எனது இணைப்பக்கத்துடன் இணைந்து தங்களுடைய கருத்துக்களையும் தெரிவித்துக் கொள்ளுங்கள்
Published Date: August 20, 2014

ஆண்ட்ராய்ட் போனில் true caller apps பற்றிய வார்னிங்!

 ஆண்ட்ராயிட் போன் பயன் படுத்தும் நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்! அட,என்ன வேண்டுகோள் வேண்டிக்கிடக்கு!? எச்சரிக்கை இது-

ஆண்ட்ராய்ட் செல்போன் பயன்படுத்துவோருக்கு() வரும் அழைப்பு யாரிடமிருந்து வருகின்றது என்பதை அறிய வேண்டும் என்றால் ஏற்கெனவே செல்லின் தொடர்புகள் பட்டியலில் பெயர் பதிவு செய்திருந்தால் நம்மை அழைப்பவர் பெயர் திரையில் தெரியும். ஆன்னல் பதிவு இல்லாமல் இருந்தால் வெறுமனே அழைப்பவரின் எண் மட்டுமே தெரியும்.அதே சமயம் செல்லைப் பயன் படுத்துவோர் ட்ரூ காலர் (True Caller) என்கிற அழைப்பவர்களின் பெயரைக் காட்டும் நவீன வசதியை தரவிறக்கம் செய்துகொண்டால் வரும் அழைப்பாளர்களின் பெயர், அவர் ஆன்லைனில் இல்லாவிட்டாலும் கூட ஸ்கீரினில் அழைப்பவர் பெயர் தெரியும்.இது தான் ட்ரூ காலர் வசதி ஆகும் என்று உங்களுக்கு தெரியும் . 
சமீபகாலமாக இந்த true caller apps எல்லோருடைய போனிலும் பயன் படுத்திக் கொண்டு இருக்கிறோம்.இதனிடையே இன்று நானும் எனது நண்பர் ரூபனும் பேசிக் கொண்டிருந்த போது “நண்பா,இந்த ட்ரூ காலர்க்காரன் என்னென்னமோ நம்பரையெல்லாம் காட்டி இவரைத் தெரியுமான்னு கேக்கறான்…நல்லாருக்கே!” என்று ஆச்சர்யத்தோடு படித்துக் காட்டினார்.
எனக்கு அதிர்ச்சி ! அவர் வாசித்த தொலைபேசி எண்கள் அத்தனையும் எனது contact லிஸ்ட்டில் உள்ள நம்பர்களாக்கும்!.
ங்கொய்யால யாரு போன் பண்ணாலும் இப்படி நம்பரை எடுத்து கோயில்ல செதறு தேங்கா வீசுறமாதிரி வீசிட்டு போயிடுது இந்த ட்ரூ காலர் …என்ன ஒரு பித்தலாட்டம் ! உடனே அன் இன்ஸ்டால் பண்ணிட்டேன்.அப்போ..நீங்க!?
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்

    0 comments:

    Speak up your mind

    Tell us what you're thinking... !

    Like On Facebook

    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    விளம்பரம்