(உளவியல் ஓர் ஈரடி இயல்பான விஞ்ஞானம்)
ஒரு விஞ்ஞானமாக உளவியலுக்கு அளிக்கப்படும் இடத்தை ஆராய்க ?
உளவியலானது மனித நடத்தை பற்றியும் நடத்தைக்கு காரணமான மனித மனம் பற்றியும் ஆய்வு செய்கின்ற துறையாகும். இங்கு ஆய்வு விடையமான மனித நடத்தை அனுபவச் சோதனை களுக்கு உட்படுத்தக்கூடியதாக அமைவதனால் உளவியல் விஞ்ஞானத் தன்மையைப் பெறுகின்றது. தர்க்கப் புலனறி வாதிகள் உளவியலை விஞ்ஞானம் என ஏற்றுக் கொண்டுள்ளனர்.
நுஒ: நடத்தை உளவியல்
உளவியல் ஒரு இயற்கை விஞ்ஞானம்
(உளவியலில் காணப்படும் இயற்கை விஞ்ஞானப் பண்புகள்)
1. உளவியலில் பயம் கோபம் போன்ற உள நடத்தைக்கும் - மூளை நரம்புத் தொகுதி உடல் உறுப்புக்கள் என்பன வற்றிற்கும் இடையிலான தூண்டல் துலங்கல் தொடர்பு பற்றி ஆய்வு செய்யப்படுவதனால் உளவியல் ஒரு இயற்கை விஞ்ஞானம் ஆகும்.
Eg: பவ்லோவின் தூண்டல் துலங்கல் பரிசோதனை
2. உளவியலில் இயற்கை விஞ்ஞானங்கள் பயன்படுத்தும் அனுபவ முறைகளான அவதானம், ஆய்வுகூடப் பரிசோதனை, கட்டுப்பாட்டுக் குளுச் சோதனை முறை, கருவிகளின் பயன்பாடு என்பன பண்படுத்தப் படுவதனாலும் உளவியல் ஒரு இயற்கை விஞ்ஞானமாகக் கருதப்படுகின்றது.
Eg: 1879 இல் வில்லியம் வூண்ட் இனால் அமைக்கப்பட்ட உளவியல் ஆய்வு கூடம்
உளவியல் ஒரு சமூக விஞ்ஞானம்
(உளவியலில் காணப்படும் சமூக விஞ்ஞானப் பண்புகள்)
1. உளவியலில் என்பது மனித நடத்தை பற்றியும் நடத்தைக்கு காரணமான மனம் பற்றியதுமான ஆய்வு ஆகும் சமூக விஞ்ஞான ஆய்வு விடையமும் மனித நடத்தையாதலால் உளவியலை ஒரு சமூக விஞ்ஞானம் எனக் கருதலாம்.
2. சமூக விஞ்ஞானத்திலும், உளவியலிலும் ஆய்வாளன், ஆய்வு விடையம் என்ற இரண்டுமே மனிதனாகக் காணப்படுவதனால் இங்கு அகவயத் தாக்கங்களின் செல்வாக்கான ஒருபக்கச் சார்பு, விருப்பு வெறுப்பு, சுயநல மனப்பாங்கு என்பன ஏற்பட்டு இவை இரண்டும் அகவயத்தன்மை உடையதாக காணப்படுவதனால் உளவியலை சமூக விஞ்ஞானம் எனக் கருதலாம்.
3. உளவியயலில் ஆய்வு முறைகளாக பேட்டிமுறை, வினாக் கொத்து முறை, தனியாள் வரலாற்றாய்வு முறை, அகநோக்கல் முறை போன்ற சமூக விஞ்ஞான ஆய்வு முறைகள் பயன்படுத்தப்படுவதனால் உளவியலை ஒரு சமூக விஞ்ஞானத் துறையாகக் கருதலாம்.
