எனது இணைப்பக்கத்துடன் இணைந்து தங்களுடைய கருத்துக்களையும் தெரிவித்துக் கொள்ளுங்கள்
Published Date: October 07, 2013

இஸ்லாம் கூறும் உளவியல் (தொடர் 01)


POSITIVE THINKING (நேர் சிந்தனை)
psychology copyஒரு மனிதனுடைய வாழ்க்கையில் வெளிக்காட்டப்படுகின்ற அத்தனை செயற்பாடுகளுக்கும் அடிப்படையாக அமைவது அவனுடைய உள்ளத்தில் தோன்றுகின்ற எண்ணங்களாகும். உள்ளத்தில் தோன்றும் எண்ணங்களை பல்வேறுவிதமாக பகுத்து ஆராயலாம். எனினும் அடிப்படையில் எண்ணங்களை இரண்டாக வகைப்படுத்தி ஆராயலாம்.
1.          நேர் சிந்தனை (POSITIVE THINKING)
2.          மறை சிந்தனை (NEGATIVE THINKING)
நேர் சிந்தனை (POSITIVE THINKING) என்பது எந்தவொரு பொருளையும் செயற்பாட்டையும் பற்றி சிந்திக்கும்போது நேரானதாக, உடன்பாடாக, முடியுமானதாக சிந்திப்பதாகும். மறை சிந்தனை (NEGATIVE THINKING) என்பது எந்தவொரு பொருளையும் செயற்பாட்டையும் பற்றி சிந்திக்கும்போது எதிர் மறையாக, இல்லாததொன்றாக, முடியாததாக சிந்திப்பதாகும்.
உதாரணம் ஒன்றின் மூலம் இதனை விளக்குவதாயின் அருகிலுள்ள கிண்ணத்தில் அரைவாசி அளவு பானம் நிரம்பியிருக்கிறது என நினைப்பது நேர்சிந்தனை (POSITIVE THINKING) வகையாகும். கிண்ணத்தில் அரைவாசி அளவு காலியாக (empty) உள்ளது எனறு நினைப்பது மறை சிந்தனை (NEGATIVE THINKING)  வகையாகும். நேர் சிந்தனை (POSITIVE THINKING) அடிப்படையில் சிந்திக்கும் போது ஒரு மனிதனுடைய உள்ளம் சீர்பெறுகிறது. செயற்பாடுகள் உருப்பெறுகிறது. வெற்றியும் கிட்டுகிறது. மறை சிந்தனை (NEGATIVE THINKING) அடிப்படையில் சிந்திக்கும் போது அவனுடைய உள்ளம் சீர்குலைகிறது, அவநம்பிக்கை ஏற்பட்டு செயற்பாடுகளில் பின்னடைவும் ஏற்படுகிறது. இதனை ஒரு நிகழ்வின் மூலம் பின்வருமாறு விளக்கலாம்.
ஒரு வேலைக்காக விண்ணப்பிக்கும் போது நாசர் என்பவன் ஆர்வத்தோடு ‘ என்னால் இந்த வேலையை கண்டிப்பாக அடைந்து கொள்ள முடியும். எனக்கு நிச்சயம் இந்த வேலை கிடைக்கும்.’ என்ற நம்பிக்கையோடு விண்ணப்பிக்கின்றான். ஆசர் என்பவன் அதே வேலைக்கு விண்ணப்பிக்கும் போது ‘இந்த வேலை நமக்கு கிடைக்கவா போகிறது. நம்மை விடத் திறமையான எத்தனையோ பேர் விண்ணப்பிப்பார்கள். அவர்களோடு நமக்குப் போட்டி போடவா முடியும்? போனாப்போகுது, போட்டு விடுவோம்.’ என்று நினைத்துக் கொண்டு விண்ணப்பிக்கின்றான்.
இவர்கள் இருவருடைய சிந்தனைகளும் இருவருடைய செயற்பாடுகளிலும் செல்வாக்குச் செலுத்துகின்றது. தனக்கு வேலை கிடைக்கும் என்று எண்ணிக் கொண்டிருக்கும் நாசர், நேர்முகப் பரீட்சைக்கான முன்னாயத்தங்களை செய்து கொள்கின்றான். நேர்முகப் பரீட்சைக்கு முதல் நாள் இரவு தேவையான ஆவணங்களையும் உடைகளையும் தயார் செய்து வைத்துவிட்டு வழமைக்கு மாற்றமாக சற்று நேரத்தோடு தூங்கி, அதிகாலையில் எழுந்து தேவையான ஏற்பாடுகளையும் செய்துகொண்டு, காலையுணவையும் உண்டுவிட்டு, தூய்மையான ஆடையணிந்து நேர்முகப்பரீட்சை நடைபெறும் இடத்துக்கு முன்னதாகவே சென்றுவிடுகிறான்.
ஆசர் விண்ணப்பித்துவிட்டு பொடுபோக்காகவே இருந்து விடுகின்றான். எந்த முன்னேற்பாட்டையும் செய்யவில்லை. நேர்முகப் பரீட்சைக்கு முதல் நாள் இரவு பின்னிரவிலே (late night) தூங்கச் செல்கிறான். தாமதமாக எழும்பி ஆடைகளும் ஒழுங்கில்லாமல் காலையுணவையும் சாப்பிடாமல் கையில் கிடைத்த ஆவணங்களை எடுத்துக் கொண்டு தாமதமாகிவிட்ட காரணத்தினால் பதட்டத்துடன் நேர்முகப் பரீட்சைக்கு செல்கிறான்.
இப்போது நடைபெறுகின்ற நேர்முகப்பரீட்சையிலே நாசர் – உடல் ஆரோக்கியத்தோடு, அழகான தோற்றத்தில், மன அமைதியோடு நேர்முகப் பரீட்சையை சந்திக்கிறான். அவனுக்கு வெற்றி கிட்டுகிறது. வேலையும் கிடைக்கிறது. ஆசர்  பசியோடும் பதட்டத்தோடும் அலங்கோலமான ஆடையோடும் மனக்குழப்பத்தோடும் நேர்முகப்பரீட்சையை சந்திக்கிறான். அவனுக்கு தோல்வியே கிட்டுகிறது, வேலையும் பறிபோகிறது.
இந்த இரு நபர்களையும் எடுத்து நோக்கினால் நேர்சிந்தனை (POSITIVE THINKING) யுடைவருக்கு வெற்றி கிடைத்தது. மறை சிந்தனை (NEGATIVE THINKING) யுடையவருக்கு தோல்வியே கிடைத்தது. எனவே நேர் சிந்தனையானது, உள்ளத்தை உறுதியாக்கி, ஐம்புலன்களையும் கூர்மையாக்கி தன்னையும் தன்னைச் சூழவுள்ளவற்றையும் தனக்குச் சாதகமானதாக மாற்றியமைக்கிறது.
 எவ்வாறு நேர் சிந்தனையை உருவாக்கிக் கொள்வது?
1.   நான் நேர் சிந்தனையுள்ளவனா? மறை சிந்தனையுள்ளவனா? என்பதை முதலில்     இனங்காண வேண்டும்.
2.  எந்தெந்த விடயங்களில் மறை சிந்தனை எனக்கு ஏற்படுகிறது? என்பதனை உள்ளத்திடம் கேட்க வேண்டும்.
3.  அந்தந்த இடங்களை மனக்கண் முன் நிறுத்தி அவற்றுக்கு நேர் சிந்தனையைப் பொருத்த வேண்டும். (உதாரணமாக: கிண்ணத்தில் அரைவாசி வெற்றிடமாக உள்ளது என்பதற்குப் பதிலாக கிண்ணத்தில் அரைவாசி நிரம்பி உள்ளது என்றும்இ
இன்று வேலைக்குச் செல்ல தாமதமாகிவிடும் என்பதற்குப் பதிலாக இன்று உரிய நேரத்துக்கு வேலைக்குச் செல்வேன் என்றும்,
இந்தக் காரியத்தை எனக்குச் செய்ய முடியாது என்பதற்குப் பதிலாக கண்டிப்பாக என்னால் முடியும் என்றும்)
