எனது இணைப்பக்கத்துடன் இணைந்து தங்களுடைய கருத்துக்களையும் தெரிவித்துக் கொள்ளுங்கள்
Published Date: February 16, 2014

மறதிநோய் (Dementia

மறதிநோய் (Dementia என்பது "சிதைவடையும் மனம்" என்ற பொருள் கொண்டதாகும்) ஒரு தீவிரமான உளவியல் குறைபாடாகும். இது நிலைத்ததாகவோ, அதாவது மூளையில் ஏற்படும் காயத்தினால் உருவாவதாகவோ அல்லது வளரக்கூடியதாகவோ இருக்கலாம்; அல்லது, உளவியல் செயல்பாடுகளில் நீண்டகாலமாக ஏற்பட்ட பாதிப்பு அல்லது குறைபாட்டால் உடலானது இயல்பான முதுமையடைதலில் இருந்து அதிகரித்த அளவில் முதிர்வது ஆகியவற்றால் விளையலாம். முதுமை மறதி என்பது வயதானவர்களிடையே அதிக அளவில் காணப்பட்டாலும், அது எந்த வயதினரையும் பாதிக்கக் கூடியதே. இதனை ஒத்த அறிகுறிகள் "சேதன மூளை நோய்க்கூட்டறிகுறி" (Organic brain syndrome) அல்லது கோளாறு ஆகியவற்றாலும் விளையலாம். ஆயினும், அவை இளைய வயதினரிடையே வேறு பெயர்களில் வழங்கப்படும் இந்த நோயே ஆகும். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிவரை, இந்த முதுமை மறதி நோயைப் பற்றிய மிக அதிகமான மூட நம்பிக்கைகள் இருந்தன.
இது மூளையின் தொழிற்பாட்டை பாதிக்கும் வேறு நோய்களின் வெளிப்பாடாகவே இருக்கின்றது. ஞாபகமறதி என்பது படிப்படியாக மூளையின் சிந்திக்கும் ஆற்றல், நினைவில் நிறுத்தல் போன்ற தொழிற்பாடுகள் குறைவடைந்து செல்வதைக் குறிக்கும். இந்த ஞாபக மறதிக்கு காரணமாக கூறப்படும் பொதுவான காரணிகள்.
  • அல்சைமர்ஸ் நோய்
  • மூளைக்கான குருதி வழங்கல் பாதிப்படைதல்
  • மூளைக் கட்டிகள்
  • தலையில் ஏற்படும் விபத்துக்கள்
  • தொற்றுக்கள்
  • நீண்ட கால, அதிகரித்த மதுபாவனை
  • அகஞ்சுரக்கும் தொகுதியின் நீர்குலைவு
  • விற்றமின் குறைபாடுகள்
  • தெரிந்த நபர்களின் பெயர், வாழ்விடம் மறந்து போதல்.
  • ஆரம்பத்தில் அண்மைக்கால சம்பவங்களே மறக்கும். பின் காலம் செல்லச் செல்ல பழைய சம்பவங்களும் மறந்து போகும்.
  • வயது மறந்து போகும்.
  • சொற்கள் மறந்து போகும்.
  • புதிய மனிதர்கள் அல்லது புதிய சூழலை சந்திக்கும்போது குழப்பம் ஏற்படும்.
  • நடத்தையில் மாற்றங்கள் ஏற்படும்.
  • அடிக்கடி கோபப்படல்
  • பொருத்தமற்ற பாலியல் வெளிப்பாடுகள்
  • தனிநல சுகாதார பழக்க வழக்கங்களை கடைப்பிடிக்க தவறுதல்
  • புதிய விடயங்களை அறிந்து கொள்வதில் சிரமம் ஏற்படல்.


முதுமை மறதி என்பது ஒரு குறிப்பிடத்தக்க நோய்க்குறியீடு (குறியீடுகள் மற்றும் அறிகுறிகளின் தொகுப்பு) எதையும் கொண்டிருக்காத குறைபாடாகும், இதில் ஞாபகத்திறன், கவனம், மொழி மற்றும் சிக்கல் தீர்த்தல் போன்றவற்றில் உளவியல் குறைபாடானது ஏற்படக்கூடும். குறைந்தபட்சம் 6 மாத கால அளவுக்கு இந்த பாதிப்பு தொடர்ந்தால் மட்டுமே சோதனை மூலமாக இந்நோயைக் கண்டறிய முடியும்[1]; குறுகிய கால அளவுக்கு நீடிக்கும் கவனிப்பு திறனில் ஏற்படும் மங்குதல், குறிப்பாக சில வாரங்களுக்கு குறைவான கால அளவுக்கு ஏற்படுபவை உளத்தடுமாற்றம் (delirium) என்றழைக்கப்பட வேண்டும். எல்லாவகையான பொது கவனிப்பு திறன் மங்குதல் குறைபாடுகளிலும், உயர் மனநிலை செயல்பாடுகள் முதலில் பாதிக்கப்படுகின்றன. குறிப்பாக, இந்நிலையின் பிந்தைய காலக்கட்டத்தில், பாதிக்கப்பட்ட நபர்கள் நேரம் (வாரத்தின் எந்த நாள், மாதத்தின் எந்த நாள், அல்லது எந்த ஆண்டு போன்றவற்றில் குழப்பம்), இடம் (அவர்கள் இருக்கும் இடத்தை அறியாத நிலை) மற்றும் மனிதர்கள் (தன்னையும் தன்னை சுற்றியுள்ளவர்களையும் அறியாத நிலை) போன்ற பல நிலைகளில் குழப்பமடைந்திருப்பாகள். முதுமை மறதியானது, பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட நிலை வரையிலும் சிகிச்சையளிக்கப்படக் கூடியது, ஆனால் பொதுவாக இதன் வேறுப்பட்ட காரணிகளால் தீர்க்க முடியாத நோயாகவுள்ளது.
பொதுவான அறிகுறிகள்:
இந்த அறிகுறிகள் மன அழுத்தம் போன்ற வேறு நோய்களின்போதும் ஏற்படலாம்.
முதுமை மறதியின் அறிகுறிகள் மீளக்கூடியவையாக அல்லது மீளவியலாதவையாக வகைப்படுத்தப்படுகின்றன. இந்த வகைப்பாடு இந்நோயின் நோய்க்காரணிகளின் அடிப்படையில் அமைந்ததாகும். முதுமை மறதி நோயால் பாதிக்கப்பட்டவர்களில் பத்து சதத்திற்கும் குறைவானவர்களே சிகிச்சையின் மூலமாக சரிசெய்யக்கூடிய காரணிகளைக் கொண்டுள்ளனர். காரணிகளில் பல வேறுப்பட்ட நோய்ச் செயற்பாடுகள் உள்ளன, அதேபோல அறிகுறிகளிலும் பல வேறுபாடுகள் உள்ளன. எடுத்துக் காட்டாக, மூச்சுவிடுவதில் சிரமம், மஞ்சள் காமாலை, அல்லது காமாலை ஆகியவை பல நோய்க்காரணிகளைச் சார்ந்து உருவாகக்கூடியவை. நோய் வரலாற்றினைக் கவனமாக ஆராயாது, உளத்தடுமாற்றம் என்ற குறுகிய கால நோய்க்குறியீடு (பெரும்பாலும் சில நாட்கள் முதல் வாரங்கள் வரை நீடிக்கக்கூடியது) எளிதாக முதுமை மறதி என்று தவறாக கருதப்படுகிறது. ஏனெனில் இவ்விரண்டு நோய்களிலும் ஒத்த அறிகுறிகள், நோய் பாதிப்பின் கால அளவு ஆகியவை காணப்படுகின்றன. மேலும் உளத்தடுமாற்ற நோயானது உண்மையில், பரிவு நரம்பு மண்டலத்தின் (sympathetic nervous system) அதிகரித்த செயற்பாட்டுடன் தொடர்புடையது. மன அழுத்தம், மனநோய்கள் போன்ற மனநலக்குறைவும், உளத்தடுமாற்றம் மற்றும் முதுமை மறதி ஆகியவற்றிலிருந்து வேறுபடுத்தி அறிய வேண்டிய அறிகுறிகளை அளிக்கலாம்.[2]. மது போன்றவற்றின் தொடர்ச்சியான பயன்பாடு மற்றும் தொடச்சியான தூக்கமின்மை ஆகியனவும் முதுமை மறதியை ஒத்ததான அறிகுறிகளை ஆரம்பகட்டத்தில் தரக்கூடும்.
பெரும்பாலானவை முற்றாக குணப்படுத்த முடியாதவையாகவே இருக்கின்றன. ஆனாலும் அகஞ்சுரக்கும் தொகுதி சீர்குலைதல், விற்றமின் குறைபாடுகள், மூளைக்கட்டிகள், தொற்றுக்களால் ஏற்பட்டிருப்பின் அவற்றை தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் மூலம் இந்நோயைக் குணப்படுத்த முடியும். அல்சைமர்ஸ் நோயால் இந்த ஞாபகமறதி ஏற்படுமாயின் தவிர்த்தல் கடினம். ஆரோக்கியமான வாழ்க்கை முறை, அதிகளவில் மதுபானம் பாவித்தல் தவிர்த்தல், புகைப்பிடித்தலை தவிர்த்தல், நாளாந்த உடற்பயிற்சி, கொழுப்பு குறைந்த ஆகாரம் போன்றவையும் இந்நோயை தவிர்க்க உதவும்.
குணப்படுத்த முடியாதவற்றை, சிகிச்சை மூலம், நோய் அறிகுறிகளையும், நோய் அதிகரிப்பதையும் கட்டுப்படுத்தி வைக்க முடியும். நோயாளியை தகுந்த முறையில் பராமரித்தலும் மிகவும் முக்கியமாகும். அது கடினமானதும்கூட. குறுக்கெழுத்துப் போட்டிகள், சிறிய கணிதச் செயற்பாடுகள், விளையாட்டுகள் போன்றவை நோய் அதிகரிப்பதைத் தடுக்கும் பயனுள்ள செயற்பாடுகளாகும்.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்

    Like On Facebook

    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    விளம்பரம்