எனது இணைப்பக்கத்துடன் இணைந்து தங்களுடைய கருத்துக்களையும் தெரிவித்துக் கொள்ளுங்கள்
Published Date: August 23, 2015

கற்றலில் குறைபாடு – Dyslexia

டிஸ்லெக்சியா Dyslexia என்றால் என்ன?
  • Ø  மூளையில் உள்ள சில பிரச்னைகளால்இக்குறைபாடு குழந்தைகளுக்கு ஏற்படுகிறது.
  • Ø  இக்குழந்தைகளுக்குபடிப்பதிலும் எழுதுவதிலும் சிரமங்கள் இருக்கும்.
  • Ø  இவர்கள் மனநிலை சரியில்லாதவர்கள் அல்ல.
  • Ø  இவர்கள் புத்திசாலியாகசில செயல்பாடுகளில் ஆர்வம் உள்ளவர்களாக இருக்கலாம்.
  • Ø  இவர்களுக்கு எழுதுவதும் படிப்பதும் மட்டும்தான் கொஞ்சம் கடினமான காரியம்.
  • Ø  கடின உழைப்பும்சரியான வழிகாட்டுதலும் இருப்பின் டிஸ்லெக்சியாவால் பாதிக்கப்பட்டகுழந்தைகளால் படிக்கவும் எழுதவும் முடியும்.
டிஸ்லெக்சியா ஏன் ஏற்படுகிறது?
டிஸ்லெக்சியா ஏற்படும் விதங்களைக் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தலாம்.
  1. Traumatic Dyslexia மூளையில் படித்தல்எழுதுதலைக் கட்டுப்படுத்தும் பகுதியில் ஏற்பட்டஅதிர்ச்சி அல்லது காயம் காரணமாக ஏற்படும் குறைபாடு Traumatic Dyslexia என்றுஅழைக்கப்படுகிறதுஇது பொதுவாகச் சிறு குழந்தைகளிடம் அதிகம் காணப்படுவதில்லை
  2. Primary Dyslexia - பிறவியிலேயே மூளையின் இடப்பக்கத்தில் (Cerebral Cortex) ஏற்படும்தவறான வினையாக்கம்அல்லது அப்பகுதி சரிவர வேலை செய்யாமையின் காரணமாகப் படிப்பது,எழுதுவது இவற்றில் ஏற்படும் குறைபாடுபரம்பரை பரம்பரையாக(Hereditary)., ஜீன்களின் மூலம்கடத்தப்படுகிறது இது 'Primary Dyslexia', என்று அழைக்கப்படுகிறதுஇக்குறைபாடுஉடையவர்களுக்கு எத்தனை வயதானாலும் எழுதுவதும் படிப்பதும் சிரமமாகவே இருக்கும்இதுஇருபாலாரிடமும் காணப்படும் குறைபாடு ஆகும்.
  3. Secondary Dyslexia - பிறவிக்கோளாறு இல்லாமல்ஹார்மோன்களின் சுரப்பின் காரணமாகஉருவாவது Secondary Dyslexia என்று அழைக்கப்படுகிறதுஇது சிறுவர்களிடம்தான் அதிகம்காணப்படும்இக்குறைபாடு வயதானால் குறைந்துவிடக்கூடும்
கற்றுக்கொள்வது என்பது பல நிலைகளை உடையது.
  • ü  ஒலிகள் இணைந்து எப்படி வார்த்தைகளை உருவாக்குகிறது என்பதை உணர்தல்
  • ü  வடிவங்களைக் கவனித்து எழுத்துக்களை அறிதல்
  • ü  ஒலிகளுக்கும் எழுத்துக்களுக்குமான தொடர்பை உணர்ந்துகொள்ளுதல்
  • ü  ஒலிகளையும் , எழுத்துக்களையும் இணைத்து வார்த்தைகளாக்குதல்
  • ü  புத்தகத்தின் பக்கங்களில் வரிகளின் மீதான ஒழுங்கமைவு மற்றும் கட்டுப்பாடுஅதாவது ஒருவரியைப் படித்தபின் அதற்கடுத்த வரிஅதற்கடுத்தது என்று வரிசையாகப் படிக்க இயலுதல்
  • ü  முன்பே அறிந்தவற்றையும்புதிதாகப் பார்ப்பவற்றையும் தொடர்பு படுத்த இயலுதல்
  • ü  புதிய கருத்துப் படிவங்கள்உருவகங்களை உருவாக்குதல்உத்திகளை உருவாக்குதல்
  • ü  பார்த்தவைபடித்தவைகளை நினைவில் நிறுத்துதல்
இவை அனைத்தும் சரிவர நடக்கும்பொழுதுதான்நாம் படிப்பது எழுதுவது போன்றவை நடக்கும்.இவற்றில் சிலவற்றை நம்மால் செய்ய முடியவில்லை எனில்அச்செயல்பாட்டு சீர்குலைந்துவிடும்.படிப்பதுஎழுதுவதுநினைவு வைத்துக்கொள்வது இவற்றில் குறைபாடு உண்டாகும்.டிஸ்லெக்சியாவால் பாதிப்புக்குள்ளான குழந்தைகளுக்குமுதல் இரண்டு மூன்று படிகளிலேயேதடுமாற்றம் உண்டாகிறதுஅவர்களால் ஒலி வார்த்தைகளை உருவாக்குவதையும்,வடிவங்களைக்கொண்டு தொடர்புகளை உணர்வதையும்பல ஆணைகளை ஒன்றாகக்கொடுக்கையில் அவற்றை வரிசையாகச் செயல்படுத்துவதையும் கிரகித்துக்கொள்ளஇயலுவதில்லைஇதன் காரணமாகவே அவர்கள் மேற்கொண்டு படிப்பது மிகுந்த கடினமானசெயலாகி விடுகிறது.

