அறிமுகமாகிறது ‘Samsung Galaxy S5′; ஏப்ரல் முதல் விற்பனைக்கும் வருகிறது
உலகம் முழுதும் உள்ள ஸ்மாட் கைத்தொலைபேசி வாடிக்கையாளர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘Samsung Galaxy S5′ கைத்தொலைபேசி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Samsung Galaxy S5 மாதிரியினை ஸ்பெய்ன், பார்ஸிலோனாவில் நேற்று நடைபெற்ற வேர்ல்ட் மொபைல் காங்கிரஸ் நிகழ்வில் சம்சுங் நிறுவனம் அறிமுகம் செய்து வைத்தது.
5.1 அங்குல LED திரையைக் கொண்டதாக Samsung Galaxy S5 வடிவமைக்கப்பட்டுள்ளது. Samsung Galaxy S4 5 அங்குல LED திரையைக் கொண்டதாகவே வடிவமைக்கப்பட்டிருந்தது.
12 மணித்தியால மின்கலப் பாவனை, 16 megapixels கமரா, மற்றும் ஸ்மாட் கைத்தொலைபேசிகளுக்கான விசேடமான அனைத்து அம்சங்களும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளதாதக சம்சுங் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஏப்பரல் 11ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் இது விற்பனைக்கு விடப்படுமெனவும், இதுவரை விலை நிர்ணயிக்கப்படவில்லை எனவும் சம்சுங் தெரிவித்துள்ளது.