4. சிந்தனைக்குச் செயல் வடிவம் கொடுக்க முயலுங்கள். அந்த நேரத்தில் அது எவ்வளவு சிரமமாக இருந்தாலும் சரியே.
இன்றைய அறிவியல் உலகம் கண்டறிந்த இந்த உண்மையை நபி (ஸல்) அவர;கள் மிக எளிமையாகக் கூறிவிட்டார;கள். சஹாபாக்கள் மக்காவிலிருந்து மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்கின்ற போது ஒவ்வொரு நோக்கத்தை மனதில் வைத்துக் கொண்டு புறப்பட்டார;கள். அப்போது நபி (ஸல்) அவர;கள் பின்வருமாறு கூறினார;கள்.
எண்ணத்தைப் பொறுத்தே செயல்கள் அமைகின்றன. ஒவ்வொரு மனிதருக்கும் அவர் எண்ணியது தான் கிடைக்கிறது. ஆகவேஎவரது ஹிஜ்ரத் (நாடு துறத்தல்) அவர் அடைய விரும்பும் உலக (ஆதாய)த்தைஅல்லது அவர் மணக்க விரும்பும் பெண்ணை நோக்கமாகக் கொண்டுள்ளதோஅவரது ஹிஜ்ரத்(தின் பலனும்) அதுவாகவே இருக்கும். 
அறிவிப்பவர்  – உமர் பின் அல்கத்தாப் (ரலி), ஆதாரம் : புகாரி 01
தன்னுடைய அன்பு மகன் யூசுபை பிரிந்த யஃகூப் (அலை) அவர்கள் தன் மகன் தன்னிடம் நிச்சயம் கிடைப்பான் என்று உறுதியாக நம்பிக்கை கொண்டிருந்தார்களே அதுதான் நேரர்சிந்தனையாகும்.
அல்குர்ஆன் (12:83).
 சக்கரிய்யா நபியவர்கள் தள்ளாத வயதிலும் தனக்கு அல்லாஹ் குழந்தையை தருவான் என்று நம்பியிருந்தார்களே அதுதான் நேர்சிந்தனையாகும்.
 ( அல் குர்ஆன் 3:38- 41).
 உங்கள் முயற்சி பலதரப்பட்டதாக உள்ளது.யார் பிறருக்கு வழங்கி இறைவனை அஞ்சி நல்லவற்றை உண்மைப்படுத்துகிறாரோ அவறுக்கு வசதிக்குரிய வழியை எளிதாக்குவோம். யார் கஞ்சத்தனம் செய்து தேவையற்றவராகத் தன்னைக் கருதி, நல்லதை நம்ப மறுக்கிறாரோ, சிரமமானதற்கு அவறுக்கு வழியை ஏற்படுத்துவோம்.  ( அல் குர்ஆன் 92:4-10 )
எனவே உள்ளத்தில் எண்ணுவது தான் செயல் வடிவம் பெறுகிறது. ஒவ்வொறு மாணவனும், எனது பாடசாலை சிறந்தது, எனக்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் சிறந்தவர்கள், எனக்குக் கற்றுக் கொடுக்கப்படும் விடயங்களை என்னால் சிறப்பாக விளங்கிக் கொள்ளலாம் என்று நினைக்க வேண்டும்.
ஒவ்வொரு வியாபாரியும், இன்றைய நாள் எனக்கு நன்றாக வியாபாரம் நடக்கும். நிறைய இலாபம் கிடைக்கும் என நினைக்க வேண்டும். இது எனது தாய் நாடு, இந்த நாட்டில் மற்றவர்களுக்கு உரிமை இருப்பது போல் எனக்கும் எல்லா உரிமைகளும் இருக்கிறது. யாருக்காகவும் எதற்காகவும் எனது உரிமையை நான் விட்டுக் கொடுக்கமாட்டேன். கண்டிப்பாக எனது உரிமைகள் என்னால் பெற முடியும் என்று ஒவ்வொரு குடிமகனும் சிந்திக்க வேண்டும். இவ்வாறான நேர்சிந்தனை உடையவர்களால் தான் சிறப்பான சாதனை படைக்க முடியும்.
நேர் சிந்தனை எப்போது வலுப்பெறும்?
