எனது இணைப்பக்கத்துடன் இணைந்து தங்களுடைய கருத்துக்களையும் தெரிவித்துக் கொள்ளுங்கள்
Published Date: July 08, 2014

தற்கொலை என்றால் என்ன?

தற்கொலை
என்பது ஒருவர் தன்னைத்தானே கொலை செய்து கொள்வதாகும். மன அழுத்தம், குற்றவுணர்வு, இயலாமை, வெட்கம், கடுமையான உடல்வலி, பொருளாதாரச் சிக்கல்கள் போன்ற பல காரணங்கள் ஒருவரைத் தற்கொலைக்குத் தூண்டலாம். 39 மணித்துளிக்கு ஒருவர்வீதம் தற்கொலை செய்து கொள்வதாக உலக சுகாதார நிறுவனம் குறிப்பிடுகின்றது. மேலும் 10 முதல் 20 மில்லியன் பேர் தற்கொலை முயற்சியிலிருந்து ஆண்டுதோறும் தப்புவதாகவும் குறிப்பிடப்படுகிறது.


ஏன் தற்கொலை இடம் பெருகின்றது

 தற்கொலை இடம் பெருவதற்கான காரணங்களைப் பார்குமிடத்து இது அடம் பெறுவதற்கான சில காரணிகள்

வறுமை : 
இன்றைய அதிகரித்த வாழ்க்கைச் செலவினை தனி மனிதனால் மாத்திரம் சமாளிக்க முடியாது என்ற நிலைமையும் எவ்வாறு வாழக்கைச் செலவு அதிகரிப்பினும் சம்பலம் அதிகரிக்காமை

போதை :
மது போதைக்கு அடிமைப்பட்டு இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டு குறிப்பிட்ட இலக்கை அடைய ஆதரவு கிடைக்காமை

குடும்பப்பினக்கு அல்லது பிரிவு :
குடும்ப ஒற்றுமையின்மை குடும்ப பிரிவுகள்,குடும்பப் பினக்குகள்,வெளிநாட்டு வேலைவாய்பிற்குச் செல்லல்,பாலியல் சந்தேகம் குடும்ப ஆதரவின்றி தற்கொலைக்கு ஈடுhடல்

சரியான வேலையின்மை
பரீட்ஷையில் தோல்வியடைதல்
காதர் தோல்வி
போன்ற பல விடயங்கள்



தற்கொலை
“ஒரு மனிதன் தனிப்பட்ட பொதுநேக்கம் கருதி தானாகவே அல்லது பிறரால் தூண்டப்பட்டு தனது உயிரை மாய்த்துக் கொள்ளுல்” இச்செயற்பாட்டை தற்கொலை எனக் குறிப்பிடலாம் தற்கொலை சம்பந்தமாக சமூகவியளாளரான “எமில்ட் துர்கைம்” குறிப்பிடுகையில் தற்கொலைக்கு மனவிரக்தி,காதல் தோல்வி,வறுமை,சட்ட ரீதியாக ஏற்படும் அரசியல் பொருளாதார மாற்றங்கள் போன்றக காரணங்களாக அமைகின்றது எனவும் தற்கொலை புரிந்து கொல்லும் அதிகமானவர்கள் திருமணமாகாதவர்கள் எனவும் கத்தேலிக்கர்களை விட புரட்டஸ்தாந்து சமயத்தினர்களே அதிகம் என தனது ஆய்வில் குறிப்பிட்டார்.


தற்கொலை மூன்று வகை என “எமில்ட் துர்கைம்” ; குறிப்பிட்டார்.

1. தற்கொடை தற்கொலை:
தனது இனத்தின் மீதான ஆழமான பற்று காரணமாக செய்து கொள்ளும் தற்கொலை

2. தன்முனைப்பு தற்கொலை:
ஒரு மனிதன் தான் சார்ந்த சமூகத்தை விட்டு தனிமைப்படுத்தப் படுவதால் ஏற்படும் மனவெழுச்சி காரணமாக தற்கொலைக்குத் தூண்டப்படல்

3. விதிமுறை தற்கொலை:

எதிர் கால வாழ்க்கை நிச்சயமற்ற நிலையில் வாழ்க்கையில் ஏற்படும் சவால்களுக்கு ஏற்று வாழத் தெரியாமல் தற்;கொலை செய்தல் என துர்கைம் குறிப்பிட்டார்.

  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்

    0 comments:

    Speak up your mind

    Tell us what you're thinking... !

    Like On Facebook

    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    விளம்பரம்