எனது இணைப்பக்கத்துடன் இணைந்து தங்களுடைய கருத்துக்களையும் தெரிவித்துக் கொள்ளுங்கள்
Published Date: October 11, 2013

psychosis-Major depression with psychotic features




பெரும் மனத் தளர்ச்சிச் சீர்குலைவு


மீள் மனத் தளர்ச்சிச் சீர்குலைவு , மருத்துவ மனத் தளர்ச்சி , பெரும் மனச்சோர்வு , ஓர்முனை மனச்சோர்வு அல்லதுஓர்முனை மனச் சீர்குலைவு என்றும் அறியப்படும் பெரும் மனத் தளர்ச்சிச் சீர்குலைவு, மிகவும் தாழ் நிலையிலான சுய மதிப்பு, பொதுவாக மகிழ்ச்சி அளிக்கக் கூடியனவற்றில் ஆர்வமின்றி இருத்தல் அல்லது அவற்றில் மகிழ்ச்சி கொள்ளாது இருத்தல் போன்ற தாழ் மன நிலையைச் சுட்டிக் காட்டும் ஒரு மன நிலைச் சீர்குலைவாகும். பெரும் மனத் தளர்ச்சிச் சீர்குலைவு என்னும் சொற்றொடரினை அமெரிக்க உள நோயியல் கழகம் (American Psychiatric Association) உருவாக்கியது. 1980ஆம் ஆண்டு பதிப்பித்தமனநிலைக் கோளாறுகளின் நோயறிதல் மற்றும் புள்ளிவிபரக் கையேடு (Diagnostic and Statistical Manual of Mental Disorders (DSM-III) என்னும் நூலில், இச்சொல் மன நிலைச் சீர்குலைவு என்பதன் அறிகுறித் தொகுதியாக அறிமுகமாகி, அதன் பின்னர் பெருமளவில் கையாளப்பட்டு வருகிறது. பொதுவாக உளச்சோர்வு என்னும் சொல்லே இந்தச் சீர்குலைவினைக் குறிக்கப் பயன்படுகிறது. ஆயினும், பிற மனத் தளர்ச்சிச் சீர்குலைவுகளைக் குறிக்கவும் இது பயன்படுகிறது. ஆகவே, மருத்துவ மற்றும் ஆராய்ச்சிக்கான பயன்பாடுகளுக்கு மேலும் துல்லியமான சொல் தேவை என்பதால் அத்தளங்களில் இதைக் கையாளுவதில்லை. ஒரு மனிதரின் குடும்பம், பணி அல்லது பள்ளி வாழ்க்கை, உறக்கம் மற்றும் உண்ணும் பழக்கம் மற்றும் பொதுவான உடல் நலம் ஆகியவற்றைப் பாதிக்கும் ஒரு நிலையாக பெரும் மனத் தளர்ச்சி உள்ளது. அமெரிக்க ஐக்கிய நாட்டில் பெரும் மனத் தளர்ச்சிச் சீர்குலைவு கொண்டுள்ளோரில் சுமார் 3.4 விழுக்காட்டினர் தற்கொலை செய்து கொள்கின்றனர்; மற்றும் தற்கொலை செய்து கொள்வோரில் 60 விழுக்காட்டிற்கும் மேலானோர் மனத் தளர்ச்சி அல்லது வேறு வகையான மனத் தளர்ச்சிச் சீர்குலைவு கொண்டுள்ளனர்.

பெரும் மனத் தளர்ச்சிச் சீர்குலைவு நோயினைக் கண்டறிதலானது, நோயாளி தமது அனுபவங்களாகக் கூறுபவை, அவரது நண்பர்களும் குடும்பத்தினரும் அவரது நடத்தையாக உரைப்பவை மற்றும் மன நிலைப் பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையிலேயே அமைந்துள்ளது. உடல் நலத்தை அறிவதற்கு மருத்துவர்கள் இயற்பியல் சார்பான சோதனைகளையும், அறிகுறிகளையும் பெருமளவில் சார்ந்திருப்பினும், பெரும் மனத் தளர்ச்சிச் சீர்குலைவை அறிவதற்கு, ஆய்வகச் சோதனைகள் ஏதுமில்லை. பெரும் மனத் தளர்ச்சிச் சீர்குலைவை, அதன் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்காவிடில் அது பின்னர் குணமடைவதை மெதுவடையச் செய்து விடும் அல்லது அந்நபரின் உடல் நலத்தை மோசமடையச் செய்து விடும் என்று கெல்டர், மௌ மற்றும் கெட்டெஸ் (Gelder, Mayou and Geddes) (2005)[சான்று தேவை] ஆகியோர் கூறுகின்றனர். இந்நோய் பெரும்பாலும் 20 முதல் 30 வயதிற்குள்ளாகவே வருகிறது. 30 முதல் 40 வயது வரையிலும் இது உச்சத்தில் இருக்கிறது.

நோயாளிகள் குறிப்பாக மனத்தளர்ச்சி - எதிர் மருத்துவ சிகிச்சை பெறுகின்றனர். பெரும்பாலான நிகழ்வுகளில், இவர்கள் உளப்பிணி சிகிச்சை அல்லது நோய் பற்றிய கலந்தாய்வு ஆகியவற்றையும் பெறுகின்றனர். சுய - உதாசீனம் அல்லது தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொள்ளுதல் ஆகியவற்றில் ஈடுபடும் நோயாளிகளுக்கு மருத்துவ மனையில் அனுமதிக்கப்படுதலும் அவசியமாகலாம். நோயாளிகளில் சிலருக்கு பொது உணர்வு நீக்கியின் கீழ் மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சையும் (electroconvulsive therapy) அளிக்கப்படுகிறது. இந்த மனச்சீர்குலைவு நீடிக்கும் காலகட்டம் நபருக்கு நபர் பெரிதும் வேறுபடுகிறது. சிலருக்கு இது வாரக் கணக்கிலாகவும், வேறு சிலருக்கு வாழ் நாள் முழுவதுமான மீள் பெரும் மனத் தளர்ச்சிக் கால கட்டம் என்பதாகவும் காணப்படுகிறது. மனத் தளர்ச்சி கொண்டுள்ள நோயாளிகளின் வாழ்நாள் எதிர்பார்ப்பு, என்பது அந்நோயற்றோரை விடக் குறைவானதே. மருத்துவ நோய்கள் மற்றும் தற்கொலைகள் போன்றவற்றிற்கு அதிக அளவில் அந்நோயாளிகள் ஏதுவாவதும் இதற்கான ஒரு காரணமாகும். தற்கொலைக்கான ஆபத்தை மருத்துவங்கள் அதிகரிக்கின்றனவா எனத் தெளிவாகவில்லை. தற்போது சிகிச்சை பெற்று வருவோரும், முன்னர் சிகிச்சை பெற்று வந்தவர்களும் சமூகத்தில் .அடையாளம் காணப்பட்டு இழுக்கு அடையலாம்.

கடந்த பல நூற்றாண்டுகளாக, மனத் தளர்ச்சியைக் கண்டறிதல் மற்றும் அதன் காரணங்களைப் புரிந்து கொள்ளுதல் ஆகியவை, இவை மனத் தளர்ச்சியின் பல கூறுகளை இன்னமும் ஆராய்ச்சி விவாதங்களின் மையக் கருத்தில் கொள்ளவில்லை எனினும், பரிணாமத்திற்கு உள்ளாகி வருகின்றன. உள ரீதியான, உள - சமூக ரீதியான, மரபு வழியான, பரிணாம வழியான மற்றும் உடல் ரீதியான காரணிகள் இந்நோய்க்குக் காரணங்களாக முன்வைக்கப்படுகின்றன. சில வகை மருந்துகளை நீண்ட காலத்திற்கு எடுத்துக் கொள்வது மனத் தளர்ச்சியின் அறிகுறிகளுக்கு காரணமாகவும் இருக்கலாம்; அவற்றை மோசமடையவும் செய்யலாம். தனி நபர் குண நலன், ஒருவரோடொருவர் தொடர்பு கொள்ளும் முறைமை மற்றும் கற்றல் ஆகியவற்றின் அடிப்படையில் உளவியல் சிகிச்சை முறைமைகள் அமைந்துள்ளன. உடல் ரீதியான பெரும்பான்மையான கருத்தாக்கங்கள் செரோட்டோனின், நோர்பைன்ஃபெரைன், டோபமைன் போன்ற மெனோமைன் வேதிப் பொருட்களைக் குவி மையப்படுத்துகின்றன. இவை இயற்கையாகவே மூளையில் இருப்பவை மற்றும் நரம்பணுக்களின் இடையிலான தொடர்பிற்குத் துணை புரிபவை.

  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்

    0 comments:

    Speak up your mind

    Tell us what you're thinking... !

    Like On Facebook

    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    விளம்பரம்