எனது இணைப்பக்கத்துடன் இணைந்து தங்களுடைய கருத்துக்களையும் தெரிவித்துக் கொள்ளுங்கள்
Published Date: October 11, 2013

Bipolar Mood Disorder (இருமுனைக்கோடி)


இருமுனைக்கோடி மனநிலைக் கோளாறு என்றால் என்ன ?

இருமுனைக்கோடி மனநிலைக் கோளாறு என்பது பித்தச் சோர்வுப் பைத்தியநிலை (Manic - depressive psychosis) (MDP ) என்றும் கூறப்படும். இவ்வகை மன நிலைக்கோளாறு என்பது மனநிலை ஊசலுள்ள தன்மையுடையது. ஆர்வமற்ற நிலைக்கும் லேசான மனநிறைவுக்கும் இடையேவான சாதாரண மன ஊசலாடும் நிலையைப் பலர் உணர்வார்கள்.
இரு முனைக் கோடி மனநிலைக்கோளாற்றில், தீவிர மனச் சோர்வுக்கும் வெற்றிச் செருக்கும், சோம்பல் நிலைக்கும் அதிக சுறுசுறுப்புக்கும் இடையே மன ஊசல் காணப்படும். பெரும்பாலான நேரங்களில் உண்மை நிலை தொடர்பு இழக்கும். எனினும் முழுமையான இயல்பு மனநிலை நீண்டநோரம் இருக்கும். பித்தச் சோர்வுயைடவர்கள் தீவிர மன ஊசலுக்கு ஆளாகி அவதியுறுவார்கள். இந்த நிலை தொடர்ந்து பலகாலம் நீளு ¢. இத்தகைய தீவிர தாக்குதல் நேரங்களில் இது மருத்துவ மனை நோயாகக் கருதப்படும். இரு முனைக்கோடி மன நிலைக் கோளாறுகளைக் கண்டறிய முற்படுமுன்னர், மருத்துவ வல்லுநரே, மனநிலை வல்லுநரோ இந்த வித்த நிலைத்தாக்கம் மனச் சோர்வுடன் கூடியுள்ளதா என்பதைப் பரிசோதிப்பார்.
பருவவாயிலில் உள்ளபோதும் சற்று வயது வந்த பின்னரும் இரு முனைக்கோடி மனநிலைக் கோளாறு தோன்றி, வாழ்நாள் முழுதும் இருக்கும். இது பல நேரங்களில் நோயாகவே கருதப் படுவதில்லை. இதனால் பீடிக்கப்பட்ட மக்கள் தேவை யற்று பல்லாண்டுகள் அவதியுறுவார்கள்.

இந்த இருமுனைமன நிலைக் கோளாறு தெனால் வருகிறது ?

இந்தக் கோளாற்றுக்கான காரணங்களைக் கண்டறிய பல ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஆனால் இதுவரை உறுதியான முடியுவகளேதும் இடுக்கப்படவில்லை. இது ஒரு, மரவு வழி (genetic ) நோய்பரவலாகவும், இதனால் மற்ற குடும்ப உறுப்பினர்கள் கூட இந்நோயால் பீடிக்கப்படும் வாய்ப்புகள் இருக்கக்கூடும். இது தீவிர மன அழுத்த நிகழ்வுகளின் காரணமாகவும் குழந்தை பிறப்பிற்குப்பின் ஏற்படும் ஹார்மோன் மாற்றத்தாலும் ஏற்படக்கூடும். எண்ணம், நடத்தை மாற்றத்திற்கான மன நிலை பொறுப்பு மூளைப்பகுதியில் ஏற்படும் இரசாயன சமமின்மையும் காரணமாக இருக்கக்கூடும்.

அறிகுறிகள்

1. மனச்சோர்வு
  • சோர்வுற்ற அல்லது தாழ்வு மனநிலை
  • ஆர்வமின்மை, வாழ்வில் மகிழ்ச்சி யின்மை
  • தூண்டுதலும் செயல்நோக்கமும் இல்லாமை. இதனால் எளிய செயல்களும், முடிவுகளும் கடினமாகவும் செய்ய முடியாமலும் ஆதல்.
  • முழு களைப்பு
  • மனப்போராட்டம், அமைதியின்மை
  • பசியின்மை, உடல் எடை குறைதல்
  • தூக்க மின்மை
  • வெளிப்படை அன்பின்மை, உடலுறவில் ஆர்வமிழத்தல்
  • தன்னம்பிக்கையை இழத்தல், மக்களைத் தவிர்த்தல்
  • பயனற்றதை, குறைவானதை, தீயதை, உதவியற்தை நம்பிக்கையற்றதை எண்ணுதல்
  • குற்ற உணர்வு, பயனற்ற, உதவியற்ற எண்ணங்கள்
  • ஒரு குறிப்பிட்ட நோரத்தில் பெரும்பாலும் காலை நேரம்களில் மோசமாக எண்ணுதல்
    தற்கொலை எண்ணம் இவை மன அழுத்தத்தில் பொதுவானவை. பிறர் உதவியைத் தேவைப் படுத்வின் அறிகுறிகள் இவை.
2. பித்த வெறி மற்றும் மாற்றுநிலை பித்தம் (Maniac & Hypomania)
  • உயர்வு மனப்பான்மை
  • ஆற்றலும், செயல்களும் அதிகரித்தல்
  • தூங்க இயலாமை அல்லது தூங்க விருப்ப மின்மை
  • வேகமான பேச்சு, எண்ணங்களும் கருத்துக்களும் பாய்வு.
  • தன்னை உயர்வாகக் கருதிக்கொள்ளல்
  • முன்கோபம், பொறுமையின்மை
  • பால் உணர்வு அதிகரிப்பு மற்றும் உடலுறவு ஆர்வமின்மை
  • முடிவெடுக்க இயலாமை, சிந்திக்காமல் மடிவெடுப்பது
  • ஊதாரித்தனம், சிக்கலான, வினாவெழுப்பவல்ல செயல்களில் ஈடுபாடு
  • பெருமிதம், பகட்டான மருட்சி
இரு முனைக் கோடி மனநிலை கோளாற்றின் துவக்க அறிகுறி மாற்றுநிலை பித்தமாகும் (hypomania). இந்த நிலையில் ஒருவன் அதிக வலிமை கொண்டும், அதிக நிலையில் ஒருவர் அதிக வலிமை கொண்டும், அதிக சிடுசிடுப்புடனும் முன் கோபத்துடன், நினைத்த அளவில் பொறுப்பற்ற நடத்தை கொண்டவராய் இருப்பார். பாதிக்கப்பட்ட வருக்கு மாற்று நிலை பத் (மானது) நல்லதென்றே படும். அவருக்கு அதில் ஏதும் தவறாகவே தோன்றாது. யாராவது அவருக்கு அது பற்றி குறிப்பிட்டால் அவர் அதை வன்மையாகக் கண்டிப்பார்.
சிலருக்குப் பட்டறிவால் அவர்களுடைய நிலையை அடையாளங் காணமுடியும். ஆனால் தீவிர முதிர்ந்த நிலையில் அனைத்தும் தெரியாமற் போகும். பாதிக்கப் படுபவர் கற்பனை மிதப்பில் சட்டப்புறம்பான செயல்களில் ஈடுபடுவது வழக்கத்திற்கு மாறானதல்ல. அதிக செலவு செய்தல், மோசடி செயதல், அதிர்ஷ்ட வசமாக, அரிதாக, மற்றவர்களை தாக்கக்கூடும்.
3. கலப்பு நிலை
ஒரு சிலர் சில சமயங்களில் பித்தத்தின் மற்றும் மன சோர்வின் கூட்டு அறிகுறிகளை உணரக்கூடும். உதாரணமாக, ஒரு உயர் தரச் செயல் குறைந்த அளவு மன ஒரு முகப்படுத்தலோகும், வாழ்வின்தான் சோர்வு மனப்பான்யுடனும் சேர்ந்திருக்கக்கூடும். இது தற்கொலை முயற்சி ஆபத்துக்கு வழிகோலக்கூடும்.

இயல்பு நிலை

மனச்சோர்வு காலத்திற்குப் பிறகு அல்லது பித்த நிலைக்குப்பிறகு, பாதிக்கப்பட்டவர்கள் வழக்கமாக இயல்பு நிலைக்கும் தனது பழைய ஆளமைத் தன்னமக்கும், சிந்திக்கும் ஆற்றலுக்கும் பழைய ஆற்றல் நிலைக்கும் எந்த வித உடற்குறையுமின்றி திரும்புவார்கள். எனினும் பாதிக்கப்பட்டவர் உறவுகளுக்கும், பணத்திற்கும் நடந்த இழப்பை எண்ணி வருந்தக்கூடும். அவர்கள் நம்பிக்கையை இழக்கக்கூடும். குற்ற உணர்வால் பிறரைக் காண நாணக்கூடும்.

இந்தத் தாக்குதல் அடிக்கடி நேரிடுமா ?

இந்தத் தாக்குதலில் அடுக்கு நிகழ்வு ஒருவருக்கும் வேறொருவருக்கும் மட்டுமேயல்ல ஒருவருக்குள்ளேயே மாறுபடும். சிலருக்குத்த தினமும், மாத்திற்கு ஒரு முறை, ஆண்டுக்கு ஒரு முறை அல்லது சில ஆண்டுகளுக்கு ஒரு முறை என்று வழக்க சூழல் முறையில் அவர்கள் தாக்கப் படக்கூடும். மற்றவர்களுக்கு ஆண்டுக்கணக்கில் இச்சிக்கல் வராமலிருந்து பின்னர் தொடர்ந்து பல முறை தாக்ககூடும்.

மருத்துவம் ஏன் இன்றியமையாதது ?

மருத்துவம் அளிக்காவிட்டாலும், பாதிக்கப்பட்டவர் சிறிது காலத்திற்குப் பிறகு தாங்களாகவே சீராகிவிடக்கூடும். ஆனால் அவர்களுடைய வாழ்க்சைக்கும், அவர்களுடைய குடும்பத்திக்கும், கணிசமான தேவையற்ற துன்பங்களைத் தந்துவிடும் கூடுமானவரை, பித்துள்ளவர்களையும், தீவிர மனச் சோர்வு உள்ளவர்களையும் மருத்துவமனையில் விரைவில் சேர்ப்பதன் மூலம் அவர்கள் விரைந்து குணமடையும் வாய்ப்பைத்தரும். அதோடு, சிந்திக்காமல் முடிவெடுப்பது, தற்கொலை முயற்சி முதலான நோயின் பின் விளைவுகளிலிருந்தும் நோயாளிகளைக் காப்பற்ற உதவும்.

இருமுனைக் கோடி மனநிலைக் கோளாறு எவ்வாறு குணப்படுத்தப்படுகிறது ?

மனநிலை சமப்படுத்தல் மருந்துகளால் பெரும் பாலானோர்களில் மன ஊசலைக் (60-80%) குறைக்கலாம் கட்டுபடுத்தலாம். மிக அதிகமாகப் பயன்படுத்தப்படும் மருந்து லிதியம் கார்பனேட்டாகும். இதற்கு கவனமான பயன்படுத்தலும் அதன் விளைவு நிலைகளை அறிய அடிக்கடி இரத்தப்பரிசோதனையும் தேவைப்படும்.
சமுதாயமும், தனி மனிதரும் ஒப்பும் அளவுகளுக்கு மன நிலை ஊசல்களை லித்தியம் கட்டுப்படுத்தும். தீவிர தாக்கு தகளிலிருந்து காப்பாற்ற இயலும். இம்மருந்துவம் ஒருவகை சாதாரண், வழக்கமான, பய்னுள்ள வாழ்க்கையை வாழ வழி வகுக்கும். துரதிர்ஷ்ட வசமாக, பாதிக்கப்பட்டவர்களில் சிலருக்கு இம்மருத்துவம் குறைந்த அளவு விளைவை ஏற்படுவதும். அல்லது இன்னும் மிகச் சிலருக்குப் பின்பிளைவுகளை ஏற்படுத்தும். வித்தியம் கார்பனேட் ஏற்படுத்தும் பின்விளைவுகளில் ஒரு சில:
  • அடிக்கடி சிறுநீர் கழிதல், தாகமெடுத்தல்
  • கை நடுக்கம்
  • தோல் வெடிப்பு
மற்ற மனநிலை சமப்படுத்து மருந்துகளில் கார்பமஜாபின், சோடியம் வல்புரேட் முதலான வலிபோக்கிகளும் அடங்கும்.
சில சமயங்களில் மற்ற மருந்துகளும் பித்தம் மற்றும் மன சோர்வை நலப்படுத்த பயன்படுத்தப்படுகிறது சில நேரங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட மருந்துகள் தேவைப்படும். இம்மருந்துகளில், மனச்சோர்வை அகற்றும், மனநோய் தடுப்பு மற்றும் பெண்ஜோடயா ஜெபின்ஸ் அடங்கும். ஒவ்வொரு மருந்துக்கும் ஒரு 'பக்க விளைவு' இருக்கும். இம் மருந்துகள் சமநிலைக்கு வருவதைத்துரிதப்படுத்த மட்டுமே பயன்படுத்தப்படும் அதனால் இவை தொடர்ந்து தரவேண்டிய தேவையில்லை.
தீவிர மன சோர்வுக்கும், சிலசமயங்களில் பித்துக்கும் பயன்படுத்தப்படும் மற்றொரு மருத்துவம் தான் லெக்ட்ரோ - கன்வல்சிவ் தெரபி (ணிசிஜி). இது தரப்படும்போது நோயாளிக்கு அதை களர்த்துவன (Muscle relaxant) மற்றும் சிறிது நேரம் செயலாற்றும் மயக்க மருந்தும் தரப்படும். ஒரு அதிக கட்டுப்படுத்தப்பட்ட மின் அலை தலையில் பொருத்தப்பட்டிருக்கும் லெக்ட்ரோட்ஸ் மூலம் மூளைக்குப் பாய்ச்சப்படும். மருத்துவக்காலத்தில் ஞாபகக்குறைவு ஏற்படக்கூடும். ஆனால் இது நெடுங்காலம் நினைவு கூர்தலைப் பாதித்ததாக சான்றுகள் இல்லை. பொதுவாக தீவிர மனச் சோர்வை ணிசிஜி பயன்படுத்து வெற்றிகரமாக குணப்படுத்தலாம்.

இந்த நோயைச் சமாளிப்பது எப்படி ?

மனநிலை ஊசலின் விளைவுகள் திருமணம், குழந்தைகள் (அல்லது பெற்றோர்கள்) பணியில் உள்ளவர்கள், நண்பர்கள், தனிப்பட்ட பாதிக்கப்படுபவர் அனைவர் மீதும் பெருஞ்சுமையை உண்டாக்கும். பலர் விசயத்தில் இது, தனிமை, வேலை இழுப்பு, வீடிழப்பு, மேலும் சிக்கல் உண்டாக்குதல், பதிக்கப்பட்டலனை தனிமையை அதிகரித்தல் முதலியவற்றை உண்டாக்கும். எனவே இந்த நோய், பாதிக்கப்பட்டவரையும், அவரது குடும்பத்தையும் சமுதாயத்தையும் பலவகையில் பாதிக்கும்.
(அ) பாதிக்கப்படுபவர்
பாதிக்கப் படுபவர்கள் தாம் நோய்வாய்ப் பட்டவர் என்பதை முதலில் ஒப்புக் கொள்ள வேண்டும். ஆனால் அது அவ்வளவு எனிதானதல்ல. அவர்கள் மனநிலை சமப்படுத்து மருந்துகளை, ஏதோ ஒரு வடிவில் நீண்ட காலமோ அல்லது வாழ்நாள் முழுவதுமோ பயன்படுத்த வேண்டும்.
இந்த அறிகுறிகளைத் தூவக்கக்காலத்திலேயே அறிந்து கொள்ள முயலவேண்டும். இது மனநிலை மாற்றத்தை மேலும் தீவிர மாக்கம்மல் தடுக்க வல்லது. அல்லது அது கடின் சூழ்நிலை ஏற்படுவதைத் தவிர்க்கும். தூங்கும் பாங்கில் மாற்றம் ஏற்படுவது துவக்கச் சீர்கேட்டை உணர்த்த உதவும். தேநீர், காப்பி, கோக் முதலிய காஃபின் உள்ள பொருட்களை, மதுவகைகளை உட்கொள்வதைத் தவிர்ப்பதும் சீரான உணவே உட்கொள் வதும் சிக்கல்களைத் தவிர்க்க உதவும். மனஅழுத்தம் தொடர்பான நோயாதலால், எது மன அழத்தத்தை உம்டாக்குவது என்பதைக் கண்டறிந்து, அத்தைய தேவையற்ற மன அழுத்தங்களைத் தவிர்ந்து வழை நீங்கள் திட்டமிட வேண்டும்.
நோய் வாய்பட்டிருக்கும்போது முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டும். தீவிரமாக இருக்கும் போது நீங்கள் பணம் செலவமிக்க வேண்டிய கட்டியம் ஏற்பட்டால், உங்கள் செயற்பாடுகளை கவனிக்க ஒரு 'டிரஸ்ட்' டிடம் ஒப்படைக்க முடிவெடுங்கள் அல்லது ஒரு வழக்கறிஒரை (attorney) உங்கள் £ர்பாக செயல்புரிய நியமிக்க வேண்டும். உங்களுக்கு நெருக்க மாக இருப்பவர்கள் உங்களுக்கு உதவ முயலுகிறார்கள் என்பதை அடையாளங்காண வேண்டும்.
(ஆ) உறவினர்களும் நண்பர்களும்
முதலில், அன்பு காட்டுபவர்களும், உறவினர்களும் புதுமையான நடவடிக்கை, வன்மையான அல்லது வசவு நிறைந்த பேச்சு அல்லது நெடுநேர அமைதி என்பவை நோயின் பல்வேறு நிலைகள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அவை ஆளுமையின் முன்னர் மறைந்துள்ள தன்மைகள் அல்ல, மன நிலைக் கோளாற்றின் அறிகுறிகள் என்பதையும் அவர்கள் உணர வேண்டும்.
பாதிக்கப்பட்டவரைச் சிலசமயங்கள் பூட்டி வைக்க வேண்டும், சிலசமயங்களில் வீட்டிலுள்ள விஷப்பொருட்களையும், மருந்து வில்லைகளையும் மறைத்து வைக்க வேண்டும், மற்ற சமயங்களில் வெளியே சென்று பாதிக்கப்பட்டவர்களைக் காணவேண்டும். சாதாரணமாக உதவும் மனப்பான்மை கொண்டுள்ள காவல் துறையின்றின் உதவியை நாட் அஞ்சக்கூடாது. பாதிக்கப்படவர் மனநிலை வல்லுநரைச் சரதிக்க நீங்கல் ஊக்குவிக்க வேண்டும். எதுவும் தவறாறு உணர முடியாத அளவுக்கு நோயாளி நீ... மடையும் போது அவசர உதவியை நாடுங்கள்.
பாதிக்கப்பட்டவரை மருத்துவ மனையில் சென்று சந்திப்பது என்பது உங்கள் நம்பிக்கைகளுக்கும் புரிதளுக்கும் பெருஞ்சோதனையாக இருக்கக்கூடும். நீங்கள் நன்கு வரவேர்கப்படாமல் போகலாம். மருத்துவமனையில் சேர்த்தது குறிப்து திட்ட வாங்க நேரிடலாம். நீங்கள் ஓரே நிலையேறில், மனத்திடமாக இருந்தால் அது பாதிக்கப்பட்டவருக்கு அது உதவும். மருத்துவ தாதிகளிடமிருந்தும், மருத்துவ பணியாளர் களிடமிருந்து மேலும் விவரங்களைப் பெற்று நோயை நீங்கள் நன்கு புரிந்து கொள்ள உதவும்.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்

    0 comments:

    Speak up your mind

    Tell us what you're thinking... !

    Like On Facebook

    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    விளம்பரம்