4. உளவியலிலும், சமூக விஞ்ஞானத்திலும் மனிதன் சுயசித்தத்துடன் செயற்படுவதனால் இவை பன்மைக் காரணத்தை உடையது, எதிர்வுகூறலை மேற் கொள்வது கடினம், முடிவுகள் உறுதியற்றுக் காணப்படும் என்பதனாலும் உளவியலை ஒரு சமூக விஞ்ஞானம் எனக் கருதலாம்.
5. உளவியலானது மனித நடத்தைகள் பற்றி ஆராயும் சமூகவியல், மானிடவியல், பொhருளியல், அரசியல் போன்ற சமூக விஞ்ஞானத் துறைகளுடன் மிக நெருங்கிய தொடர்புடையது.
உளவியல் ஒரு பிரயோக விஞ்ஞானம்
(உளவியலில் காணப்படும் பிரயோக விஞ்ஞானப் பண்புகள்)
உளவியலில் மனித நடத்தை பற்றியும் நடத்தைக்கு காரணமான மனம் பற்றியும் ஆய்வு செய்து கண்டறிந்த விதி கொள்கைகளை பயன் படுத்தி மக்களுக்கு தேவையான பொருட்கள் சேவைகள் என்பன உருவாக்கப் படுகின்றன.
1. உளநோயாய் பாதிக்கப் பட்டவர்களின் நோயைக் குணப்படுத்துவதற்காக மருத்துவ விஞ்ஞானத்தில் 'உளச்சிகிட்சை முறை' பயன்படுத்தப் படுவதால் உளவியலை ஒரு பிரயோக விஞ்ஞானம் எனலாம்.
2. கல்வி உளவியலில் மாணவர்களின் உள வளர்ச்சிக்கு ஏற்றவாறு எவ்வாறு கல்வி புகட்டலாம் என்பது பற்றியும், கற்றல், ஞாபகம், மறதி என்பன பற்றியும், அறிவு திறமை ஆளுமை என்பனவற்றை எவ்வாறு ஊக்குவிக்கலாம் என்பது பற்றியும் கூறப்பட்டுள்ளது. இவை தவிர குழந்தை உளவியல், தொழில் உளவியல் என்பனவும் உளவியலை ஒரு பிரயோக விஞ்ஞானமாகக் காட்டுகின்றது.
உளவியல் ஒரு விஞ்ஞானம் அல்ல
உளவியலானது மனித நடத்தை பற்றியும் நடத்தையை வெளிப்படுத்தும் மனம் பற்றியதுமான ஆய்வு ஆகும். பொதுவாக விஞ்ஞானமானது அனுபவச் சோதனைகள் மூலம் சோதிக்கக் கூடியதாக இருத்தல் வேண்டும் ஆனால் மனிதனது மனதை அனுபவச் சோதனைக்கு உட்படுத்த முடியாதுள்ளது. உளவியலில் கவர்பாடான எண்;ணக்கருக்கள் உள்ளடங்கியிருப்பதும். எதிர்வு கூறல் சிரமமாக அமைவதும் உளவியலை ஒரு விஞ்ஞானமல்லாத துறையாகக் காட்டுகின்றது.
உதாரணம்: சிக்மன் புரொட்டின் கொள்கையில் பயன் படுத்தப்பட்ட எண்ணக்கருக்கள்- Id, Ego, Super Ego
மருத்துவத்தில் காணப்படும் விஞ்ஞானப் பண்புகள்
மருத்துவம் என்பது நோய்க்கான காரணிகளைக் கண்டறிந்து அவற்றிற்கான சிகிட்சைகளை வழங்கி நோய்த் தடுப்பு பற்றி ஆராய்கின்ற ஒரு துறையாகும்.
மருத்துவத்தில்; - அவதானம், பரிசோதனை போன்ற அனுபவச் சோதனைகள் மூலம்
வாய்ப்பு பார்க்கக் கூடியதாக அமைவதனாலும், எதிர்வுகூறல், காரண காரிய
விளக்கம் என்பன சிறப்பாக அமைவதாலும் மருத்துவத்தினை ஒரு விஞ்ஞானத் துறையாகக் கருதலாம்.
மருத்துவ விஞ்ஞானத்தில் தூய விஞ்ஞான இயல்புகளும் பிரயோக விஞ்ஞான இயல்புகளும்
ஒருங்கே காணப்படுகின்றன.
மருத்துவத்தில் காணப்படும் துய விஞ்ஞான பண்புகள் : -
1. நோய் பற்றி கண்டறிந்து அதற்கான காரணங்களையும் கண்டறிகிள்றது.
2. பல்வேறு நோய்க்கு காரணமாகும் நோய்க் கிருமிகள் பற்றியும் ஆய்வு செய்கின்றது.
3. நோய் நிவாரணியான மருந்துகள் பற்றி ஆய்வு செய்து அவற்றை கண்டு பிடிக்கின்றது.
4. உடல் உள ரீதியான பிரச்சினைகள் எவ்வாறு மனிதனை சுகதேகியாக்கின்றது என்பது பற்றி ஆய்வு செய்கின்றது.
மருத்துவத்தில் காணப்படும் பிரயோக விஞ்ஞான பண்புகள் : -
1. நோய்களை கண்டறிந்து அவற்றிற்கு சிகிட்சைகள் (சத்திரசிகிட்சை, உளச்சிகிட்சை) வழங்கி மக்களுக்கு தேவையான பொருட்கள் சேவைகள் என்பனவற்றை உருவாக்குகின்றது.
2. மருந்துகளை பயன்படுத்துவதனாலும் அவற்றை சோதிப்பதனாலும் மருத்துவத்தினை ஒரு பிரயோக விஞ்ஞானத் துறையாகக் கூறலாம்
ஆயுர் வேதம் ஒரு விஞ்ஞானம்
(ஆயுர்வேதத்தை விஞ்ஞானம் எனக் கருதுகின்றீறா)
ஆயுர்வேத வைத்திய முறை ஒரு பாரம்பரிய மருத்துவ முறையாகும். இது மாந்திரீகத் தன்மை வாய்ந்தது என மக்களால் நம்பப்பட்டு வந்தது. ஆனால் இன்று ஆயுர்வேதம் நவீன மருத்துவத் துறையுடன் இணைந்து விஞ்ஞான இயல்புகளைப் பெற்றுள்ளது.
ஆயுர்வேதத்தில் காணப்படும் விஞ்ஞான பண்புகள் : -
1. ஆயுர்வேத ஒளடதங்களின் உற்பத்தியின்போது மேலைத்தேய ஒளடதங்களின் உற்பத்தி முறையும், நுணுக்கங்களும் பயன்படுத்தப்படுகின்றது. Eg: குளிகைகள், தூள் மருந்து வகைகள்
2. நோயாளிகளை சோதிக்கும் போது அனுபவ முறைகளும், மருத்துவ உபகரணங்களும் பயன்படுத்தப் படுகின்றன
Eg: நாடித்துடிப்பறியும் கருவி, உடல் வெப்பமானி
3. மேலைத்தேய மருத்துவ முறைகளில் பின்பற்றப்படும் சத்திரசிகிட்சை முறைகளையும் ஆயுர்வேதம் பயன்படுத்திக் கொள்கிறது.
வரலாறு ஒரு விஞ்ஞானம்
(வரலாறு எந்தளவிற்கு விஞ்ஞானம் ஆகும் )
'மனிதனின் கடந்தகாலம் பற்றிய ஒரு பதிவே வரலாறு எனப்படுகின்றது' வரலாறு மனித நடத்தை பற்றி ஆய்வு செய்கின்றது. இதில் பின்வரும் விஞ்ஞானப் பண்புகள் காணப்படுகின்றன.
1. வரலாற்று எண்ணங்களும் கோட்பாடுகளும் அனுபவச் சோதனை மூலம் பொய்ப்பிக்கக் கூடியதாக அமைவதால் வரலாறு விஞ்ஞானம் ஆகும்.
