.jpg)
பண்டைய கிரேக்க தத்துவ வாதியான Heraclitusof Ephesus , மற்றும் பதினேழாம் நூற்றாண்டின் யூத தத்துவ ஞானி Baruch Spinoza , கிருஸ்தவ தத்துவ வாதி GIORDANO BRUNO போன்றோரது சிந்தனைகளில் அத்வைதம் சார்ந்த கருத்துகள் காணக் கிடைப்பது இது ஒரு மதரீதியான கொள்கை என்பதை விடவும் தத்துவார்த்த சிந்தனை!! என்பதை வலுவூட்டக்கூடியதாக அமைந்துள்ளது.
இந்த சிந்தனைச் சிக்கலின் அபத்தத்தை, அதன் அறிவீனத்தை அத்தவிதத்தின் அனைத்துக் கூறுகளையும் அறிந்து கொள்கின்ற யாராலும் மிக இலகுவாக விளங்கிக் கொள்ள முடியும்.!!
இதன் கரானமாகவே எமது சமூகத்தில் அத்வைதக் கொள்கையை பிரச்சாரம் செய்யும் அத்வைதிகள் இக்கொள்கையின் பாரதூரமான விளைவுகளையும் படு பயங்கரமான முடிவுகளையும் கவனமாக மறைந்து விட்டு ஏதோ "ஆத்மீகத்தின் உச்ச நிலை" என்ற ரீதியில் முன்வைப்பதைப் பார்க்கின்றோம்.
இந்த வகையில் அத்வைதம் பொதிந்திருக்கும் இஸ்லாத்தையே தகர்த்து விடும் , அபாயகரமான , பாரதூரமான கருத்துகளில் இரு விடயங்களை இப்பதிவில் மிகச் சுருக்கமாக நோக்குவோம்.!!
1-நன்மை தீயமையை, நற்கூலி தண்டனையை மறுத்தல்:
எல்லாம் கடவுள் என்ற அத்வைதக் கொள்கை, கடவுளே மனிதனாக மனிதனே கடவுளாக உள்ளான் என்ற தத்துவம் மனிதர்களுடைய செயல்களில் நல்லவை தீயவை என்பன கிடையாது என்றும் அதனால் நற் கூலியோ ,தண்டனை கிடையாது என்ற கொள்கையைக் கொண்டிருக்கின்றது.
எனவே தான் அத்வைதப் போதகன் இப்னு அறபி இக்கொள்கைக்கு ஏற்றவாறு அல்குர் ஆன் வசனங்களை திரிபு படுத வேண்டிய நிலைக்கு உட்பட்டு "அல் அதாப்" எனும் தண்டனையை "அல் அதூபாஃ" எனும் இன்பம் என்று திரிப்பதையும் இஸ்லாமிய விரோதி பிர்ஔன் விசுவாசி என்றும் ஆத் சமூகத்தை அழிக்க அல்லாஹ் அனுப்பிய "ரீஹ்" எனும் காற்றை அது அவர்களை விடுவிக்கும் "அற்றாஹாத்" எனும் அமைதி என்றும் அர்த்தப்படுத்துவதை... மண்ணிக்கவும் அனர்த்தப்படுத்துவதைப் பார்க்கின்றோம்.
இது இஸ்லாத்தை மாத்திரமல்ல.. ஒட்டுமொத்த சமூகத்தையே சீரழித்து சின்னாபின்னப்படுத்தும் கேடு கெட்ட தத்துவமாகும்.!!
நன்மை, தீமை என்று எதுவுமில்லை. இம்மையிலோ மறுமையிலோ நற்கூலியோ தண்டனையோ இல்லை என்ற சித்தாந்தம் ஒருவனது இறையச்சத்தை இல்லாமலாக்கி பொய், களவு, ஏமாற்று, விபச்சாரம் போன்ற சமூகத் தீமைகளை சர்வ சாதானனமாக மேற்கொண்டு தான் சார்ந்து வாழும் சூழலைக் கெடுத்து குட்டிச்சுவராக்கும் நிலைக்குக் கொண்டு செல்லும் என்பதில் ஐயமில்லை.!!
2-எம்மதமும் சம்மதம் என்ற கொள்கை:
அனைத்தும் கடவுள்தான் என்ற சித்தாந்தம் உலகில் உள்ள ஒன்றுக்கு ஒன்று முரண்பட்ட மதங்களையும் கொள்கை கோட்பாடுகளையும் சரி காண வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு இட்டுச் சொல்லும்.
இந்த இழிநிலையையே இப்னு அறபி ஒரு பாடலில் "அனைத்து உருவங்களையும் தனது உள்ளம் ஏற்பதாகவும் சிலை வணக்கப்படும் கோயிலும் தவாஃ செய்யப் படும் கஃபாவும் மாண் மேயும் நிலங்களும் மதகுருக்கள் வாழும் மடாலயங்களும் தன்னிடத்தில் சமன் என்றும் அல்குர்ஆன் முஸ்ஹபையும் தௌறாத் ஏடுகளையும் தனது உள்ளம் ஏற்பதாகவும் பாடியுள்ளார்.!!
வல்ல அல்லாஹ் இது போன்ற வழி கேடுகளில் இருந்து எமது சமூகத்தைப் பாதுகாத்தருள்வானாக!!
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !