பல புத்தகம் படித்தவன் ஓர் புத்தகம் எழுதுகிறான், இவனது நூலை படிப்பவன் இன்னொறு நூலை படைக்கிறான். இவ்வாறு அவர்களுடைய தாய்மொழி வளர்கிறது.
மொழிகளில் ஆங்கில மொழி முக்கியமானதாக கருதப்படுகிறது. அதற்கு காரணம் ஆங்கிலேயரின் காலனியாதிக்க முறை. இதன் மூலம் அவைகள் மொழியையும்,மதத்தையும் பரப்பினர்.
ஒருவர் தனக்கு பிடித்த எந்த துறையாவது முதலில் தேர்ந்தெடுத்து படிக்கலாம். அவர் படிக்கும் துறையில் கூறப்பட்டுள்ள மற்றொரு துறையை அவர் படிக்கக்கூடும். இவ்வாறு விளையாட்டாக படிக்க ஆரம்பிக்கும் ஒருவர் புத்தக வெறியராக மாறி ஓர் விங்ஞானியாகவோ,பேச்சாளராகவோ,எழுத்தாளராகவோ ஆகமுடியும் என்பது தான் உண்மை. அப்படித்தான் பலர் உலகம் போற்றும் முக்கியஸ்தர்களாக மாறியுள்ளனர்.
ஓர் புத்தகம் படிக்கும் பொழுது அதில் குறிப்பிட்டுள்ள அனைத்து துறைகளிலும் தெளிவு வேண்டும். உதாரணமாக "How to Become Indian" என்ற புத்தகத்தில் உலகமயக்கொள்கை பற்றி கூறியிருந்ந்தால் உலகமயம் பற்றியும் தெரிந்து தெளிவு கொள்ள வேண்டும். ஒருவர் சே குவாரா பற்றி படிக்கும் பொழுது பிடல் காஸ்ரோ பற்றி படித்தால் கியூபப்புரட்சி முழுவதும் அறிந்துகொள்ளாம்.அண்ணா திமுகவை ஏன் உருவாக்கினார்? கழகம் எவ்வாறு வளர்ந்தது? என்பதை அறிந்துகொள்ள வேண்டுமானால் பெரியார்,காமரசர்,கருணாநிதி போன்றவர்களை பற்றி படிக்க வேண்டும்.பிராமணியம் பற்றி அரிய விரும்புபவன் வேதகாலம் முதல் இதிகாசம் வரை அனைத்தையும் படிக்க வேண்டும்
இந்தியாவை ஆங்கிலேயர்கள் அடிமை படுத்தக்காரணம் நம்மவைகள் பலரிடம் கல்வியறிவு இல்லை,விழிப்புணர்வு,பகுத்தறிவு இல்லை.முக்கியமாக சாதி,மத பாகுபாடினால் அனைவருக்கும் கல்வி என்பது இல்லாமல் போனது. ஆனால் மற்ற முற்போக்கான உலக நாடுகளில் அனைவருக்கும் கல்வி என்பது அவசிமானதாக இருந்தது. "கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு","கற் கற்பி" என்பதை மேல்சாதியினர் மட்டுமே பயின்றனர்.
ஒருவன் வாசிக்க ஆரம்பித்தால் அவனது எண்ணம் விசாலம் அடைகிறது.அவனது குறுகிய பார்வை உலகம் முழுவதும் விரிகிறது.உலகிலுள்ள சாதனையாளர்களில் வாசிப்பு திறன் அற்றவர்கள் என்று எவராலும் சுட்டிக்காட்ட முடியாது. அவர்களுள் சிலரை உதாரணமாக பார்ப்போம்.
- சே குவேரா - தனது பள்ளி காலம் முதல் அனைத்து துறை புத்தகத்தையும் படித்தார்.இதன் மூலமே அவருக்கு லத்தின் அடிமைபட்டு கிடப்பது புரிந்தது.அதற்காக போராடவும் செய்தார்.போராட்டதின் போதும் படிக்கும் பழக்கத்தை அவர் விடவில்லை. ஓர் மடுத்துவர் கியுபாவின் பொருளாதார மேதையாக இருந்தார் என்றால் அது சே குவேரா தான்.
- ஹிட்லர் கம்யுனிசம் மீது ஈடுபாடு கொண்டு கம்யுனிசம் சித்தாந்தத்தை படிக்கலானார். பின்பு முதல் உலக போரின் இறுதியில் அவர் ஆற்றிய இராணுவ சேவை மூலம் அவர் இராணுவதின் ஆணைபடி புதிய கட்சி ஆரம்பித்தார் அதுவே நாஜி கட்சி. வெறும் ஆறே பேரால் உருவாக்கப்பட்டது. ஹிட்லரின் நாஜி கட்சியில் கம்யுனிசம் சாயல் சிறிது இருக்கும். பள்ளி படிக்காமல் தேசப்பற்றை புத்தகம் மூலமாக படித்த அவர் உலகத்தையே ஆட்டிபடைத்தார்.
- அண்ணா அவர்களின் அறிவாற்றல் அனைவரையும் புரமிப்புட்டியது. கன்னிமாரா நூலகத்தில் பாதி சதவிகித புத்தகத்தை படித்தார் என்றும் கூறுவர். இதுவே அவரை பொதுசேவையில் ஈடுபட செய்தது. தமிழகத்தின் பேராதறவு கொண்ட முதல்வர் ஆக்கியது. காந்தி முதல் அரவிந்து கெஜ்ரிவால் வரை அனைவரும் புத்தக வெறியர்கள்.இன்னும் பல உதாரணங்கள் கருணாநிதி திராவிட புத்தக வெறியர், பிராபகரன் Client Eastwood புத்தகவெறியர்
இன்று வாசிப்பு திறன் குறைந்துவிட்டது என்று கூறாலாம். இதற்க்கு காரணம் தொலை என்று தொடங்கும் அனைத்து சாதனங்களும் வாசிப்பு திறனுக்கு தொல்லையாக அமைகிறது.மக்கள் அனைவரும் சொகுசாக வாழவிரும்புகிறாகள்.
வாசிப்பின் மூலம் சுயநலம் கடந்து பொதுநலம் உண்டாகும், அறிவு விரித்தடையும்,மொழி,நாடு வளரும்.