நேர் சிந்தனை எப்போது வலுப்பெறும் என்றால் முதலாவது, தான் கொண்ட கொள்கையில் பூரண நம்பிக்கை இருக்க வேண்டும். மனித வாழ்க்கைக்கு எது சரி? எது தவறு? என்பதனை மனிதனால் தீர்மானிக்க முடியுமா? என்று கேட்டால் கண்டிப்பாக முடியாது. ஏனெனில் மனித சிந்தனை என்பது ஐம்புலனகளுக்கு உட்பட்டது. கவலை, களைப்பு, மறதி என்பவற்றுக்கு உட்பட்டது. நேற்று நடந்ததன் பூரண அறிவு கிடையாது. நாளை நடக்கவிருப்பதும் தெரியாது. எனவே உலகிலுள்ள அத்தனை அறிவாளிகளும் ஒன்று சேர்ந்தாலும் மனித வாழ்க்கைக்கு நல்லது எதுவென்பதை தீர்மானிக்க முடியாது. கவலை, களைப்பு, மறதி போன்ற எந்தக் குறைகளுமற்ற முக்காலமும் அறிந்த மனிதனைப் படைத்த இறைவனால் தான் மனிதனுக்கு வழிகாட்ட முடியும். முரண்பாடுகளற்ற அந்த நேர் வழியைத்தான் வஹி என்கிறோம். இந்த வஹியை மாத்திரம் பின்பற்றக்கூடிய ஏகத்துவ வாதிகளுக்கே நேர் சிந்தனை உச்சளவில் வலுப்பெறும்.
மனிதனுடைய வாழ்க்கையில் வெளிப்படும் சிந்தனைக்குட்பட்ட எந்தவொரு செயற்பாடாக இருந்தாலும் அது பிரதிபலனை எதிர்பார்த்ததாகத்தான் இருக்கும். அந்த எதிர்பார்ப்பு நிறைவேறாத போதுதான் மறை சிந்தனை உருவாகிறது. உண்மையான ஓர் இறை விசுவாசி (முஃமின்) அல்லாஹ்வையும் இறுதி நாளையும் உறுதியாக நம்புவான். தான் செய்கின்ற ஒவ்வொரு காரியத்துக்கும் உரிய கூலியை, பிரதிபலனை மறுமையிலே கிடைக்க வேண்டும் என்று மாத்திரம் தான் எண்ணுவான். எனவே உண்மையான ஏகத்துவவாதியான ஓர் இறை விசுவாசிக்கு நேர் சிந்தனை மேலும் மேலும் வலுப்பெறும்.
 நேர் சிந்தனை மூலம் கிடைக்கும் பயன்கள்.
·           வீணாக சந்தேகங் கொள்வதனையும் அதன் மூலம் ஏற்படும் விளைவுகளையும்    தடுக்கிறது.
·           மனச் சோர்வும் மனவழுத்தமும் குறைகிறது.
·           தடிமன், சளி பெருமளவு குறைகிறது.
·           சிறந்த உடலும் சிறந்த உள்ளமும் உருவாகிறது.
·           பெருங் கஷ்டங்களையும் எளிதாக எடுத்துக் கொள்கின்ற தன்மை உருவாகும்
·           ஆயுள் அதிகரிக்கும்.
 இது போன்ற இன்னும் பல பயன்கள் கிடைப்பதாக அறிவியல் ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. எனவே எப்போதும் நேர் சிந்தனை உள்ளவர்களாக மாறுவோமாக!
இன்ஷா அல்லாஹ் தொடரும்….
ஆக்கம் : K.M. பாயிஸ் (Dip.in Sc
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்

    0 comments:

    Speak up your mind

    Tell us what you're thinking... !

    Like On Facebook

    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    விளம்பரம்