எனது இணைப்பக்கத்துடன் இணைந்து தங்களுடைய கருத்துக்களையும் தெரிவித்துக் கொள்ளுங்கள்
Published Date: April 20, 2014

இலங்கையில் தொலைந்த கைத் தொலைபேசிகளை மீட்பது எப்படி?


cell-phone-theft-2தொலைபேசிகள் இன்று அத்தியாவசிய தேவைகளில் ஒன்று ஆகிவிட்டன. இன்று தொலைபேசிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், அவை தொலைந்து போவதற்கான தகவும் அதிகமாக காணப்படுகின்றன.
இயந்திர வாழ்வில் ஓடிக்கொண்டிருக்கும் நாம், எம்மை அறியாமலோ, அல்லது திட்டமிட்ட சதிச்செயல் ஒன்றின் மூலமோ எமது கைத் தொலைபேசிகளை பறிகொடுக்கின்றோம்.
அவ்வாறு பறிகொடுத்த தொலைபேசிகளை மீட்க இலங்கையில் என்ன வழி என்பதை பார்ப்போம். இது தமிழ்க்ளவுட் இணையதளமானது, பாவனையாளர்களின் நலன்கருதி வெளியிடும் செய்தியாகும்.
கைத்தொலைபேசி தொலைந்தவுடன் முதலில் நீங்கள் செய்யவேண்டியது, உங்கள் தொலைபேசி சேவை வழங்குனரை தொடர்பு கொண்டு, தொலைபேசி சிம் இணைப்பை நிறுத்துதல் ஆகும். ஏன் என்றால் உங்கள் சிம் கார்ட்டை வேறு எவரும் நாசகார வேலைகளுக்கு பயன்படுத்த வாய்ப்பு உள்ளது.
அடுத்ததாக அருகில் உள்ள பொலீஸ் நிலையத்துக்கு சென்று முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டு, முறைப்பாட்டு அறிக்கையை பெற்றுக்கொள்ளவும்.
அதன் பின்னர் கீழுள்ள விண்ணப்பப் படிவத்தை பிரின்ட் செய்து நிரப்பிக் கொள்ளவும்.
விண்ணப்பப் படிவத்தை பெற இங்கே அழுத்தவும்
நிரப்பப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன், உங்கள் தேசிய அடையாள அட்டையின் பிரதி, பொலீஸ் முரைப்பாட்டு அறிக்கையின் பிரதி என்பவற்றை இணைத்து கீழுள்ள முகவரிக்கு அனுப்பவும்.
The Director General
Telecommunications Regulatory Commission of Sri Lanka
276, Elvitigala Mawatha
Colombo 08.
இவ்வாறு அனுப்பினால் என்ன ஆகும்?
நீங்கள் இவ் விண்ணப்பப் படிவத்தில் உங்கள் தொலைபேசியின் IMEI இலக்கத்தை கொடுத்திருப்பீர்கள். அவ் இலக்கத்தைப் பயன்படுத்தி, அத் தொலைபேசியினுள் வேறு சிம் கார்ட்டை யாராவது போட்டுப் பயன்படுத்தினால், அச் சிம் இலக்கத்தை பயன்படுத்தி உங்கள் தொலைந்த கைத்தொலைபேசியை மீட்க பொலீஸ் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.
இதில் ஏதாவது சந்தேகங்கள் இருப்பின் தயங்காது எம்மை கீழே உள்ள Comments வசதி மூலம் தொடர்பு கொள்ளுங்கள்.

  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்

    0 comments:

    Speak up your mind

    Tell us what you're thinking... !

    Like On Facebook

    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    விளம்பரம்