குழந்தைகள் படிக்கையில்  என்ற எழுத்துடன் து என்ற எழுத்தைச் சேர்த்தால் அது என்ற சொல்உருவாகும் என்பதைப் புரிந்துகொண்டு சொற்களைத் துவக்கத்தில் படிப்பார்கள். 'எழுத்துக்கூட்டிப்படி', 'வாய்விட்டுப் படிஎன்று சிறுகுழந்தைகளை நாம் கூறுவது அதனால்தான்.நாளடைவில் பலமுறை ஏற்கனவே பார்த்த சொற்களை ஒலிவடிவத்தை உணர்ந்து எழுத்துக்களைக்கூட்ட வேண்டிய அவசியம் இல்லாமலேயேநினைவாற்றலின் உதவியால் குழந்தைகளால் படிக்கஇயலும்ஆனால்டிஸ்லெக்சியாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளால்இந்த இயல்பான செயலைச்செய்ய முடியாது.

இவர்கள் எழுத்துக்களை அவற்றின் வரிவடிவத்தைக் கொண்டு அடையாளம் காண்பது முதல்,முன்பு படித்தவற்றை நினைவில் நிறுத்திக்கொள்வது வரை ஒவ்வொரு கட்டத்திலும்தடங்கல்களைச் சந்திக்கின்றனர்.உதாரணமாக 'cat' 'tac' ஆகவும், 'pot' 'top'ஆகவும், 'was', 'saw'ஆகவும் இவர்களுக்கு மாறிவிடக்கூடும்அதே போல் 'சுக்கு மிளகு திப்பிலிஎன்று எழுதினால்இவர்கள் அதை 'சுக்குமி லகுதி ப்பிலிஎன்று பார்க்கக் கூடும்இதனால் இவர்கள் மிக மெதுவாகவும்,ஏகப்பட்ட தப்பும் தவறுமாகவும் படிப்பார்கள்ஒரே விதமான எழுத்துப் பிழைகளைத் திரும்பத்திரும்பச் செய்வார்கள்எழுத்துக்களைத் தலைகீழாகவும் இவர்கள் எழுதக்கூடும்.

டிஸ்லெக்சியா குறைபாடு இருப்பதை சிறுகுழந்தையாக இருக்கும்பொழுதே கண்டறிந்து அதற்கானசிறப்பு ஆசிரியர்களிடம் Dyslexia Specialists Teacher காட்டலாம்இரண்டு அல்லது மூன்றுவயதுக்குழந்தையால் 'ABCD' எல்லா எழுத்துக்களையும் உணரவும்உச்சரிக்கவும் முடியும்குழந்தைபள்ளிக்குச் செல்லத் தொடங்கிய பின்னும் எழுத்துக்களை இனம் காண்பதில் சிக்கல்கள் இருப்பின்குழந்தை மருத்துவர்களிடம் காட்டவேண்டும்இக்குழந்தைகளுக்கு அவர்களுக்குப் புரியும்படிகற்றுத்தரும் சிறப்பு ஆசிரியர்களிடம் சில நாட்கள் கற்றுக்கொண்டால்அதன் பின் அவர்கள்தாமாகவே படிக்கத் தொடங்கிவிடுவர்பழைய முறைகளின் எழுதுதல்படித்தல் மட்டுமின்றிஇவர்களுக்குஒலி ஒளிக்காட்சிகள் மூலம் கற்றுக்கொடுத்தல் நல்லது.

  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்

    Like On Facebook

    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    விளம்பரம்