கதீஜா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களைத் திருமணம் முடிக்க முன்னர் அபூ ஹாலா பின் ஸுராரா என்பவரையும், அவருக்குப் பின்னர் அதீக் பின் ஆயித் என்பவரையும் திருமணம் முடித்திருந்தார். அவர்களிருவரும் மரணித்த பின் கதீஜா (ரலி) அவர்கள் விதவையாகக் காணப்பட்டார்கள்.
கதீஜா (ரலி) அவர்கள் அன்றைய மக்களிடம் நன்மதிப்பைப் பெற்றவராகத் திகழ்ந்தார்கள். இவர் அறபிகளால் மதிக்கப்படும் உயர் குலத்தைச் சேர்ந்தவர். பெண்களிடம் அவசியம் இருக்க வேண்டிய ஒழுக்கத்தை நிறைவாகவே பேணி வாழ்ந்து வந்ததால் ‘தாஹிரா’ – பரிசுத்தமானவள் என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்பட்டு வந்தார்கள்.
அன்னை கதீஜா (ரலி) அவர்கள் மிகுந்த செல்வச் சீமாட்டியாகக் காணப்பட்டார்கள். மக்கா மாநகரிலிருந்து வெளிநாடுகளுக்குச் சரக்குகளை ஏற்றிச் செல்லும் அனைவரினதும் ஒட்டகங்களின் சுமைகளைவிட கதீஜா (ரலி) அவர்களின் சரக்கு ஒட்டகங்கள் மிகைத்திருக்கும். அந்தளவுக்கு, அவ்வளவு பொருட்களுக்கும் உரிமையாளராக அவர்கள் காணப்பட்டார்கள்.
அந்தக் கால கட்டத்தில் நபி (ஸல்) அவர்கள் பல கூட்டத்தினரோடும் வியாபாரக் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டு வந்தனர். அவற்றில் நபி (ஸல்) அவர்களின் நேர்மையான நடைமுறைகள், நீதியான கொடுக்கல் வாங்கல்கள் மக்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டன. அப்போது நபி(ஸல்) அவர்களை அம்மக்கள் ‘அல்-அமீன்’ – நம்பிக்கையாளர் என்றழைத்தனர்.
நபியவர்கள் வியாபாரத்தில் மட்டுமன்றி, அனைத்து விடயங்களிலும் மிக நேர்மையாக நடந்து கொண்டதனால் மக்கள் அவர் மேல் உயிரையே வைத்தனர். நற்குணங்களின் உறைவிடமாகத் திகழ்ந்த நபியவர்கள் அனைவரையுமே மதித்து நடந்தனர். இதனால், நபியவர்களது அருங்குணங்கள் மக்கள் மத்தியிற் பரவ ஆரம்பித்தன.
நபியவர்களின் நேர்மை, நாணயம் அறிந்து தமது வியாபாரச் சரக்குகளை விற்கும் பொறுப்பைக் கவனித்துக் கொள்ளுமாறு நபியவர்களை அழைத்து, வணிகத்திற்காக அனுப்பி வைத்தார்கள் கதீஜா (ரலி) அவர்கள். அதற்கிணங்க நபி (ஸல்) அவர்கள் கதீஜா (ரலி) அவர்களின் வியாபாரப் பொருட்களை விற்றுக் கொடுத்தார்கள்.
அவர்கள் வணிகத்தில் அதற்கு முன் எவருமே ஈட்டாத அளவு இலாபத்துடன் நாடு திரும்பினார்கள். நபி (ஸல்) அவர்களுடன் வியாபாரத்திற்காகச் சென்ற மைஸரா என்ற அடிமை மூலம் நபி (ஸல்) அவர்களின் நன்னடத்தை பற்றி மேலும் அறிந்து கொண்டார்கள் கதீஜா (ரலி) அவர்கள். இதனால், நபி (ஸல்) அவர்களை மணமுடிக்க விரும்பினார்கள். அப்போது கதீஜா (ரலி) அவர்களின் வயது நாற்பதை எட்டியிருந்தது; நபி (ஸல்) அவர்களின் வயது இருபத்தைந்தாக இருந்தது.
கதீஜா (ரலி) அவர்களது வயது நாற்பதை எட்டி இருந்தாலும் அவர்களின் செல்வச் செழிப்பின் காரணமாகப் பெரும் பெரும் செல்வச் சீமான்களைத் திருமணம் முடித்திருக்க முடியும். ஆனால், தனக்குக் கீழ்ப் பணியாளராக வேலை செய்த நபி (ஸல்) அவர்களைத் திருமணம் முடித்து இவ்வுலகிற்கு அழியாத முன்மாதிரியை வழங்கினார்கள்.
ஒரு பெண் தனது வருங்காலக் கணவனை எவ்வாறு தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதற்கு கதீஜா (ரலி) அவர்கள் ஒரு சிறந்த முன்மாதிரி. ஒரு மனிதன் எவ்வளவு கெட்டவனாக இருப்பினும் அவனிடம் பணமிருந்தால் அவனுக்குப் பெண் கொடுக்கப் பெருங் கூட்டம் தயாராகிவிடும். அவனைக் கணவனாக அடைய எத்தனையோ பெண்கள் ஆசைப்பட்டுவிடுவார்கள். பணத்திற்காக எதையும் தாங்குவேனென்று பணக்காரனையே மணவாளனாகக் கொள்ள நினைப்பதுண்டு.
இந்நிலைக்கு முற்றிலும் மாறுபட்டு கதீஜா (ரலி) அவர்கள் திகழ்ந்தார்கள். பொன்னையும் பொருளையும் ஒதுக்கி வைத்துவிட்டு நீதி, நேர்மை நிறைந்த, உண்மையுரைக்கின்ற, உயர் பண்புகளுக்குச் சொந்தக்காரன் ஆகிய நபிகள் நாயகத்தை மணமுடித்தார்கள். இதனால், கதீஜா (ரலி)அவர்களின் வாழ்க்கை மகிழ்வோடு கழிந்தது.

0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !