
(அமெரிக்க சர்ச் ஒன்றில் தொழுகைக்கான அழகிய அழைப்பொலி)
இதை நான் சொல்லக் காரணம் இறை பக்தியில் தினமும் தொழுகையை தவறாது பள்ளியில் சென்று ஐந்து நேரமும் நிறைவேறறுபவர்கள் எவருக்கும் சிரமம் கொடுக்காமல் தங்களது 90 வயதிற்கு பிறகும் நோய் நொடி இல்லாமல் வாழ்வதை பார்த்து வருகிறேன் என்பதை தெரிவிப்பதற்காகவே. சில ஆண்டுகளுக்கு முன்பு தான் எனது தாத்தாவுக்கு கண் பார்வை மங்கத் தொடங்கியுள்ளது. இதே போல் இந்துக்களிலும் காலையிலும் மாலையில் எழுந்து குளித்து கோவிலுக்கு சென்று வருபவர்கள் நோய் நொடி இன்றி ஆரோக்கியமாக வாழ்ந்து வருவதை பார்த்து வந்துள்ளேன்.
இதை எல்லாம் நான் இங்கு குறிப்பிட காரணம் ஐவேளை தொழுகையை நேரம் தவறாமல் நிறைவேற்றும் முஸ்லிம்களிடம் அல்ஜிமர்ஸ் எனும் நோய் 50 சதவீதம் கட்டுப்படுத்தப் பட்டுள்ளதாக அமெரிக்க - இஸ்ரேலிய விஞ்ஞானிகள் புதிதாக கண்டு பிடித்துள்ளனர். அப்பாவி உலக மக்களை அழிப்பதில் முன்னணியில் இருக்கும் இந்த இரு நாடுகளும் இது போன்று ஆக்கபூர்வமான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டால் பலரும் பயனடைவர். :-) அல்ஜிமர்ஸ் எனும் இந்த நோய் மனிதனுக்குள் ஏற்படும் ஞாபக மறதியைப் பற்றியது. தொழுகாத மக்களை விட நேரம் குறிப்பிட்டு சரியாக மசூதியை அடைந்து விடும் மக்களுக்கு இந்த நோய் வருவது தடுக்கப்படுகிறது.
டெல் அவீவ், யாஃபா, அமெரிக்காவின் இதர பல்கலைக்கழகத்தைச் சார்ந்த விஞ்ஞானிகள் இந்த ஆய்வை நடத்தியுள்ளனர். நினைவாற்றல் குறையாமலிருக்க பயிற்சி மையங்கள் மற்றும் இதர வழிகளில் பயிற்சி மேற்கொள்பவர்களை விட குறிப்பிட்ட நேரத்தில் தொழுகையை பேணுபவர்களுக்கு அல்ஸிமர்ஸ் நோய் தாக்கும் வாய்ப்பு குறைவாகும் என இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
குறித்த நேரத்தில் தொழுகையை பேணுவது அல்ஷிமர்ஸ் நோயிலிருந்து காப்பாற்றுவதுடன் புத்தியாகவும், சிந்தனை ரீதியாகவும் பேசுவதற்கு தேவையான ஆக்கப்பூர்வமான பலன்கள் கிடைப்பதாக இந்த ஆய்வுக் குழுவின் தலைவராக பணியாற்றிய பேராசிரியர் Rivka Inzelberg கூறுகிறார். இவரது ஆராய்ச்சியின் முடிவை துருக்கியில் நடந்த சர்வதேச ஆய்வு மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டது. துருக்கி, ஈரான், ஈராக், லெபனான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரபு நாடுகள், இந்தியா, போன்ற நாடுகள் இதில் கலந்து கொண்டன.
65 வயதுக்கு மேற்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 92 பேருக்கு மட்டுமே ஞாபக மறதி நோய் பாதித்துள்ளது. 300 பேருக்கு சிறிய அளவில் பாதித்துள்ளது. மீதமுள்ளோருக்கு எவ்வித பாதிப்பும் இல்லை.
'யார் வேதத்தை உறுதியாகப் பிடித்துக் கொண்டு தொழுகையையும் நிலை நாட்டுகிறாரோ அத்தகைய சீர்படுத்திக் கொள்வோரின் கூலியை நாம் வீணாக்க மாட்டோம். '
-குர்ஆன் 7:170
ஆம். மன நிம்மதி, நோயிலிருந்து மீட்டல், பல வேலைகளையும் குறித்த நேரத்தில் செய்வதற்கான உந்துதல், சிறந்த உடற்பயிற்சி இவை எல்லாவற்றையும் விட இறப்புக்கு பிறகு இறைவன் தரக் கூடிய சொர்க்க வாழ்க்கை என்று ஐந்து வேளை தொழக் கூடியவரின் நன்மையின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
இக்பால் செல்வன், சார்வகனிலிருந்து தருமி வரை எப்படியாவது முஸ்லிம்களை நாத்திகத்தின் பக்கம் கொண்டு வந்து விட வேண்டும் என்று அல்லும் பகலும் பாடுபடுகின்றனர். ஆனால் இறைவன் அவர்கள் நம்பும் அறிவியலின் மூலமாகவே பல உண்மைகளை உலகுக்கு அறிவித்துக் கொண்டுள்ளான்.
எனவே ஐவேளை தொழும் பழக்கம் இல்லாத மக்கள் இன்றிலிருந்து ஐந்து வேளையும் மசூதியில் சென்று தொழும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வார்களாக! இதன் மூலம் செய்யும் தவறுகளிலிருந்தும் நோய்களிலிருந்தும், இறைவனின் கோபத்திலிருந்தும் தங்களை காத்துக் கொள்வார்களாக.....
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !