எனது இணைப்பக்கத்துடன் இணைந்து தங்களுடைய கருத்துக்களையும் தெரிவித்துக் கொள்ளுங்கள்
Published Date: October 02, 2013

உளவியல் (சைக்காலஜி)



அதற்கான காரணங்களை கண்டறிதல், இதைக் குணமாக்குதல் பற்றிய படிப்பு தான் உளவியல் (சைக்காலஜி). சைக்காலஜி துறையானது மனிதனுடைய மனதையும், நடத்தையையும் பற்றி படிக்கும் படிப்பாகும். இந்த துறையில் வல்லவர்கள் சைக்காலஜிஸ்ட் என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் தனிமனிதனின் புலன் உணர்வு, அறிவாற்றல், செயல்திறன், மன
அழுத்தம், ஆளுமை, நடத்தை ஆகிய அனைத்தையும் ஆராய்ந்து உரிய தீர்வு அளிக்கின்றனர்.
உளவியல் சார்ந்த அறிவானது அன்றாட வாழ்வில் உள்ள கல்வி, குடும்பம், தொழில் உள்ளிட்டவைகளை பற்றி முழுவதும் ஆராய்ச்சி செய்கிறது. மேலும் அவற்றால் ஏற்படும் நன்மைகள், தீமைகள், அதற்கான தீர்வுகள் என அனைத்தையும் காண்கின்றன. இந்த உளவியல் துறையானது மானிட வளர்ச்சி, விளையாட்டு, உடல்நலம், உழைப்பு, ஊடகம், சட்டம் என சில பல பிரிவுகளை கொண்டது. நம்நாட்டில் இத்துறைக்கான வளர்ச்சி விகிதம் மிகவும் அதிகமாக <<உள்ளது. இத்துறையில் ஈடுபாடு கொண்டு பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகமாகி கொண்டு தான் இருக்கிறது.

தோற்றம்: உளவியல் என்பது கிரேக்க சொல்லிலிருந்து உருவானதாகும்.  மனதை படிப்பது என்பது அதன் பொருளாகும். 1802 ஆம் ஆண்டு பிரெஞ்சு நாட்டை சேர்ந்த பியர் கேபானிஸ் எனும் உளவியல் நிபுணர் உயிரியல் தொடர்பான உளவியல் ஆய்வை மேற்கொண்டார். இவரது ஆய்வின் முடிவில் ஒரு உயிரினத்தின் புலனுணர்வு, ஆத்மா ஆகியவை நரம்பு மண்டலத்தின் உடைமைகளாகும் என்றார். 1879ஆம் ஆண்டு ஜெர்மனைச் சேர்ந்த இயற்பியல் வல்லுனர் வில்ஹெம் உண்ட் உளவியல் தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ள ஆய்வுக்கூடம் ஒன்றை அமைத்தார்.

இதன் காரணமாக இவர் உளவியலின் தந்தை என அழைக்கப்படுகிறார். 1950 களில் உண்ட், ஜேம்ஸ், எப்பினாஸ் போன்ற ஆராய்ச்சியாளர்கள் உளவியல் தொடர்பான ஆய்வுகளை வரையறுத்தனர்.

துணைப்பிரிவுகள்

உளவியல் பிரிவானது சில துணைப்பிரிவுகளை உள்ளடக்கியது. அவைகளாவன:

*நெறிபிறழ்வான உளவியல் (Abnormal Psychology)
* உயிரியல் உளவியல் (Biological psychology)
* மருத்துவ உளவியல் (Clinical psychology)
* புலனுணர்வு சார்ந்த உளவியல் (Cognitive psychology)
* சமூகம் சார்ந்த உளவியல் (Community Psychology)
* ஒப்பீடு சார்ந்த உளவியல் (Comparative psychology)
* ஆலோசித்தல் தொடர்பான உளவியல் (Counselling psychology)
* நெருக்கடி தொடர்பான உளவியல் (Critical Psychology)
* வளர்ச்சி சார்ந்த உளவியல் (Developmental Psychology)
* கல்வி சார்ந்த உளவியல் (Education Psychology)
* பரிணாம உளவியல் (Evolutionary Psychology)
* நீதிமன்றம் தொடர்பான உளவியல் (Forensic Psychology)
* உலகளாவிய உளவியல் (Global Psychology)
* உடல்நலம் சார்ந்த உளவியல் (Health Psychology)
* தொழில் ரீதியான உளவியல் (Industrial and Organisation Psychology
* சட்டம் சார்ந்த உளவியல் (Legal Psychology)
* ஆளுமை சார்ந்த உளவியல் (Personality Psychology)
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்

    0 comments:

    Speak up your mind

    Tell us what you're thinking... !

    Like On Facebook

    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    விளம்பரம்