இலங்கை
முஸ்லிம்களின் வரலாற்றுத்தொன்மங்களை விஞ்ஞானபூர்வமாக ஆய்வு செய்து நிரூபிக்க
வேண்டிய வரலாற்றுக்கட்டத்தில் நாம் உள்ளோம்.முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் சகல
பிரச்சினைகளுக்கும் பலமான தீர்வாக இது மட்டும்தான் அமையும்.இலங்கைக்கு இஸ்லாம்
அறிமுகமானது தொட்டு அவர்கள் வர்த்தகர்களாக மட்டுமே இனங்காணப்பட்டனர்.ஒருவேளை அது
சரியாக இருந்ததாக ஒப்புக்கொண்டாலும் இன்று அப்படி எதுவும் இருப்பதாக கூற முடியாத
அளவு பொருளாதாரம் திட்டமிட்டு சுரண்டப்பட்டும் முடக்கிவிடப்பட்டும் உள்ளதை யாரும்
நிராகரிக்கமுடியாது.இந்தப்பின்னனியில் இலங்கை முஸ்லிம்கள் வர்த்தக சமூகமா?கல்விச்சமூகமா?என்றொரு கேள்வியைக்கேட்டால் புதிய கோணங்கள்
பலவும் ஆய்வுக்குப்புலப்படலாம்.ஆதாரமாகவும் அமையலாம்.
“கேடில்
விழுச்செல்வம் கல்வி”என வள்ளுவர்
சொன்னதற்கேட்ப அழியாசெல்வமாக கல்விமட்டும்தான் இருக்கும் என்பதை எம் சமூகம் உணர
வேண்டும்.வாசிப்பீராக என்று தான் இஸ்லாமிய போதனை ஆரம்பமாகிறது.அப்படியாயின் ஒரு
சமூகத்தின் கல்விவரலாற்றின் உண்மைத்தன்மை அந்த சமூகத்தை என்றும் பாதுகாக்கும்
என்பது உண்மையாகிறது.பொதுவாக இஸ்லாத்தைப்பொறுத்தவரை கல்வி கற்பதும் கற்பிப்பதும்
அதற்கு உதவி ஒத்தாசை புரிவதும் வணக்கமாகவே கருதப்படுகிறது.மட்டுமல்லாமல் சுவனம்
செல்வதற்கான இலகு வழியும் அதுதான்.அறிவைத்தேடவும் அதனை மேம்படுத்தவும் மனிதனுக்கு
உரிமையும் உண்டு அதிகாரமும் உண்டு.அறிவின் பிரகாரமே செயற்பாடுகள் அமைய வேண்டும்
என்பதும் அதன் மூலமே மனப்பாங்கு மாற்றமும்()சமூக மாற்றமும் உருவாகும் என்பது
இறைவன் வகுத்த மாறாத நியதி.பயனுள்ள கல்வியைத்தருமாறு இறைவனிடம் எப்போதும்
பிரார்த்திக்க வேண்டும்.
இஸ்லாதைப்பொறுத்தவரை
கல்வியும் சீரான வாழ்வும் எப்போதும் ஒன்றித்தே பயணிக்க வேண்டும் என அது
எதிர்பார்க்கிறது.இந்த அடிப்படையில் இலங்கை முஸ்லிம்களும் தமது ஆரம்பக்கல்வியை
பள்ளிவாயிலில் இருந்தே ஆரம்பித்தனர்.கல்வி கற்கும் செயற்பாடானது அல்குர்ஆனின்
போதனை என்பதால் அதனை பள்ளிவாயில் ஹஸ்ரத் ஆரம்பித்துவைப்பார்.இஸ்லாமிய புத்தாண்டு
முஹர்ரம் ஆரம்பிக்கும் போது பலகை எழுதி அலிப் பா தா சொல்லிக்கொடுத்து ஆரம்பக்கல்வி
துவங்கும்.கற்கும் இடம் புனிதத்தன்மைமிக்கதாக அமைந்திருந்தது.ஹஸ்ரத்
மதிப்பிற்குரிய நபராக கருதப்பட்டார்.ஊரில் ஹஸ்ரத் இன்றி எதுவும் அங்குரார்ப்பணம்
செய்யமுடியாது என்ற அளவிற்கு ஹஸ்ரத்
செல்வாக்குப்பெற்றிருந்தார்.கற்றுக்கொடுக்கப்பட்ட இடம் “மக்தப்”அல்லது “மத்ரஸா”என அழைக்கப்பட்டன.எழுத்துக்கூட்டி பிழையின்றி
உச்சரித்து ஓதவும் மனனமிடவும் மட்டுமே இங்கு கற்றுக்கொடுக்கப்பட்டன.அத்துடன் சமய
ஒழுகலாறுகள் கண்டிப்பாக கற்பிக்கப்படும் பாடமாகவும் அமைந்தது.பள்ளி நிர்வாகத்துடன்
இணைந்திருந்தமையால் சகல சிறார்களும் தவறாது ஓதக்கற்றுக்கொண்டர்.
அரேபியர் வணிக நோக்குடன் இங்கு வந்தாலும் அசைக்க
முடியாத சமயப்பற்றின் காரணமாக அவர்கள் குடியேறிய கரையோரப்பகுதிகளில்
பள்ளிவாயில்களை அமைத்து அங்கு தமது சமய விடயங்களை நிறைவேற்றினர்.அவ்வாறே அங்கு
சிறார்களுக்கு அல்குர்ஆனை ஓதவும் பயிற்சி வழங்கப்பட்டது.ஐரோப்பியரின் காலணித்துவ
ஆக்கிரமிப்பிற்கு முன்னரும் கட்டுக்கடங்காத அவர்களது அரசியல் காய்நகர்த்தலுக்கு
முன்னதாகவும் இங்கு வர்த்தகர்களாக மட்டும் வந்த அரேபியர்கள் இலங்கை மன்னர்களின்
நன்மதிப்பையும் பாராட்டையும் பெற்றமையால் தமது மார்க்கக்கிடமைகளை பள்ளிவாயில்களை
மையமாகக்கொண்டு அமைப்பதில் குரிப்பிட்டுசொல்லுமளவு எந்த சிரமங்களையும்
எதிர்கொள்ளவில்லை.எனவே பள்ளியை மையமாகக்கொண்ட இந்த கற்பித்தல் போதனை முறையால்
அரபுமொழியின் செல்வாக்கும் பரவலாயிற்று.ஒப்பீட்டளவில் சிங்கள மொழியைவிட தமிழ்
மொழியில் அரபுமொழிசெல்வாக்கை பெரிதும் அவதானிக்கலாம்.
“முஸ்லிம்தமிழ்”கிளை வடிவமாக தனித்துவம் பெற்றது.தமிழைத்தாய்
மொழியாககொண்டவர்களிடம் இது பெரிதும் தாக்கம் செலுத்தியது.அதேநேரம் அரபு வரிவடிவில்
எழுதப்பட்ட முஸ்லிம் தமிழ் “அரபுத்தமிழ்
என அழைக்கப்பட்டது.இஸ்லாமியர்களின் பரவல் காரணமாக பிற்காலத்தில் இஸ்லாமியத்தமிழ்
இலக்கியங்கள் தோற்றம் பெற்றன.தமிழ்யாப்பு மரபைப்பின்பற்றி செய்யுள் ஆக்கங்களும்
தோற்றம் பெற்றன.தமிழ் இலக்கியத்தை மெருகூட்டுவதிலும் செழுமை பெறச்செய்வதிலும்
இஸ்லாமிய தமிழ் இலக்கியப்படைப்புகள் கனகாத்திரமான பங்களிப்பைசெய்துள்ளன.ஆங்கிலேயர்
அதிகாரம் செலுத்திய போது நிறுவனப்படுத்தப்பட்ட கல்வி நிறுவனங்களின் அவசியத்தை
உணர்ந்து செயற்பட்ட அன்றைய தலைவர்களின் முயற்சியால் 1891 அளவில் கண்டி முஸ்லிம் ஆண்கள் பாடசாலை
தோற்றம் பெற்றது.இந்த நிகழ்வைத்தொடர்ந்து முஸ்லிம் பாடசாலைகள் தோன்றி
வளர்ச்சிகண்டன.எது எப்படி அமைந்தாலும் தமது கலாசாரத்தனித்துவங்களை தாரைவார்க்காமல்
தமது அபிலாசைகளை நிறைவேற்றிக்கொள்வதே இலங்கை முஸ்லிம்களின் வழமையாக
இருந்தது.இந்தப்பின்புலத்தில்தான் இலவசக்கல்வியை அறிமுகம் செய்த C.W.W.கன்னங்கர மேற்கொண்ட கல்வி சீர்திருத்த
நடவடிக்கையின் பின் முஸ்லிம் ஆண்களுக்கு வேறாகவும் பெண்களுக்கு வேறாகவும்
பாடசாலைகள் தோற்றம் பெற்றமை இஸ்லாமிய கலாசாரத்தின் மீதுள்ள தமது கட்டிறுக்கமான பிணைப்பை
மீளவும் அழுத்தமாக வலியுறுத்துவதாக அமைந்தது.
1972களில்
இடம்பெற்ற அடுத்த கல்வி சீர்திருத்தங்களின் பின் தமிழ்ப்பாட நூல்களிலும் இஸ்லாமிய
மரபுகளைசொல்லும் அம்சங்கள் பாடங்களாக இணைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.இலங்கை
முஸ்லிம்களின் வரலாறு பற்றி நோக்கும் போது தவிர்க்க முடியாத இரு பெரும்
புலமைசொத்துக்களாக இருந்த T.P.ஜாயா, A.M.A.அஸீஸ் போன்றவர்களை நினைவு கூறாமல் இருப்பது
வரலாற்றுத்துரோகமாகவே கருதப்படவேண்டும்.அந்த அளவு முஸ்லிம்களின் கல்விக்காக அயராது
பாடுபட்டுள்ளார்கள்.முஸ்லிம் பெண்களுக்கான கல்வி புறக்கணிக்கப்பட்டிருந்த சமயம்
அவர்களுக்கும் கல்வி கற்பதற்கான சகல ஏற்பாடுகளையும் செய்துகொடுத்த பெருமை கலாநிதி T.P. ஜாயாவை சாரும்.அவ்வாறே”நாம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் கல்வியின்
அவசியத்தை வலியுறுத்தும் இஸ்லாமிய மதத்தைச்சேர்ந்தவர்கள்;கல்வியிலிருந்து பெறுவதற்குரிய உயர் நலன்களையும்,கலாசார மறுமலர்ச்சியையும் எமது
தாய்மாருக்கும் மனைவி மாருக்கும் நாம் மறுக்க வேண்டுமா”என இலங்கை முஸ்லிம் சங்கத்தில் கேள்வி
எழுப்பினார்.ஆங்கிலப்பெருமை தலைக்கேறியிருந்த சமயங்களில் தமிழில் பேசி தமது
தனித்துவத்தை காட்டிய A.M.Aஅஸீஸும்
இலங்கை முஸ்லிம்களின் கல்வி மேம்பாட்டில் அதீத கரிசனை கொண்டிருந்தார்.இந்த
விடயங்களில் ஆழமான தேடல்களை மேற்கொண்டு எம் இளம்தலை முறையினருக்கும்
அவர்களைப்பற்றி அறிமுகம் செய்து கல்வி மேம்பாடடைந்த சமூகமாக மாற திடம்சங்கட்பம்
பூணுவோம்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !