1990ஆம் ஆண்டில் தாய்லாந்தில் உள்ள ஜோம்தியனில் ஆறு பரிமாணங்கள் இனங்காணப்பட்ட துடன் செனகலில் உள்ள டாகர் இல் 2000 இல் இடம்பெற்ற உலகக் கல்வி பேரவையில் இலக்குகளும் உருவாக்கப்பட்டன. 2015 இல் சகலருக்கும் கல்வியை அடையும் நிகழ்ச்சித் திட்டம் இதில் முக்கிய இடம் பெறுவதுடன் சகல சர்வதேச தரப்பினர்களினை ஒருங்கிணைத்தல் மற்றும் உலகளாவிய இயங்குதன்மையை பேணுவதற்கும் யுனெஸ்கோ பொறுப்பாக உள்ளது.
சகலருக்கும் கல்வி என்ற திட்டம் ஆறு இலக்குகளைக் கொண்டுள்ளது.
2015 ஆம் ஆண்டளவில் சகலருக்கும் கல்வியின் இலக்குகளை அடைவதே இலங்கையில் யுனெஸ்கோவினை உதவியளிக்கப்படும் நிகழ்ச்சித் திட்டங்களின் பிரதான குறியிலக்குகளில் ஒன்றாக உள்ளது.
இலங்கை அரசாங்கம் இவ்வுலக மகாநாடுகளில் பங்குபற்றியதுடன் சகலருக்கும் கல்வியின் இலக்குகளின் அடிப்படைகளை ஏற்றுக்கொண்டதுடன் அவற்றை அடைந்து கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளையும் பூரண அர்ப்பணிப்புடன் முன்னெடுத்து வருகின்றது. 2015 யில் சகலருக்கும் கல்வி இலக்குகளை அடைந்து கொள்வதற்கு மூன்று கட்டங்களில் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு இலங்கை திட்டமிட்டுள்ளது.
எழுத்தறிவு வீதத்தில் 92.5% த்தினைக் கொண்டுள்ள இலங்கை தென்னாசியா நாடுகளில் இரண்டாம் இடத்தை வகிப்பதுடன் 2015 யில் 100% எழுத்தறிவு மட்டத்தினை அடைந்து கொள்ளக்கூடியதாக இருக்கும். சகலருக்கும் கல்வி இலக்குகளை அடைவதற்கும் தரமான கல்வியினை மேம்படுத்துவதற்கும் தொடர்புடைய துறைகளில் கணிப்பீடு மற்றும் கண்காணித்தலை கால ஒழுங்கில் மேற்கொள்வது முக்கியமாகவுள்ளது.
சமாதானமான ஐக்கியம், சுகாதாரம், சூழல், பொருளாதாரம், சமூக எழுவினாக்கள் பற்றிய விழிப்புணர்வுக் கான பொருத்தமான விழுமியங்கள் மனப்பாங்குகள், நடத்தைகளில் உள்ள திறன்களை இது உள்ளடக்குகின்றது. இத்தகைய வாழ்க்கைத் திறன்கள் மக்க ளின் மனங்களை மாற்றி அமைப்பதுடன் பாதுகாப்பான சுகாதாரமான மேலும் செல்வம் பொருந்திய உலகினை உருவாக்குவதற்கு இட்டுச் செல்வதுடன் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தவும் செய்கிறது.
சமாதானம் நிலையான அபிவிருத்திக் கான கல்வி, தற்போதைய பயங்கரவாதச் சூழல், புவி வெப்பமடைதல், காலநிலை மாற்றம் ஆகியவற்றை குறிப்பாக உள்ள டக்கிய வகையில் ஒரு பூகோள முயற்சி யொன்றாக விளங்குதல் வேண்டும்.
கல்வி அமைச்சினால் 2008 மார்ச் மாதம் சமூக ஐக்கியம் சமாதானத்திற்கான கல்வி தொடர்பான செயற்பாடுகளின் விரிவான பணிச்சட்டகமும் ஒரு தேசிய கொள்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பல்கலைக் கழகங்களின் பீடங்கள், தேசிய கல்வி ஆணைக்குழு, தேசிய கல்வி நிறுவகம், மாகாண மற்றும் வலய கல்விப் பணிமனைகள், தேசிய கல்வியற் கல்லூரிகள், தேசிய பாடசாலைகள், யுனெஸ்கோ, உலக வங்கி ஆகியவற்றின் பங்களிப்புடன் மிஹிZ இன் உதவியுடன் இது தயாரிக்கப்பட்டுள்ளது.
சகல தரப்பினரும் உள்ளடங்கும் வகையிலும் சமுதாயங்களையும் உள்ள டக்கிய வகையிலும் பாடசாலைகளுக் கப்பால் இவ் எண்ணக் கருக்களை முன்னெடுப்பதன் ஊடாக, சமாதானம், நிலையான அபிவிருத்திக்கான கல்வியை கண்காணிக்கவும் அமுலாக்கவும் தேசிய அளவிலான முயற்சியொன்றை முன்னெ டுக்க திட்டமிடப்பட்டுள்ளது. சமாதானம், நிலையான அபிவிருத்திக்கான இந்த தேசிய நடவடிக்கைத் திட்டங்கள் மேன்மைதகு ஜனாதிபதி அவர்களது தலைமையின் கீழ் உள்ள தேசிய நிலை யான அபிவிருத்தி சபையின் உத்தேச திட்டமொன்றின் பகுதியொன்றாக அமுலாக்கப்பட உத்தேசிக்கப்பட்டுள்ளது.
ஆங்கில ஆசிரிய பயிற்சி
இணைப்பு மொழி என்ற வகையில் ஆங்கில மொழியை மேம்படுத்துவதற் காக வேண்டி இலங்கை தேசிய ஆணைக்குழுவானது சமாதான செயலொழுக்க ஒருங்கிணைப்பதற்கான செயலகத்துடன் (ஷிவிலிஜிஜி) இணைந்தும், ஐ. அமெரிக்க தூதுவராலயம், இடைப் பகைபாட்டுக் கல்வி மற்றும் விருத்திக் கான ஜோர்ஜ்டவுன் பல்கலைக்கழக நிறுவனத்தில் ஆங்கில மொழி நிகழ்ச்சித் திட்டம், ஆங்கில மற்றும் தகவல் தொழில்நுட்பத்திற்கான ஜனாதிபதி பணிப்புரை ஆகியவற்றின் பங்குடமையுடன், அதிசிறப்பான நகர நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் வடக்கு கிழக்கு வட மத்திய மாகாணங்களில் உள்ள பாடசாலைகளுக்கு ஆங்கில ஆசிரியர் பயிற்சிகளை வழங்குகின்றது. யாழ்ப்பாணம், மட்டக்களப்பில் இருந்து தலா 10 பேர்களும் அனுராதபுரம், பொலனறுவை மாவட்டங்களில் இருந்து தலா 5 பேர்களும் தேர்வு செய்யப்பட்டு ஒரு பயிற்சி நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.
இலங்கை அரசின் கல்வி அமைச்சு ஊடகம் மற்றும் தகவல் தொடர்பு ஆசிரிய பயிலுநர்களுக்கும் கலைத்திட்ட விருத்தியாளர்களுக்கும் இத்தகைய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஆரம்பிக் கக் கூடிய தக்க தருணம் இதுவே என நம்புகிறது. ஊடகம் மற்றும் தகவல் நாட்டின் அபிவிருத்தியில் பிரதான வகிபங்கை ஆற்றுகின்றன.
ஆசிரியர்கள், ஆசிரிய கல்வியாளர் கள், கல்வித் துறைவாண்மையாளர்கள் என்ற வகையில் முறைசார் கல்வித் துறையில் குறிப்பாக பாடசாலைகள் மற்றும் வகுப்பறைகளில் எவ்வாறு கருத்துச் சுதந்திர எண்ணக் கருவையும் தகவல்களை பெறுவதையும் எவ்வாறு அமுலாக்க முடியும் என சிந்திக்க வேண்டியுள்ளது. அறிவைப் பெறுவ தானது அபிவிருத்தி அடைந்த, அபிவி ருத்தி அடைந்து வரும், அபிவிருத்தி குன்றிய நாடுகளுக்கு இடையில் நாடொன்றின் புலக் காட்சியை வித்தியாசப்படுத்துவதாக உள்ளது. ஆகவே, ஊடகம் தகவல் எழுத்தறிவு ஓர் ஆசிரியருடன் ஓர் ஊடக விடயத்துடன் மட்டுப்படுத்தப்படாமல் இருத்தல் வேண்டும். ஏனெனில் ஊடகம் விஞ்ஞானம், பண்பாடு, கணிதம், சமூகக் கல்வி, உயிரியல் போன்ற எப்பாடங்க ளாலும் அவற்றை கடந்த வகையில் சகலவற்றையும் அது உள்ளடக்குகின்றது. இதன் பரந்து பட்ட தன்மையின் காரணமாக பாடசாலை, வகுப்பறைகளது விருத்திகள் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உட்பட சகல மக்களுக்கும் அடைய வேண்டும். இதனால், இவர்கள் சரியான தகவலை இலகுவாகப் பெறக் கூடியதாயிருக்கும்.
