தேவை.உடலில் இரத்தம் பயணம் செய்யும் தூரம் எவ்வளவு தெரியுமா ஒரு சுழற்சியில் (One Cycle) இரத்தம் பயணம் செய்யும் தூரம் ஒரு லட்சத்து 19 ஆயிரம் கிலோமீட்டர்! இரத்தக் குழாய்களுக்குள் செல்லும்போது, அதன் வேகம் மணிக்கு 65 கிலோமீட்டர்!மோட்டார்சைக்கிளின் சராசரி  வேகத்தைவிட அதிகம்.மாத்திரை சாப்பிட்டவுடன் தலைவலி அல்லது கால்வலியிலிருந்து நிவாரணம் கிடைப்பது எப்படி?மாத்திரை சாப்பிட்டவுடன், அதில் உள்ள மருந்துப் பொருள் இரத்தம் மூலம் வலி உள்ள இடத்துக்குப் பயணம் செய்கிறது.வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.உடலில் இரத்தம் பயணம் செய்யும்போது எடுத்துச் செல்வது என்ன?எல்லாத் திசுக்களும் ஆற்றலை எடுத்துச் செல்லும் முக்கியப் பணியைஇரத்தம் செய்கிறது. கொழுப்புச் சத்து, மாவுச் சத்து, புரதம், தாதுப் பொருள்கள்வடிவத்தில் ஆற்றலை அது எடுத்துச் செல்கிறது. திசுக்கள் ஜீவிக்கஆக்சிஜனை எடுத்துச் செல்வதும் இரத்தம் தான்.இரத்த ஓட்டத்தின் முக்கியப் பணி என்ன?நுரையீரலில் இருந்து அனைத்துத் திசுக்களுக்கும் ஆக்சிஜனை இரத்தம் எடுத்துச் செல்லும்.திரும்புகையில் திசுக்களில் இருந்துகார்பன் டை ஆக்சைடை நுரையீரலுக்கு எடுத்துவந்துமூக்கு வழியே வெளியேற்றுவதும் இரத்தம்தான்
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்

    0 comments:

    Speak up your mind

    Tell us what you're thinking... !

    Like On Facebook

    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    விளம்பரம்