2) அல்லது கற்றற் கோட்பாடுகளை வகுப்பறையிலே பிரயோகம் செய்யும் எளிமையான செயற்பாடும் அன்று.
3) அடைவுப் பரீட்சைகளைப் பயன்படுத்தி பாடப் பொருளின் கற்றல் விளைவுகளைக் கண்டறியும் செயல் முறையும் அன்று
Ø ஜோன்டூயி
-----------------------
பிள்ளைக்குரிய ஆளுமையையும் வாழ்வதற்குரிய ஒழுக்கங்களையும் அனுபவங்களையும் பெற்றுக் கொடுத்தலே கல்வி என்றார்.
Ø பிளேட்டோ
-----------------------
ஆரம்ப வயதுகளில் பிள்ளைகளிடம் ஏற்படும் இயல்பான ஆர்வம், உயரிய நற்செயல் ஆகியவற்றிற்கு உரியமுறையில் அளிக்கப்படும் பயிற்சியே கல்வி என்றார்.
Ø ரூசோ
--------------
இயற்கைக்கேற்ப விருத்தியடையும் செயற்பாடுதான் கல்வி என்றார்.
Ø விவேகானந்தர்
------------------------------
மனிதனிடம் ஏற்கனவே பொதிந்திருக்கும் முழுமை பெற்ற நிறைவினை மலரச் செய்வது கல்வியாகும்.
Ø பிரான்ஸிஸ் பேகன்
-------------------------------------மகிழ்ச்சிகரமான அதிஷ்டமுள்ள வாழ்க்கையை நடாத்தும் பொறுப்பும், புத்தியை விருத்தி செய்வதும், வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துவதுமே கல்வி என்றார்.
Ø சோக்கிரட்டீஸ்
------------------------------
உறுதியான உடலில், உறுதியான மனதைத் தோற்றுவிப்பதே கல்வி என்றார்.
Ø மகாத்மா காந்தி
------------------------------
பிள்ளையினுள்ளே அடங்கியுள்ள அனைத்து ஆற்றலையும் வெளிக்கொணருவதே கல்வி என்றார்.
Ø அரிஸ்டோட்டில்
----------------------------
மனிதனின் திறமையை குறிப்பாக அவனுடைய மனதை வளர்க்கின்ற ஒரு செயற்பாங்கு கல்வி என்றார்.
கல்வி என்பதற்கு வரைவிலக்கணம் கொடுப்பது மிகவும் சிக்கலான விடயமாகும்.
எனினும் அறிவைக் கொடுத்தல், தனியாள் விருத்தி, நடத்தை விருத்தி, ஆளுமை வளர்ச்சி, அனுபவங்களைப் பெற்றுக் கொடுத்தல், ஒழுக்கம் போன்றவற்றை ஏற்படுத்துவது கல்வி எனலாம்.
BA, PG Dip in Applied Sociology, Dip in English.