அத்துடன் சரியான தகவல்களை பயன்படுத்தி அவர்கள் வழிப்படுத்தப் படல் வேண்டும். குழந்தைப் பருவத்திலும் கூட இத்தகைய திறன்களை இவர்கள் விருத்தி செய்ய முடியும். ஏனைய விடயங்களில் நாளாந்த கற்றல் செயன்முறைகளில் இது 4ஸி பிரச்சினையாக இருக்கப் போவதில்லை.
மாணவர்கள் அறிக்கையிடல் விளம்பரப்படுத்தல், திரைப்பட ஆக்கம், வீடியோ எடுத்தலில் திறன்களை வளர்ப்பார்களாயின் ஊடகத்தை அவர்கள் ஆக்கபூர்வமான துறைக்குக் கொண்டு வருவதுடன் அவர்கள் வளர்ந்ததுடன் அதில் வேலை வாய்ப்பும் பெறக்கூடியதாயிருக்கும்.
உயர் கல்வி
உயர் கல்வி நிறுவனங்களுக்கு மாணவர்களுக்கு வழங்கக்கூடிய பூகோள எண்ணக் கருக்கள், கொள்கை, ஆலோசனை, இயலளவு கட்டியெழுப்பல், பூகோள புள்ளியியலும் தகவலும், சிறந்த நடைமுறைகள் தரமான தன்னம்பிக்கையை வெளிப்படுத்தும் வழிவகைகள், முகவர்கள், உயர் கல்வித் தகைமைகளுக்கான அங்கீகரிப்பு, எல்லை கடந்த கல்வி, திறந்த கல்வி ஆகியவற்றை வழங்குகின்றது. மேற்கூறப்பட்ட துறைகளில் யுனெஸ்கோவின் தேர்ச்சிகளைப் பயன்படுத்துவதில் இலங்கை அரசு மிகுந்த கரிசனை கொண்டுள்ளது.
சகலருக்கும் தரமான கல்வியை மேம்படுத்துவதற்காக யுனெஸ்கோ மற்றும் அபிவிருத்தி முகவர்களுடன் ஒன்றிணைந்து இலங்கை அரசின் கல்வி அமைச்சு பல முயற்சிகளை மேற் கொண்டுள்ள கொள்கைகள் அமுலாக் கப்பட்டுள்ள காட்சி அடிப்படையிலானதும் கருத்துரைக்கக் கூடியனவாகவும் உள்ளன. எனினும் சேவையளிப்பில் ஈடுபட்டுள்ளவர்களின் அர்ப்பணிப்பை உறுதிப்படுத்து வதற்கான சவால் காணப்படுவது டன் காலம் வரும்போது மக்களுக்கு நன்மை அளிக்கும் வகையில் இம்முயற்சிகள் அமைய வேண்டும். சகல துறைகளிலும் தரமான கல்வியளித்தல் மற்றும் கல்வி விநியோகத்தை அளித்தல் உலகின் சகல நாடுகளிலும் உண்மையிலேயே ஒரு பயமுறுத்தும் பணியாக காணப் படுகின்றது. எதிர்கால சந்ததியினருக்காக அமைக்கப்படும் இச்சிறந்த நடவடிக்கை கள் கல்வி நிருவாகிகள் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், அரசு, அபிவிருத்தி முகவர்கள், சமுதாயங்கள், பொது தனியார் துறையினர் என சகல தரப்பினரது அர்ப்பணிப்பான கூட்டு முயற்சியுடன் முன்னெடுக்கப்படல் வேண்டும்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !