எனது இணைப்பக்கத்துடன் இணைந்து தங்களுடைய கருத்துக்களையும் தெரிவித்துக் கொள்ளுங்கள்
Published Date: April 26, 2015

பாவம் இந்த ஆசிரியர்கள்- ஏன் தான் இவர்களுக்கு மட்டும் இப்படி நடக்குதே!

-ஸிப்னாஸ் ஹாமி-

ஆசிரியர் பணி அறப்பணி அதற்கு உன்னை அர்ப்பணி என்பது போல ஆசிரியர் என்பது ஒரு பணி அல்ல, அது ஒரு தொண்டு. மாணவர்களின் அறியாமை எனும் இருளை நீக்கி அவர்களது வாழ்வில் ஒளி ஏற்றுகின்றனர் ஆசிரியர்கள். எழுத்தறிவித்தவன் இறைவன், மாணவர்கள் கல் என்றால், ஆசிரியர்கள் சிற்பிகள் போன்ற பொன்மொழிகள் ஆசிரியர்களுக்கு புகழ் சேர்க்கின்றன.

ஒரு நாட்டின் தலைவிதி வகுப்பறைகளில் தீர்மானிக்கப்படுகிறது என்பது நூறு சதவீதம் உண்மை. தாய், தந்தையை விட, ஆசிரியரிடம் தான் ஒரு குழந்தை அதிக நேரம் செலவழிக்கிறது. எனவேதான், ஆசிரியத்துவத்தில் இருக்கும் ஆசிரியர்கள் இரண்டாவது பெற்றோர் என அழைக்கப்படுகின்றனர். தன்னிடம் படிக்கும் மாணவர்களை, சமுதாயத்துக்கு ஏற்ற வகையில் மனிதனாக மாற்ற வேண்டிய கடமை ஆசிரியர்களுக்கு உண்டு. மாணவனுக்கு சமூகத்தில் கிடைக்கும் வெற்றிதான் கற்பித்த ஆசிரியரின் வெற்றி.

கல்வி நடவடிக்கைகளில் ஆசிரியர் வகிக்கின்ற பங்கு முக்கியமானது. ஆதனை சரிவர நிறைவேற்றினால் தான் உயர்ந்த பெறுபேறுகளை, அடைவுகளை பெறலாம். பெரும்பாலும் கற்றலில் முன்னேற்றம் வர ஆசிரியர்களும் காரண கர்த்தாக்களாக இருப்பது போலவே பின்னடைவுகள் வரவும் காரணமாக இருக்கிறார்கள் என்பதை மறுக்கவும் மறைக்கவும் முடியா உண்மையாகும். அப்படியான பின்னடைவுகளுக்கும் நியாயமான எல்லாக்காரணிகளும் செல்வாக்கு செலுத்துகின்றன.

ஆசிரியர்களும் மனிதர்களே. அவர்களுக்கும் பிள்ளைகள், மனைவிமக்கள், உறவினர், நோய்நொடிகள், கஷ்ட நஷ்டங்கள், அத்தியாவசிய தேவைகள், விருப்பு வெறுப்புகள், ஓய்வுகள் போன்றன உள்ளன. இவற்றையும் நாம் அறிந்துள்ளது போலவே நிலமைகளுக்கேட்ப அனுசரித்து நடக்கவும் வேண்டும்.காலையிலே மாணவர்கள் பாடசாலை செல்லவேண்டும் என்பது போலவே ஆசிரியர்களும் அந்நேரத்துக்கு முன்பாக அல்லது அதே நேரத்தில் செல்ல வேண்டும்.எனவே வீட்டிலுள்ள சிறு பிள்ளைகளை பராமரிப்பது,பாடசாலை செல்லும் சிறு பிள்ளைகளை தயார் படுத்துவது,வேலை செல்லும் கணவனை கவனிப்பது,காலை ஆகாரம் தயாரிப்பது,பல போது பகலுணவையும் தயாரிப்பது,அனைத்தோடும் சேர்த்து தானும் தயாராகுவது என்பதை நினைக்கும் போது ஒரு ஆசிரியர் இயல்பாகவே தடுமாற்றத்துக்குட்படுவார்.

கற்பிக்கும் சூழல் அமைதியாக மட்டுமன்றி மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும். அப்போதே கற்பித்தல் வெற்றிகரமாய் அமையும். ஏட்கனவே குறிப்பிட்ட ஒரு சில காரணிகளில் பாதக நிலை ஏற்பட்டாலும் அன்றைய கற்பித்தல் வெற்றியளிக்காது. உதாரணமாக ஒரு ஆசிரியர் அல்லது ஆசிரியை அன்றைய தினம் தாமதமாக விளித்தெழுகிறாள் என்று வைத்துக்கொள்வோம்.அப்போதே பிரச்சினை ஆரம்பித்துவிடும். பதகளிப்பும் பரிதவிப்பும் அதிகரிக்கும். குருதியமுக்கமும் ஏற்படும். அரக்கபரக்க அலைந்து திரிந்து ஒருவாறாக வேலைகளை முடித்து வெளிவந்தாலும் பாடசாலை செல்லும் பஸ் அல்லது வண்டி வரதாமதித்தால் அத்தனையும் முடிந்துவிடும். அதிபர் சிவப்புக்கோடிடுவார். ஆசிரியர் வர தாமதித்ததால் வகுப்பில் அமளிதுமளி தான். ஆசிரியர; பதட்டமும் பதகளிப்பும் சகிதம் வகுப்பறைக்குள் நுழைவார்.

பிள்ளைகளின் அட்டகாசங்களும் துடினமும் ஆசிரியரை ஆற்றுப்படுத்துனராக மாற்றிவிடும்.ஆனால் ஆசிரியரின் நிலை பரிதாபமானது.அதேநாள் பெற்றோரும் பிள்ளைகள் பற்றி அறிந்துகொள்ள வந்து வகுப்பருகில் நின்றுவிட்டால் விடயம் இன்னும் மோசமாகும்.ஆசிரியரின் மனோ நிலையைப்புரிய ஆசிரியருக்கு மட்டுமே முடியும்.அதே நாள் எதேச்சையாக கல்வித்திணைக்கள அதிகாரிகள்,அல்லது ஆசிரிய ஆலோசகர்கர்கள் வந்துவிட்டால் நிலைமை இன்னும் மோசமாகும்.

இப்படியான நெருக்கீடுகளுக்கு உள்ளாகும் ஆசிரியர்களின் மனோநிலை சீராக்கப்படாதவிடத்து பாதிக்கப்படப்போபவர்கள் மாணவர்கள்தான். ஆசிரியர்களை மகிழ்வுக்குள்ளாக்க வேண்டும். அவர்களையும் ஊக்கவிக்க வேண்டும். ஆசிரயர்களின் நெருக்கீடு,பதகளிப்பு தொடர்பான விஞ்ஞான ஆய்வுகள் நடைபெறுகின்றன.அவைபற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும். எதிர்விசைகளை தாங்கிக்கொள்ள முடியாத போது நெருக்கீடுகள் பலமடைகின்றன.நெருக்கடிகள் பலமாக மாறினால் ஆதரவற்ற மனோநிலை உருவாகும்.

இந்நிலை ஆசிரியர்களைப்பொறுத்தவரை. மிகவும் ஆபத்தானது. எனவே இந்த விடயம் மிகவும் விலாவாரியாக அலசி ஆராயப்பட ஆசிரியர; இது பற்றி அறிய வேண்டும் .குறிப்பாக எமது சூழல்,கலாசார முறைகளுக்கேட்ப அலசப்பட வேண்டும்.எம்மிலிருந்து ஆரம்பிக்க வேண்டும்.

நல்ல கற்பித்தல் நிகழ நல்லாசான் அவசியம்.அறிவில் தன்னை தயார் நிலையில் வைத்துள்ள அதே நேரம் மனோ நிலையில் தவிப்பு காணப்படின் அங்கு தோல்விதான் ஏற்படும்.எனவே நெருக்கீட்டை தவிர்க்கவும் தடுக்கவும் அவற்றை உருவாக்கும் காரணிகளை இனங்கண்டு அவற்றை முதலில் நிவர்த்தி செய்து மகிழ்ச்சியுடன் வகுப்பறைக்குள் நுழையும் உளவியல் அணுகுமுறைகளும் கடைபிடிக்கப்பட்டால் மாணவர் பரம்பரையை ஆளுமை மிக்கவர்களாக உருவாக்கலாம்.அவர்களில் நம்பிக்கை வைக்கலாம். இல்லாவிட்டால் chalk and talk ஆசிரியர்களாலும் பாடப்புத்தகத்தை நெட்டுருச்செய்து பரீட்சைக்கு வாந்தியெடுக்கும் புத்தகப்பூசிகளாலும் தான் சமூகம் நிரம்பி வழியும்.இன்றே இவற்றை தவிர்ப்போம். சிந்திப்போம். செயல்படுவோம். வெற்றி நிச்சயம்

-சிறந்த ஆசிரியர; சமூகம் இல்லையேல்….
சிறந்த மாணவர; சமூகம் இல்லை-
- சிறந்த மாணவர; சமூகம் இருப்பின் தூய தேசம் வளமான வாழ்வு நிச்சயம் -

  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்

    0 comments:

    Speak up your mind

    Tell us what you're thinking... !

    Like On Facebook

    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    விளம்பரம்