2. வாலாற்றில் தரவுகளை பெறுவதற்கு அனுபவ முறைகளைப் பயன்படுத்துகின்றது
நுஒ: ஆவணங்கள், சுவடிகள், அகழ்வாராட்சி, தனியாள் வரலாற்று ஆய்வு.
3. வரலாற்றாய்வாளர்கள் அவதானிக்கப்பட்ட தரவு களிலிருந்து தொகுத்தறி முறையினை பயன்படுத்தி பொதுமுடிவுகளைப் பெறுகின்றனர்.
4. வரலாற்றுத் தரவுகளை ஆய்வு செய்யப்பட்டு அவை காரணகாரிய அடிப்படையில் விளக்கப்படுவதனால் வரலாறு விஞ்ஞானத்தன்மை உடையதாகக் கருதப்படுகின்றது.
வரலாற்றில் கூறப்படும் கர்ணபரம்பரைக் கரைகள் என்பனவற்றில் கற்பனைகள், அதீத வர்ணனைகள் என்பன காணப்படுகின்றன. இவற்றை அனுபவச் சோதனைகளின் மூலம் பொய்ப்பிக்க முடியாமல் இருப்பதும் வரலாறு எந்தளவிற்கு ஒரு விஞ்ஞானம் எனக் கூறுவதில் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றது.
தொல்பொருளியல் ஒரு விஞ்ஞானம்
(தொல்பொருளியலில் காணப்படும் விஞ்ஞானப் பண்புகள்)
மிகப் பழங்கால மக்களால் பயன்படுத்தப்பட்ட பொருட்களை (எச்சங்கள்) ஆராய்வதன் மூலம் அக் கால வரலாறு, மக்களின் கலை, கலாசார, பண்பாட்டு பிண்ணணிகளை கண்டறிகின்ற முறையே தொல்பொருளியல் ஆகும். இதில் பின்வரும் விஞ்ஞானப் பண்புகள் காணப்படுகின்றன.
1. தொல்பொருளியலில், அகழ்வாராட்சி முறை, கால நிர்ணய முறை என்பன அனுபவ ஆய்வு முறைகளாக பயன்படுத்தப்படுகின்றன.
2. தொல்பொருளியலில் அகழ்வாராட்சி மூலம் கண்டுபிடிக்கப்படும் எச்சங்கள் எக்காலத்திற்கு உரியது என்பதை கண்டறிவதற்காக காபன் 16 (ஊ16) என்ற காலநிர்ணய முறை பயன் படுத்தப்படுகின்றது. இதில் காபன் படிமங்கள் மூலம் இரசாயணப் பரிசோதனைகள் மேற் கொள்ளப்படுகின்றது.
3. தொல்பொருளியல் பூகற்பவியல் அறிவைப் பயன்படுத்துகின்றது.
Eg: மண்ணியல் விஞ்ஞான தொழில் நுட்பங்கள்
4. தொல்பொருளியல் பண்டைக்கால மக்களின் கலை, கலாச்சாரம், பண்பாடு போன்றவற்றையும், விஞ்ஞான தொழில் நுட்ப முன்னேற்றங்களையும் அறிய முயற்சிக்கின்றது.
ஆயினும் தொல்பொருளியலில் சமூக அமைப்புப் பற்றி ஆய்வு செய்யப்படுவதனால் மனிதனின் அகவயத் தாக்கங்களுக்கு உட்பட்டு தொல்பொருளியலானது ஒரு பலவீனமான சமூக விஞ்ஞானத் துறையாக விளங்குகின்றது.
பொருளியல் ஒரு விஞ்ஞானம்
(பொருளியலில் காணப்படும் விஞ்ஞானப் பண்புகள்)
இயற்கையில் காணப்படுகின்ற பற்றாக்குறையான வளங்களைப் பயன்படுத்தி எவ்வாறு மனித தேவைகளை பூர்த்தி செய்யலாம் என்பதை ஆய்வு செய்கின்ற துறையே பொருளியல் ஆகும். இதன்படி மனித நடத்தைக்கான காரணங்கள் விளக்கப்படுகின்றன. பொருளியலில் பின்வரும் விஞ்ஞானப் பண்புகள் காணப்படுகின்றன.
