உடல் முழுக்க பிரச்சனை தரும் ஹார்மோன்கள் சுரந்துக் கொண்டே இருக்கும். அப்படிபட்ட கர்ப்ப காலத்தில் பெண்களை பார்த்துக் கொள்ளும் ஆண்களுக்கு பதக்கம் தான் கொடுக்க வேண்டும்.
சாதாரண நேரத்தை விட கர்ப்ப காலத்தில் அவர்களை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும். உடல் அளவிலும் சரி, மனதளவிலும் சரி அவர்களை பக்குவப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் அந்த ஆண் தான் பிரச்சனையை சந்திக்க வேண்டும்.
எப்படி இருப்பினும் ஆண்கள் சில விடயங்களை கர்ப்பமாக இருக்கும் பெண்களிடம் சொல்லக்கூடாது. அவற்றைப் பற்றி பார்ப்போம்.
மீண்டும் சாப்பிடு
கர்ப்ப காலத்தில் எப்போதும் நல்ல உணவு வகைகளை உண்ண வேண்டும். உங்கள் மனைவி கர்ப்பமாக இருக்கையில், உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் அவருக்கு பல உணவுகளை எடுத்துக் கொடுத்து உண்ண வற்புறுத்துவார்கள். அதனை உண்ண வேண்டுமானால் ஒரு நாள் போதாது.
வீடு ஏன் குப்பையாக உள்ளது?
கர்ப்பிணியான மனைவியிடம் சொல்ல கூடாத விஷயத்தில் இதுவும் ஒன்று. வீடு சுத்தமாக இல்லையென்றால் வேலைக்கு ஆள் வைத்துக் கொள்ளுங்கள் அல்லது நீங்களே சுத்தப்படுத்துங்கள்.
வேகமாக நட
கர்ப்பிணி மனைவியின் வேகத்திற்கு ஈடு கொடுக்காமல், அவளை வேகமாக நடக்க அதட்டுவதும் தவறு. இது கர்ப்பிணியான மனைவியிடம் சொல்லக்கூடாத மற்றொரு விடயம்.
அழ தொடங்கி விட்டாயா?
கர்ப்பிணியான உங்கள் மனைவியிடம் சொல்லக்கூடாத முக்கியமான விஷயம் இது. ஹார்மோன் சமமின்மையால் தான் அவர்கள் சில நேரம் அழுவார்கள். அதனால் பழகிக் கொள்ளுங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய புத்தகங்கள் படித்தல்
குழந்தை வளர்ப்பு பற்றிய சில புத்தகங்களை உங்கள் மனைவி உங்களிடம் கொடுத்தால் அதனை அவளுடன் அமர்ந்து படியுங்கள். குழந்தை பிறந்த பிறகு நல்ல தகப்பனாக மாற இது உதவிடும்.
உன் கர்ப்ப காலம் எனக்கு கஷ்ட காலம்
உங்களுக்கு அப்படி ஒரு எண்ணம் ஏற்பட்டால், அதனை உங்கள் நெருங்கிய நண்பருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். இதை உங்கள் மனைவியிடம் சொன்னால் அவருக்கு மனநிலை தான் அதிகரிக்கும்.
நான் மருத்துவமனைக்கு வர வேண்டுமா?
மருத்துவரை சந்திக்க வேண்டிய நேரத்தில், ஒரு கணவனாக நீங்களும் அங்கே இருப்பது அவசியம். இது உங்கள் மனைவிக்கு சந்தோஷத்தை அளிக்கும்.
ஏன் எப்போதும் சோர்வாக இருக்கிறாய்?
கர்ப்ப காலத்தில் உங்கள் மனைவியிடம் ஏன் இவ்வளவு சோர்வாக இருக்கிறாய் என்பதையும் கண்டிப்பாக கேட்காதீர்கள். மாறாக எவ்வளவு அழகாய் இருகிறாய் என புகழ்ந்து அவர்களை உற்சாகப்படுத்துங்கள்.
நீ எதையும் செய்வதில்லை
உங்களுக்காக உங்கள் மனைவி எதையும் செய்வதில்லை என கண்டிப்பாக பேசாதீர்கள். அவர்களிடம் நல்லபடியாக நடக்க பல வழிகள் உள்ளது. நீங்கள் தான் அவர்களை அன்புடன் கவனிக்க வேண்டுமே தவிர அவர்கள் உங்களை இல்லை.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !