எனது இணைப்பக்கத்துடன் இணைந்து தங்களுடைய கருத்துக்களையும் தெரிவித்துக் கொள்ளுங்கள்
Published Date: February 06, 2016

சூறா பாத்திஹாவின் மஹிமை

சூறா பாத்திஹாவின் ஆரம்பசொல் ஆரம்பித்தல் என்று பொருள் படும். வேதநூலின் ஆரம்பம் அல்ஹம்துலில்லா என்றுரைத்து தொழுகை தொடங்குகின்றது. நூலின் தாய் என்று கூறப்படும். அந்தக் கருத்தை நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுக் கூறியு முள்ளார்கள். திர்மிதி நூலில் அபீஹுரைறா (றலி) அவர்களைத் தொட்டுவரும் ஹதீது நபியவர்கள் அவ்வாறு சுட்டிக் காட்டினார்கள் எனக் கூறுகின்றது. தொழுகை என்ற கருத்தும் அச்சொல்லுக்கு உண்டு. தொழுகை எனக்கும் அடியானுக்கும் இடையே சரியரை வாசி யாகப்பகிர்ந்துள்ளது என்று அல்லாஹ் கூறுவதினாலும் அதன் மகிமையும். சிறப்பும், உயர்ந்ததாகக் கருதப்படும். ஏழுவசனங்களை உள்ளடக்கியதான வசனமாகும். தொழுகையில் ஓதும் படி நிபந்தனையிடப்பட்டுள்ளது. விஷம் தீண்டப்பட்ட ஒருவருக்கு அந்த சூறாவை ஓதி சுகம் கிடைத்தது என்ற ஹதீஸை அபீஸயீத் (றலி) அவர்கள் எடுத் துரைத்துள்ளார்கள்.

பாத்திஹா சூறா மக்காவில் அருளப்பட்ட தாகும். (வலகத் ஆனதாக சப்ஹம் மினல் மதானி) என்ற திருவசனம் அந்த சூறாவின் உயர்வை நிரூபிப்பதாக உள்ளது. அதில் 25 சொற்கள் உள்ளன. 113 எழுத்துக்கள் இதில் அடங்கியுள்ளது. அல் இமாம் அஹ்மது இப்னு ஹன்பல் (றஹ்) அவர்கள் தனது முஸ்னதியில் அன் அபீஸஹ்திப்னி மஹ்வா (றழி) அவர்கள் சொன்ன ஹதீதுடைய கருத்தைக் கவனிப்போம். அவர் கூறுகின்றார்: நான் பள்ளியில் தொழுது கொண்டிருந்தேன் நபி (ஸல்) அவர்கள் என்னை அழைத்தார்கள். தொழுகையில் நிற்பதால் தொழுது முடிந்தபின் நபியவர்களிடம் சென்றேன். எனது அழைப்புக்கு விடைபகராது. உம்மை தடுத்தது எது எனக் கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதரே நான் தொழுது கொண்டிருந்தேன் என்று அந்த சஹாபி கூறினார். றஸ¤ல் அழைத்தால் விடைபகர வேண்டுமென்று கூறும் அல்லாஹுவின் கூற்றை நபியவர்கள் எடுத்துக்காட்டி பின்பு இப்பள்ளியை விட்டும் வெளியேறு முன் நான் உங்களுக்கு திருக்குர் ஆனிலுள்ள மிகவலுப்பமான சூறாவைக் கற்றுத் தரட்டுமா? என்று சொல்லி அந்த ஸஹாபியின் கையைப் பிடித்தவண்ணம் வெளியேற முற்பட்டார்கள் அவ்வேளை அந்தஸஹாபி அல்லாஹுவின் தூதரே, நீங்கள் குர் ஆனிலுள்ள வலுப்பமான சூறாவைச் சொல்லித்தருவதாகக் கூறினீர்களல்லவா என்றார்கள். அதற்கு நபியவர்கள் ஆம் என்று சொன்னதும். அல்ஹம்துலில்லாஹிறப்பில் ஆலமீன் என்று தொடங்கி அது ஏழு வசனங்கள் வலுப்பமான திருக்குர் ஆனில் அருளப்பட்டது என அறிமுகம் செய்தார்கள்.

(ஆதாரம் புஹாரி அபூதாவுத், நஸாகி, இப்னுமாஜா)
அபீஹுறைரா (றலி) அவரக்ள் நபி (ஸல்) அவர்களுடன் தொழுகைக்குச் சமுகமளிக்கும் போது அல்ஹம்து சூறாபற்றிக் கூறினார்கள். அல்லாஹ் இந்த சூறா ஓதும் போது எனக்கும் ஓதும் அடியானுக்கும் இதில் பங்குண்டு என்று சொல்லுகிறான். அடியான் கேட்டதைக் கொடுப்பேன் என்று கூறுகின்றான். “அல்ஹம்துலில்லாஹி றப்பில் ஆலமீன்” என்று அடியான் ஓதும் போது அடியான் என்னைப் புகழ்கின்றான் என அல்லாஹ் கூறுகின்றான். “அர்றஹ்மானிர்றஹீம்” என்னும் போது அடியான் என்னைப் புகழ்கின்றான் என்கின்றான். “மாலிகியெளமித்தீன்” என்னும் போது அடியான் என்னை வலுப்படுத்தி கண்ணி யப்படுத்துகிறான் “இய்யாக நஃபுதுவ இய்யாக நஸ்த்தஹீன்” என்னும் போது இது எனக்கும் என் அடியானுக்கும்மிடையே உள்ள தொடர்பு. அவன் கேட்டதைக் கொடு ப்பேன் என்கின்றான். பின்னர் தொடராக உள்ள ஆறாம் ஏழாம் வசனங்களை ஓதிமுடித்து அதிலுள்ள பிரார்த்தனையை அல்லாஹ் கேட்டதும். அந்த அடியானுக்கு கேட்டவை யாவற்றையும் ஈந்தருள்வதாகக் கூறுகின் றான். இந்தத் தொடர்பை விளக்கியதும் அல்லாஹ் எனக்கு அரைவாசி. என் அடியானுக்கு அரைவாசி இதில் அமைகின்றது என்று கூறி நன்மைகளை வழங்குகிறான். முஸ்லிம் நஸாஇ ஆகிய நூல்கள் இதற்கு ஆதாரமாக உள்ளன.

குர் ஆனை ஓதும் போது ஷைத்தானை விட்டும் பாதுகாவல் தேடி அஊது சொல்லு வதும் சுன்னதாகும். தொழுகையில் அல்ஹம்துவை பிஸ்மிலுடன் சேர்த்து ஓதுவது சாபியீ, மதுஹபுடையவர்களுக்குக் கட்டா யக் கடமையாகும். தொழுவிக்கும் இமாம் கள் பிஸ்மிலை சப்தமிட்டடு ஓதுவதும் மஹ்மூங்கள் அதைப் பின்பற்றி ஒழுகுவதும் மிக முக்கியமாகும்.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்

    Like On Facebook

    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    விளம்பரம்