1. பொருளியலில் அவதானங்களின் மூலம் பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் பொது விதி ழச கோட்பாடுகள் உருவாக்கப்படுகின்றது.
Eg: கேள்வி நிரம்பல் விதி.
2. பொருளியலில் கணித, புள்ளிவிபர முறைகள் பெருமளவிற்கு பயன்படுத்தப்படுகின்றன.
Eg: அட்டவணைகள், வரைபுகள், நிகழ்தகவு கோட்பாடு
3. பொருளியல் வெற்றிகரமான எதிர்வு கூறலுக்கு இடமளிக்கின்றது.
இயற்கை விஞ்ஞானத் துறைகளான பௌதீகவியல், இரசாயணவியல் போன்ற துறைகள் பிரச்சினைகளை ஆதாரத்துடன் உடனுக்குடன் நிரூபிக்கின்றது. ஆனால் பொருளியலில் தோற்றப்பாட்டிற்கான காரணங்களை உடனடியாக கண்டுகொள்ள முடியாதுள்ளது.
அரசியயல் விஞ்ஞானம் ஒரு விஞ்ஞானம்
அரசியல் விஞ்ஞானம் சமூக நடத்தை பற்றி ஆய்வு செய்வதனால் இது ஒரு சமூக விஞ்ஞானம் ஆகும். இதில் பின்வரும் விஞ்ஞான அம்சங்கள் காணப்படுகின்றன.
1. அனுபவ அடிப்படையில் நேர்வுகள், சமூகத் தோற்றப்பாடுகளை பகுப்பாய்வு செய்து விளக்குகிறது.
2. புள்ளிவிபர, கணித முறைகள் பயன் படுத்தப்பட்டு அளவீடுகள் மேற்கொள்ளப்பட்டு எதிர்வு கூறல்கள் இடம் பெறுகின்றது.
மொழியியல் ஒரு விஞ்ஞானம்
மொழியியல் பின்வரும் விஞ்ஞான அம்சங்களைக் கொண்டுள்ளது.
1. மொழியியலின் ஒலியமைப்பு பற்றிய ஆய்வுகளும் சோதனைகளும் இடம் பெறுகின்றன.
2. மொழியின் உச்சரிப்பின் வரலாறு ஆய்வு செய்யப்படுகின்றது.
3. மொழி உச்சரிப்பின் போது ஏற்படும் உடல் மாற்றங்கள் பற்றி ஆய்வு செய்கின்றது.
4. மொழியின் வரலாறு சமூகத்தினதும், நாகரிகத்தினதும் வரலாறாக அமைகின்றது.
அழகியல் ஒரு விஞ்ஞானம்
அழகியல் ஒரு பெறுமான விஞ்ஞானமாயினும் விஞ்ஞானம் பற்றிய பொதுவான கருத்தில் அது ஒரு விஞ்ஞானம் அல்ல. விளக்குக - 2002
அழகியல் ஒரு நியமம் கூறும் விஞ்ஞானம் ஆகும். இது சரி, பிழை நன்மை, தீமை போன்ற பெறுமானங்களை மதிப்பீடு செய்கின்றது. ஆயினும் அழகு என்பது ஆய்வாளன் சார்ந்த விடயமா ஆய்வு விடையம் சார்ந்த விடையமா என்பது பிரச்சினையை ஏற்படுத்துவதால் அழகியலின் விஞ்ஞானத் தன்மை பிரசை;சினையை ஏற்படுத்துகின்றது.
1. அனுபவச் சோதனைகள் மூலம் பொய்ப்பிக்கக் முடியாத தன்மை இருத்தல்.
2. பண்புத் தன்மையை கொண்டிருத்தல்.
3. அகவயத் தi;மையை கொண்டிருத்தல்.
தூய கணிதம் ஒரு விஞ்ஞானம்
தூய கணிதம் ஒரு விஞ்ஞானம் என்பதை நீர் எவ்வாறு நியாயப்படுத்துவீர் ?
ஆனுபவச்சோதனைகள் மூலம் பொய்ப்பிக்கக் கூடிய அறிவுத் துறைகளே விஞ்ஞானம் ஆகும். தூய கணிதம் நிர்ணயிக்கப்பட்ட விதிகளுக்கமைய முடிவைப் பெறுவதால் இது அனுபவத்தன்மையானது அல்ல.
1. அனுபவச் சோதனைக்கு உட்படுத்த முடியாமை
2. அறிவை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டமை.
மானிடவியல் ஒரு விஞ்ஞானம்
மானிடவியலின் விஞ்ஞான ரீதியான அம்சங்களை தெளிவுபடுத்துக ?
மனித இனம் பற்றிய ஆய்வு மானிடவியலாகும். இது சமூக விஞ்ஞானம் ஆகும். மானிடவியல் இரு பிரிவுகளை உள்ளடக்கியது.
1. பொளதீக மானிடவியல்
2. பண்பாட்டு(சமூகஃகலாசார) மானிடவியல்
பொளதீக மானிடவியலின் விஞ்ஞான அம்சங்கள் :
1. இங்கு மனிதனின் எழும்புகள், பற்கள், மூளை என்பனவற்றில் ஏற்படும் விருத்தி, மாற்றங்கள் என்பனவற்றை பரிணாம அடிப்படையில் ஆய்வு செய்வதால் விஞ்ஞான அம்சத்தைப் பெறுகிறது.
2. மனித எச்சங்கள் எக்காலத்திற்கு உரியது என்பதை கண்டறிவதற்காக காபன் 16 (C16) என்ற காலநிர்ணய முறை பயன் படுத்தப்படுகின்றது.
3. அவதானம், பரிசோதனை போன்ற ஆய்வு முறைகள் பயன்படுத்தப்படுகின்றன.
பண்பாட்டு மானிடவியலின் விஞ்ஞான அம்சங்கள் :
1. பண்பாட்டு மானிடவியலில் உலகிலுள்ள பல்வேறு சமூக மக்களின் கலை, கலாச்சாரம், பழக்கவழக்கம், நடத்தைகள் என்பன பற்றி ஆய்வு செய்யப்படுகின்றது.
சமூகவியல் ஒரு விஞ்ஞானம்
மனித நடத்தை பற்றி ஆராயும் சமூகவியலானது ஒரு சமூக விஞ்ஞானத் துறையாகும். இது பின்வரும் விஞ்ஞான அம்சங்களை கொண்டுள்ளது.
1. சமூகவியலின் தந்தையான மாக்ஸ் வெபரினால் சமூகவியலில் சமூகவிஞ்ஞான ஆய்வுமுறைகள் முறைப்படி பயன்படுத்தப்பட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு சமூகவிஞ்ஞான ஆய்வுமுறைகள் பயன்படுத்தப்படுவதனால் இது சமூகவிஞ்ஞான அம்சத்தைக் கொண்டுள்ளது.
2. குடிசனம் பற்றிய ஆய்வு, சமூக நடத்தை, சமூக மாற்றம் என்பன பற்றிய சமூகவியல் ஆய்வுகள் சமூக விஞ்ஞான அம்சங்களைக் காட்டுகின்றன.
3. சமூகவியலில் அளவீடு பயன்படுத்தப்படுகின்றது.
நுஒ: கல்வி, வயது, பால் தொடர்பான அளவீடுகள்
4. இங்கு கட்டுப்பாட்டுக் குளு ஆய்வு முறை பயன்படுத்தப்பகின்றது.
5. சமூகவியலில் நேரடி அவதானம், கலந்துரையாடல், போன்ற கள அவதான முறைகள் பயன்படுத்தப்படுகின்றன....